Friday, December 4, 2020

Today rasi palan - 05.12.2020

 


Today rasi palan - 05.12.2020

இன்றைய ராசிப்பலன் -  05.12.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

05-12-2020, கார்த்திகை 20 , சனிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 08.10 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூசம் நட்சத்திரம் பகல் 02.27 வரை பின்பு ஆயில்யம். சித்தயோகம் பகல் 02.27 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

செவ்

 

ராகு

 

 

திருக்கணித கிரக நிலை

05.12.2020

சந்தி

 சனி குரு

 

 

சூரிய புதன் கேது

  சுக்கி

 

 

இன்றைய ராசிப்பலன் - 05.12.2020

மேஷம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் அலட்சியத்தால் எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

ரிஷபம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபர்களுடன் அறிமுகம் ஏற்படும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைபடும். பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

கடகம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் உதவியால் எளிதில் செய்து முடிக்க முடியும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவர். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் பெறுவீர்.

துலாம்

இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

மகரம்

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் சிறு கருத்து வேறுபாடு தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

Live chat December 4 | 233 th live | Q&A | Astrology | Dr.Murugubalamuru...

Thursday, December 3, 2020

Today rasi palan - 04.12.2020

 


Today rasi palan - 04.12.2020

இன்றைய ராசிப்பலன் -  04.12.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

04-12-2020, கார்த்திகை 19, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 08.04 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 01.38 வரை பின்பு பூசம். சித்தயோகம் பகல் 01.38 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

 

செவ்

 

ராகு

சந்தி

 

திருக்கணித கிரக நிலை

04.12.2020

 

 சனி குரு

 

 

சூரிய புதன் கேது

  சுக்கி

 

 

இன்றைய ராசிப்பலன் -  04.12.2020

மேஷம்

இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

ரிஷபம்

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பிள்ளைகளால் சுப செய்தி கிடைக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

கன்னி

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு அனு-கூலமான பலன் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

விருச்சிகம்

இன்று நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிலருக்கு வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். தேவைகள் நிறைவேறும்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகரம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு காலையிலேயே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும்.