Sunday, January 2, 2022

புத்தாண்டு பலன் - 2022 - மிதுனம்

 

புத்தாண்டு பலன் - 2022 - மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, சிறப்பான அறிவு ஆற்றலால் பலரை வழி நடத்தும் திறமை கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வரும் 2022-ஆம் ஆண்டில் ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி இவ்வாண்டில் 8-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அஷ்டமச்சனி நடைபெறுகிறது. இதனால் எந்தவொரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் நற்பலன்களை அடைய முடியும்.

சர்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு 6-ல் வரும் 12.04.2022 முடிய சஞ்சரிப்பதாலும் அதன் பின்பு ஏற்படும் சர்ப்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு பகவான் 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதாலும் எதையும் ஓரளவுக்கு சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

ஆண்டு கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் 13-04-2022 முடிய சஞ்சரிப்பதால் முதல் மூன்று மாதங்கள் உங்களின் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.

பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் வரும் 13-04-2022 முதல் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும் சாதமான அமைப்பு என்று கூற முடியாது. கொடுக்கல்- வாங்கலில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் தடைதாமதங்களுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சற்றே மந்தநிலையை சந்தித்தாலும் ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தி பெருகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைக்க தாமதநிலை ஏற்படும் காலம் என்பதால் உங்கள் பணியில் கவனமாக செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும்.

திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் சனி பகவான் அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பது சிறப்பான அமைப்பு என்பதால் இக்காலங்களில் நெருக்கடிகள் குறைந்து உங்களுக்கு பல்வேறு நற்பலன்கள் கிடைக்கும் யோகம் உண்டு.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. அதிக அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களால் உடல் நிலை சோர்வடையும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும் என்றாலும் எதையும் எதிர் கொண்டு ஏற்றத்தை அடைவீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் தேவையற்ற நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். எதிர்பாராத உதவிகளால் அனைத்து தேவைகளை பூர்த்தி செய்த கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஆண்டின் முற்பாதியில் நல்லது நடக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஏப்ரலுக்கு பிறகு சற்று தேக்கங்கள் ஏற்படலாம் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார ரீதியாக இருக்கும் நெருக்கடிகள் குறையும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்க்கொள்ளும் பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் போட்டிகள் சற்று அதிகமாக இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணிபுரிபவர்களுக்கு பணியில் வீண் பிரச்சினைகள், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விட முடியும். பதவி உயர்வுகளை ஆண்டின் தொடக்கத்தில் அடைய முடியும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் கைக்கு வரும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

பெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை தடைகளுக்குப் பின்பே காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேடும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய அதிகம் பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்களும் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். கால்நடைகளால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். சரியான நேரத்தில் வேலையாட்கள் கிடைக்காததால் எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட நேரிடும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியம் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.

படிப்பு

கல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை போன்றவை ஏற்பட்டாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியரிடம் நற்பெயரை பெறுவீர்கள்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் செவ்வாய் 6-ல் இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் மங்களகரமாக சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வது மூலம் அமைதியை நிலைநாட்ட முடியும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 03-01-2022 மாலை 06.52 மணி முதல் 05-01-2022 இரவு 07.53 மணி வரை மற்றும் 31-01-2022 அதிகாலை 05.46 மணி முதல் 02-02-2022 காலை 06.45 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையானது மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்ற விட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். உங்கள் ராசிக்கு செவ்வாய் 7-ல், சூரியன் 8-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைத்தாலும் வேலையாட்களை அனுசரித்து செல்வது பிரச்சனைகளை குறைக்க உதவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 27-02-2022 பகல் 02.22 மணி முதல் 01-03-2022 மாலை 04.31 மணி வரை.

மார்ச்.

ஜென்ம ராசிக்கு 6-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதும் சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஈடேற கூடிய வாய்ப்பும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் சாதகப்பலன் அமையும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 26-03-2022 இரவு 08.28 மணி முதல் 28-03-2022 இரவு 11.54 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசிக்கு இம்மாதத்தில் சூரியன், புதன் 10,11-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 23-04-2022 அதிகாலை 01.52 மணி முதல் 25-04-2022 அதிகாலை 05.30 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு ராகு 11-ல், மாத முற்பாதியில் சூரியன் 11-ல், மாத பிற்பாதியில் செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் வளமான பலன்களை பெறுவீர்கள். சனி அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். விஷ்ணுவை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 20-05-2022 காலை 08.45 மணி முதல் 22-05-2022 பகல் 11.12 மணி வரை.

ஜுன்.

உங்கள் ராசிக்கு 11-ல் ராகு, 10, 11-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். பணவரவுகள் ஒரளவு சிறப்பாக இருக்கும் என்றாலும் சூரியன் மாத முற்பாதியில் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். சிவனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 16-06-2022 மாலை 05.55 மணி முதல் 18-06-2022 மாலை 06.42 மணி வரை.

ஜுலை.

ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் குரு 10-ல் இருப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 14-07-2022 அதிகாலை 04.32 மணி முதல் 16-07-2022 அதிகாலை 04.15 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 11-ல் செவ்வாய், பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். குரு வக்ர கதியில் இருப்பதால் பணவரவுகள் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் மேலோங்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தடைப்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று நிம்மதி ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 10-08-2022 பகல் 02.58 மணி முதல் 12-08-2022 பகல் 02.50 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசியதிபதி புதன் 4-ல், ராகு 11-ல், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 06-09-2022 இரவு 11.37 மணி முதல் 09-09-2022 அதிகாலை 00.40 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 4-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் புதன், சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக அமையாது. உடல் சோர்வு, மந்தநிலை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நற்பலனைத் தரும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. வண்டி வாகனங்கள் மூலம் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 04-10-2022 காலை 06.01 மணி முதல் 06-10-2022 காலை 08.27 மணி வரை மற்றும் 31-10-2022 பகல் 11.23 மணி முதல் 02-11-2022 பகல் 02.15 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் புதன், சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் மிகவும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். கேது 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாவதால் நிமம்தி குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். உத்தியோகத்தில் உள்ள நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் பணி புரிய முடியும். மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 27-11-2022 மாலை 06.05 மணி முதல் 29-11-2022 இரவு 07.50 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு, 7-ல் புதன், சுக்கிரன், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப்பலனை பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 25-12-2022 அதிகாலை 03.30 மணி முதல் 27-12-2022 அதிகாலை 03.30 மணி வரை.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,          நிறம் - பச்சை, வெள்ளை,    கிழமை - புதன், வெள்ளி

கல் - மரகதம்          திசை - வடக்கு               தெய்வம் - விஷ்ணு

புத்தாண்டு பலன் - 2022 - ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

 

புத்தாண்டு பலன் - 2022 -  ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையே அதிகம் விரும்பும் குணம் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியும் தர்ம கர்மாதிபதியுமான சனி பகவான் இவ்வருடத்தில் 9-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டு ஏற்றங்களை பெறுவீர்கள். ஆண்டில் தொடக்கத்தில் ஆண்டு கோளான குரு பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் முதல் மூன்று மாதம் மட்டும் பண விஷயத்தில் சற்று கவனத்துடன் நீங்கள் செயல்படுவது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

            பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் வரும் 13-04-2022 முதல் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும், வரும் 12-04-2022-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் கேது உங்கள் ராசிக்கு 6-லும், ராகு 12-லும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் உங்கள் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும்  பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியினைப் பெற முடியும். தடைபட்டு கொண்டிருந்த திருமண சுப முயற்சிகளில் தடை விலகி நல்லது நடக்கும். சிறப்பான வரன்கள் தேடி வருவதால் நல்ல வாழ்க்கை அமையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி இடையே நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேறும்.

நவீன பொருட்களையும், அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகளும் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் இருந்த நெருக்கடிகள் விலகுவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடன் பிரச்சினைகளால் அவதிபடுபவர்களுக்கு கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதுடன் லாபம் பெருகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் நற்பலன்களை தரும் என்றாலும் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைப்பதுடன் உயர்பதவிகளும் கிட்டும். உடன் பணிபுரிவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும்.

 

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உணவு விஷயத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு நோயின் தாக்கம் குறைந்து படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை நீடிப்பதால் மன நிம்மதி ஏற்படும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் ஏப்ரலுக்கு பிறகு எளிதில் கை கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சொந்த பூமி மனை வாங்கக் கூடிய யோகங்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி அனுகூலப்பலன்களை அடைவீர்கள். உங்களுக்குள்ள கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். இழுபறி நிலையில் உள்ள வம்பு வழக்குகளில் தடையின்றி வெற்றிக் கிட்டும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் நம்பிக்கை அளிப்பதாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை தக்க நேரத்தில் காப்பாற்றி நற்பெயர் எடுப்பீர்கள்.

தொழில் வியாபாரிகளுக்கு

நல்ல வாய்ப்புகள் தேடி வருவதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். புதிய நவீன யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலங்கள் உண்டாகும். பயணங்களால் நற்பலன்களை அடைவீர்கள். போட்டி பொறாமைகளை சமாளிக்க கூடிய வாய்ப்பும், ஆற்றலும் உண்டாகும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் இருந்த நெருக்கடிகள் குறைந்து எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். செய்யும் பணிகளுக்கு தகுந்த பாராட்டுதல்களும் உயரதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப் பெறுவதால் மனநிம்மதியுடன் பணிபுரிவீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் மூலம் வேலைபளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் தடையின்றி நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு

உங்களது பெயர் புகழ் உயரும். சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினைப் பிடிக்க முடியும். வரவேண்டிய வாய்ப்புகள், மாண்புமிகுப் பதவிகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கட்சி பணிகளுக்காக செலவு செய்வதில் தொய்வு ஏற்படாது.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் பல மானிய உதவிகள் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்றப் பலன்களை அடைவதால் மனநிம்மதி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் நிறைவான திருப்தி கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி மனை வாங்கும் யோகம் ஏற்படும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபத்தினை அடைவீர்கள்.

பெண்களுக்கு

உடல் நிலை சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் செலவுகளை தாராளமாக செய்ய முடியும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

படிப்பு

மாணவ- மாணவிகள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைய முடியும். உடல் ரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நவீன விஷயங்களை கற்று கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டாகும். வெளியூர் மூலம் அனுகூலம் கிட்டும். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

உங்கள் ராசிக்கு 7, 8-ல் செவ்வாய், மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்யவும்-.

சந்திராஷ்டமம் - 01-01-2022 இரவு 07.17 மணி முதல் 03-01-2022 மாலை 06.52 மணி வரை மற்றும் 29-01-2022 அதிகாலை 05.07 மணி முதல் 31-01-2022 அதிகாலை 05.46 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், சுக்கிரன், 10-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் தான் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். முருகரை வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 25-02-2022 பகல் 12.07 மணி முதல் 27-02-2022 பகல் 02.22 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விட முடியும். தொழிலாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். பணியில் நிம்மதியான நிலை இருக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 24-03-2022 மாலை 05.29 மணி முதல் 26-03-2022 இரவு 08.28 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-லும், மாத முற்பாதியில் சூரியன் 11-லும் சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. வரும் 14-ஆம் தேதி முதல் குரு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் அமையும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப் பெறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறைந்து நிம்மதியுடன் பணி புரிய முடியும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 20-04-2022 இரவு 11.40 மணி முதல் 23-04-2022 அதிகாலை 01.52 மணி வரை.

மே.

உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய், 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப்பலனை அடைவீர்கள். சிவ வழிபாடு நல்லது.

சந்திராஷ்டமம் - 18-05-2022 காலை 08.09 மணி முதல் 20-05-2022 காலை 08.45 மணி வரை.

ஜுன்.

ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு நல்லது.

சந்திராஷ்டமம் - 14-06-2022 மாலை 06.32 மணி முதல் 16-06-2022 மாலை 05.55 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு 11-ல் குரு, மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 12-07-2022 அதிகாலை 05.15 மணி முதல் 14-07-2022 அதிகாலை 04.32 மணி வரை.

ஆகஸ்ட்.

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, இம்மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும் எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்ச¬ல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கால பைரவரை வழிபாடு செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் - 08-08-2022 பகல் 02.37 மணி முதல் 10-08-2022 பகல் 02.58 மணி வரை.

செப்டம்பர்.

ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 6-ல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் நிதானித்துச் செயல்படுவது நல்லது. அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 04-09-2022 இரவு 09.42 மணி முதல் 06-09-2022 இரவு 11.37 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் பணியில் கவனம் செலுத்துவது நல்லது. ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 02-10-2022 அதிகாலை 03.10 மணி முதல் 04-10-2022 காலை 06.01 மணி வரை மற்றும் 29-10-2022 காலை 09.05 மணி முதல் 31-10-2022 பகல் 11.23 மணி வரை.

நவம்பர்.

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், கேது, 11-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும். நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 25-11-2022 மாலை 05.20 மணி முதல் 27-11-2022 மாலை 06.05 மணி வரை.

டிசம்பர்.

ஜென்ம ராசியில் செவ்வாய், 7,8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைப்பது எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். கேது 6-ல் குரு 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 23-12-2022 அதிகாலை 04.02 மணி முதல் 25-12-2022 அதிகாலை 03.30 மணி வரை.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8          நிறம் - வெண்மை, நீலம்,       கிழமை - வெள்ளி, சனி

கல் -  வைரம்           திசை - தென்கிழக்கு,              தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி

புத்தாண்டு பலன் - 2022 - மேஷம்

 

புத்தாண்டு பலன் - 2022 - மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, எதிலும் தைரியம் துணிவுடன் செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை அடையும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2022-ஆம் ஆண்டு தன காரகன் குரு பகவான் 13-04-2022 வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களை ஆண்டின் தொடக்கத்தில் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன் தேடி வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

ஆண்டின் தொடக்கத்தில் 2, 8-ல் சஞ்சரிக்கும் ராகு, கேது வரும் 12-04-2022-ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தின் மூலம் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஆண்டு கோளான குரு பகவான் வரும் 13-04-2022 முதல் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் குரு மாற்றத்திற்கு பிறகு பணவரவுகளில் சற்றே நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை குறைத்து கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மன நிம்மதியை அளிக்கும். எந்தவொரு விஷயத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதே உத்தமம். உங்கள் ராசிக்கு இவ்வாண்டில் சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில்- உத்தியோக ரீதியாக கவனமான செயல்பட்டால் மட்டுமே அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். திருக்கணிதப்படி சனி பகவான் அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும்.

 

தேக ஆரோக்கியம்        

இந்த ஆண்டில் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி உங்கள் மன அமைதி குறையும். அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும். எது எப்படி இருந்தாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் உண்டாக கூடிய மருத்துவ செலவுகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடக் கூடிய வலிமையும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பண வரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நற்பலனை தரும்.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் முற்பாதியில் பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் ஒருசில அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது.  கொடுத்த கடன்கள் சற்று தாமதமாக தான் வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்புகள் கிடைக்கும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாக கூடும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று நிதானித்து செயல்படவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் ஆதாயங்கள் தாமதப்படும். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். தொழிலாளர்கள் வீண் சங்கடங்களை ஏற்படுத்தினாலும் அபிவிருத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும். எடுக்கும் பணிகளில் நிம்மதியாக செயல்பட முடியும் என்றாலும் உடன் இருப்பவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது நிதானம் தேவை. அனைவரையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் சிக்கல்களில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை தற்போதிய காலத்திற்கு தவறவிடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் அமேக ஆதரவுகளைப் பெற்று விடுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிப்பதோடு உடல் நிலையும் சோர்வடையும். பெயர், புகழை தக்க வைத்துக் கொள்ள சற்று பாடு பட வேண்டி இருந்தாலும் பதவிக்கு பங்கம் ஏற்படாது.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய உழைக்க வேண்டி வரும். எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கா விட்டாலும் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, பங்காளிகளிடையே விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானியத்தொகை சற்றே தாமதப்படும்.

பெண்களுக்கு

உடல் நிலையில் அதிக அக்கரை எடுத்துக் கொண்டால் மட்டுமே அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் அமையும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் சேமிக்கலாம்.

படிப்பு

கல்வியில் சற்று மந்த நிலை, ஞாபக மறதி போன்றவை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை தடையின்றி எடுத்து விடுவீர்கள். தேவையற்ற பொழுது போக்குகளையும், நட்பு வட்டாரங்களையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும்.

 

மாதப் பலன்கள்

ஜனவரி.

ஜென்ம ராசிக்கு 9, 10-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளாலும் பொருளாதார நிலை உயர்வடையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும்.

முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 30-12-2021 இரவு 07.07 மணி முதல் 01-01-2022 இரவு 07.17 மணி வரை மற்றும் 27-01-2022 அதிகாலை 03.12 மணி முதல் 29-01-2022 அதிகாலை 05.07 மணி வரை.

பிப்ரவரி.

உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி  கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து எதையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பெரிய மனிதர்கள் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியும். விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 23-02-2022 காலை 08.56 மணி முதல் 25-02-2022 பகல் 12.07 மணி வரை.

மார்ச்.

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், சுக்கிரன், 11-ல் குரு, மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். இருக்கும் இடத்தில் கௌரவமான நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்களை பெறமுடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அஷ்டலட்சுமி வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 22-03-2022 பகல் 02.33 மணி முதல் 24-03-2022 மாலை 05.29 மணி வரை.

ஏப்ரல்.

உங்கள் ராசியதிபதி செவ்வாய் இம்மாதம் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் அவற்றை சமாளித்து முன்னேறி விடுவீர்கள். சூரியன் 12 மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல், டென்ஷன்கள் குறையும். மற்றவர்களிடம் தேவையற்ற பேச்சை குறைப்பது சிறப்பு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் மாத முற்பாதியில் சாதகப் பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும் என்றாலும் வேலைபளு அதிகரிக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 18-04-2022 இரவு 10.07 மணி முதல் 20-04-2022 இரவு 11.40 மணி வரை.

மே.

ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது, பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. உங்கள் ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதும் சனி அதிசாரமாக 11-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. மகாவிஷ்ணுயை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் - 16-05-2022 காலை 07.53 மணி முதல் 18-05-2022 காலை 08.09 மணி வரை.

ஜுன்.

ஜென்ம ராசியில் சுக்கிரன், 11-ல் சனி, மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். குரு 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழிலில் தொழிலாளர்கள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். பைரவரை வழிபடவும்.

சந்திராஷ்டமம் - 12-06-2022 மாலை 06.33 மணி முதல் 14-06-2022 மாலை 06.32 மணி வரை.

ஜுலை.

உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் ஒருசில அனுகூலங்கள் ஏற்படும் என்றாலும் ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்து கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் போட்ட முதலீட்டை எடுத்து விடுவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் - 10-07-2022 அதிகாலை 04.20 மணி முதல் 12-07-2022 அதிகாலை 05.15 மணி வரை.

ஆகஸ்ட்.

ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். புதன் 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 06-08-2022 பகல் 12.06 மணி முதல் 08-08-2022 பகல் 02.37 மணி வரை.

செப்டம்பர்.

உங்கள் ராசிக்கு சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலனை தரும் அமைப்பாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உறவினர்களிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். திருமணம் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 02-09-2022 மாலை 05.55 மணி முதல் 04-09-2022 இரவு 09.42 மணி வரை மற்றும் 29-09-2022 இரவு 11.25 மணி முதல் 02-10-2022 அதிகாலை 03.10 மணி வரை.

அக்டோபர்.

உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பொருளாதாரநிலை ஓரளவு சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். சனீஸ்வர வழிபாடு நன்மையை அளிக்கும்.

சந்திராஷ்டமம் - 27-10-2022 காலை 06.30 மணி முதல் 29-10-2022 காலை 09.05 மணி வரை.

நவம்பர்.

ஜென்ம ராசியில் ராகு, 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும் காலம் என்பதால் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு கிடைப்பதால் வேலைபளு சற்றே குறையும்.

சிவ வழிபாடு செய்வது உத்தமம்-.

சந்திராஷ்டமம் - 23-11-2022 மாலை 04.03 மணி முதல் 25-11-2022 மாலை 05.20 மணி வரை.

டிசம்பர்.

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 8-ல் சூரியன், 12-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுக்கிரன் 9,10-ல் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் லாபம் குறையாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் - 21-12-2022 அதிகாலை 02.57 மணி முதல் 23-12-2022 அதிகாலை 04.02 மணி வரை.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,             நிறம் - ஆழ்சிவப்பு                        கிழமை - செவ்வாய்

கல் - பவளம்            திசை - தெற்கு                    தெய்வம் - முருகன்

Vaara Rasi Palan (02-01-2021 to 08-01-2022) | Weekly Astrosign Predictio...