Tuesday, July 2, 2024

Today rasi palan - 03.07.2024

 


Today rasi palan - 03.07.2024

இன்றைய ராசிப்பலன் -  03.07.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

03-07-2024, ஆனி 19, புதன்கிழமை, துவாதசி திதி காலை 07.11 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 04.07 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

 ராகு

செவ்

சந்தி குரு

சூரிய சுக்கி

சனி (வ)

 

03.07.2024

புதன்

 

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  03.07.2024

மேஷம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதங்கள் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீட்டில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மீக காரியங்கள் செய்வதில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்

இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். ஆரோக்கிய பிரச்சினை தீரும்.

சிம்மம்

இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

துலாம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். செய்யும் செயல்களில் கவனமுடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு திடீர் தன வரவு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் பைசலாகும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வருமானம் பெருகும்.

மகரம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

மீனம்

இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வியாபார ரீதியான பயணங்களினால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

Monday, July 1, 2024

Today rasi palan - 02.07.2024

 


Today rasi palan - 02.07.2024

இன்றைய ராசிப்பலன் -  02.07.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

02-07-2024, ஆனி 18, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி காலை 08.42 வரை பின்பு தேய்பிறை துவாதசி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 04.40 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பின்இரவு 04.40 வரை பின்பு அமிர்தயோகம். கிருத்திகை - ஏகாதசி விரதம். முருக - பெருமாள் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

 ராகு

சந்தி செவ்

குரு

சூரிய சுக்கி

சனி (வ)

 

02.07.2024

புதன்

 

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  02.07.2024

மேஷம்

இன்று வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரலாம். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப்பலன் உண்டாகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும்.         தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் புதிய நபர் அறிமுகத்தால் லாபகரமான பலன்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

சிம்மம்

இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளிவட்டார நட்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.54 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு நல்ல காரியத்திலும் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்பட்டால் பிரச்சினைகள் குறையும்.

துலாம்

இன்று நீங்கள் சற்று குழப்பமுடன் காணப்படுவீர்கள். பகல் 11.54 மணிக்கு மேல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.

தனுசு

இன்று உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும்.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை.

கும்பம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் வகையில் நிம்மதி குறைவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சலும் பணவிரையங்களும் உண்டாகும். விருப்பங்கள் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.