Today rasi palan - 02.08.2026
இன்றைய ராசிப்பலன்
- 02.08.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
தினமும் NewsTamil
24/7-ல் இன்றைய ராசிப்பலன்கள்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
02.08.2026 ஆடி 17, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி இரவு
11.15 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 09.37 வரை
பின்பு உத்திரட்டாதி. சித்தயோகம் இரவு
09.37 வரை பின்பு அமிர்தயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது.-
இராகு காலம் - மாலை 04.30 -
06.00, எம கண்டம் - பகல் 12.00 -
01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 -
04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 -
11.00.
|
சனி (வ) |
|
செவ் |
புதன் |
|
சந்தி ராகு |
02.08.2026 |
சூரிய குரு |
|
|
|
கேது |
||
|
|
|
|
சுக்கி |
இன்றைய ராசிப்பலன் - 02.08.2026
மேஷம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களில் புதிய நபர்
அறிமுகம் ஏற்படும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் ஆடை
ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். பயணங்களால் வீண்
அலைச்சல் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்
கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு
செயலிலும் நிதானம் தேவை.
கடகம்
இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 03.27 மணி
வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் தாமதப் பலன்
உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்கவும். மதியத்திற்கு பிறகு நல்லது நடக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 03.27 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.
கன்னி
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும்.
துலாம்
இன்று நெருங்கியவர்களால் சிறு சிறு
மனசங்கடங்கள் ஏற்படலாம். வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக காணப்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக
அலைச்சல் ஏற்படும். வண்டி, வாகன
பராமரிப்பிற்காக சிறு
தொகை செலவிட நேரிடும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
தனுசு
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வீண்
விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும்.
கும்பம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
மீனம்
இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

No comments:
Post a Comment