Saturday, May 4, 2024

Today rasi palan - 05.05.2024

 


Today rasi palan - 05.05.2024

இன்றைய ராசிப்பலன் -  05.05.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

05-05-2024, சித்திரை 22, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி மாலை 05.42 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 07.57 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

செவ் ராகு புதன்  சந்தி

 சூரிய சுக்கி

குரு

 

சனி

 

05.05.2024

 

 

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  05.05.2024

மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவி மகிழ்ச்சியை அளிக்கும்.

ரிஷபம்

இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். தடைப்பட்ட காரியங்கள் மீண்டும் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

மிதுனம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

கடகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

கன்னி

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நவீன பொருட்கள் வீடு வந்து சேரும், எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் பெறுவீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சுப செலவுகள் செய்ய நேரிடும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தனுசு

இன்று உறவினர்களால் வீண் செலவு ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும். வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக நடைபெறும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.

கும்பம்

இன்று நீங்கள் செய்யும் வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படும். வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.

மீனம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

Friday, May 3, 2024

Today rasi palan - 04.05.2024

 


Today rasi palan - 04.05.2024

இன்றைய ராசிப்பலன் -  04.05.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

04-05-2024, சித்திரை 21, சனிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 08.39 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 10.07 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் இரவு 10.07 வரை பின்பு சித்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. அக்னி நட்சத்திரம் ஆரம்பம் காலை 9.45. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

செவ் ராகு புதன் 

 சூரிய சுக்கி

குரு

 

சந்தி சனி

 

04.05.2024

 

 

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  04.05.2024

மேஷம்

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வருமானம் பெருகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு மாலை 04.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் சுபகாரியங்களையும் மாலை நேரத்தில் மேற்கொள்வது உத்தமம். இதுவரை இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குறையும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 04.38 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வரவேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். எந்த செயலையும் நிதானமாக செய்வது நல்லது.

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பிள்ளைகள் வழியில் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணபிரச்சினையை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தனுசு

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வருமானம் பெருகும்.

மகரம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் முழு ஈடுபாட்டுடன் செய்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். குடும்ப பிரச்சினைகளால் மன நிம்மதி குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.

கும்பம்

இன்று குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். ஆரோக்கியத்திற்காக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப ஆதாயங்கள் உண்டு.