Sunday, September 4, 2022

Today rasi palan - 05.09.2022

 


Today rasi palan - 05.09.2022

இன்றைய ராசிப்பலன் -  05.09.2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

05-09-2022, ஆவணி 20, திங்கட்கிழமை, நவமி திதி காலை 08.28 வரை பின்பு தசமி திதி பின்இரவு 05.55 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. மூலம் நட்சத்திரம் இரவு 08.05 வரை பின்பு பூராடம். சித்தயோகம் இரவு 08.05 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. கெஜலட்சுமி விரதம். ஆவணி மூலம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

குரு (வ)

ராகு

செவ்

 

 

 

05.09.2022

 

சனி (வ)

சூரிய சுக்கி

சந்தி

 

கேது

புதன்

 

இன்றைய ராசிப்பலன் - 05.09.2022

மேஷம்

இன்று வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சிக்கனமாக செயல்பட்டால் பணபிரச்சினை குறையும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு வீண் பிரச்சினைகள் தேடி வரும். செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் இழப்புகளை தவிர்க்கலாம்.

மிதுனம்

இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்களின் உதவியால் கடன்கள் ஓரளவு குறையும்.

கடகம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அதிகமாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். கடன்கள் குறையும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி

இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவிட நேரிடும். தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை அளிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்

இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கும்பம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.

Saturday, September 3, 2022

Today rasi palan - 04.09.2022

 


Today rasi palan - 04.09.2022

இன்றைய ராசிப்பலன் -  04.09.2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

04-09-2022, ஆவணி 19, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பகல் 10.40 வரை பின்பு வளர்பிறை நவமி. கேட்டை நட்சத்திரம் இரவு 09.43 வரை பின்பு மூலம். மரணயோகம் இரவு 09.43 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஜேஷ்டா விரதம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

குரு (வ)

ராகு

செவ்

 

 

 

04.09.2022

 

சனி (வ)

சூரிய சுக்கி

 

சந்தி

கேது

புதன்

 

இன்றைய ராசிப்பலன் -  04.09.2022

மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.

ரிஷபம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது உத்தமம். ஆடம்பர பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபார ரீதியான பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். அசையா சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.

கடகம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிக்க கடின உழைப்பு தேவை. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி உண்டாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.

துலாம்

இன்று உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் நடவடிக்கையால் சிறு மனவருத்தம் ஏற்படலாம். தொழில் வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டால் அனுகூலப் பலன் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு

இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் இருக்கும். வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். எதிலும் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மகரம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்பு அமையும்.

கும்பம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபார ரீதியான மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும்.