Sunday, August 2, 2020

Today rasi palan - 03.08.2020

Today rasi palan - 03.08.2020

இன்றைய ராசிப்பலன் -  03.08.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

03-08-2020, ஆடி 19, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி இரவு 09.28 வரை பின்பு தேய்பிறை பிரதமை. உத்திராடம் நட்சத்திரம் காலை 07.19 வரை பின்பு திருவோணம். மரணயோகம் காலை 07.19 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஆவணி அவிட்டம். பௌர்ணமி விரதம். ஹயக்ரீவர் வழிபாடு நல்லது.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

செவ்

 

 

சுக்கி ராகு

 

திருக்கணித கிரக நிலை

03.08.2020

சூரிய புதன்

சனி (வ)

சந்தி

 

குரு (வ)

கேது

 

 

 

 

இன்றைய ராசிப்பலன் -  03.08.2020

மேஷம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும்.                தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து சென்றால் இருக்கும்  பிரச்சினைகள் சற்று குறையும். வியாபார ரீதியான பேச்சு வார்த்தைகளில் அனுகூலப் பலன் கிட்டும்.

மிதுனம்

இன்று நீங்கள் சற்று குழப்பமுடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.

கடகம்

இன்று உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

துலாம்

இன்று நீங்கள் எந்த செயலை செய்தாலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அதில் வெற்றி அடையலாம். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை காணப்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அளிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் ரீதியாக இருந்த எதிர்ப்புகள் குறையும்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் தேவை. நட்பும் பகையாக மாறலாம். தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் விட்டு கொடுத்து செயல்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகரம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.

மீனம்

இன்று உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்க கூடிய நாளாக இந்த நாள் அமையும். மிக கடினமான காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளால் லாபகரமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.


Saturday, August 1, 2020

Vaara Rasi Palan (02-08-2020 to 08-08-2020) | Weekly Astrosign Predictio...

Today rasi palan - 02.08.2020

Today rasi palan - 02.08.2020

இன்றைய ராசிப்பலன் -  02.08.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

02-08-2020, ஆடி 18, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 09.29 வரை பின்பு பௌர்ணமி. பூராடம் நட்சத்திரம் காலை 06.52 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் காலை 06.52 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஆடி 18-ம் பெருக்கு. ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,

 

செவ்

 

 

சுக்கி ராகு

 

திருக்கணித கிரக நிலை

02.08.2020

சூரிய புதன்

சனி (வ) 

 

குரு (வ)

சந்தி கேது

 

 

 

 

இன்றைய ராசிப்பலன் - 02.08.2020

மேஷம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். சிலருக்கு ஆடம்பர பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.56 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நிதானமாக செயல்பட்டால் தொழிலில் உள்ள சிக்கல்கள் ஓரளவு குறையும்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.56 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் என்பதால் தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கடகம்

உங்களுக்கு இன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று நீங்கள் மனமகிழ்ச்சி அடைவீர்கள், ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைப்பதற்கான  வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

சிம்மம்

இன்று நீங்கள் சற்று பலவீனமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிறமொழியை சேர்ந்தவர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு நிம்மதியின்மையும் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி சிறு தடங்கலுக்கு பின்  கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை.

துலாம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மன அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எடுத்த காரியம் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்

இன்று உடல் நிலையில் சற்று மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

கும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும். சுப செலவுகள் உண்டாகும்.

மீனம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையும். தேவைகள்  பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.