Wednesday, December 4, 2019

Today rasi palan - 05.12.2019


Today rasi palan - 05.12.2019
இன்றைய ராசிப்பலன் -  05.12.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
05-12-2019, கார்த்திகை 19, வியாழக்கிழமை, நவமி திதி பின்இரவு 04.15 வரை பின்பு வளர்பிறை தசமி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 08.07 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.




ராகு
சந்தி
திருக்கணித கிரக நிலை
05.12.2019

 

சனி கேது குரு  சுக்கி
சூரிய
செவ் புதன்


இன்றைய ராசிப்பலன் -  05.12.2019
மேஷம்
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
கடகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 01.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். பணவரவு தாராளமாக கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும்.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 01.23 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.
கன்னி
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.
தனுசு
இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள்.
மகரம்
இன்று உங்களுக்கு உடல்நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்
இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.

Puthandu Raasi Palangal 2020 Mithunam Raasi | New Year Prediction 2020 G...

Puthandu Rasi Palangal 2020 Rishabam Rasi | New Year Prediction 2020 Tau...

Puthandu Raasi Palangal 2020 Mesham Raasi | New Year Prediction 2020 Ari...

Tuesday, December 3, 2019

Today rasi palan - 04.12.2019


Today rasi palan - 04.12.2019
இன்றைய ராசிப்பலன் -  04.12.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
04-12-2019, கார்த்திகை 18, புதன்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 01.44 வரை பின்பு வளர்பிறை நவமி. சதயம் நட்சத்திரம் மாலை 05.09 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் மாலை 05.09 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00




ராகு
சந்தி
திருக்கணித கிரக நிலை
04.12.2019

 

சனி கேது குரு  சுக்கி
சூரிய
செவ் புதன்


இன்றைய ராசிப்பலன் - 04.12.2019
மேஷம்
இன்று உங்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். மன நிம்மதி ஏற்படும்.
கடகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அடையலாம். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.
கன்னி
இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
தனுசு
இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மகரம்
இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிடைக்கும்.
கும்பம்
இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும்.