Thursday, July 4, 2024

Today rasi palan - 05.07.2024

 


Today rasi palan - 05.07.2024

இன்றைய ராசிப்பலன் -  05.07.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

05-07-2024, ஆனி 21, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 04.27 வரை பின்பு வளர்பிறை பிரதமை. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 04.06 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். அமாவாசை விரதம்.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

 

 ராகு

செவ்

குரு

சூரிய சந்தி சுக்கி

சனி (வ)

 

05.07.2024

புதன்

 

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  05.07.2024

மேஷம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். லாபம் பெருகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோக சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஓரளவு அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும்.

மிதுனம்

இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி கூடும்.

கடகம்

இன்று உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையால் மனநிம்மதி குறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்ய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

சிம்மம்

இன்று உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

கன்னி

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்

துலாம்

இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கி லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மகரம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சினைகள் குறையும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றி மன அமைதி குறையலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

மீனம்

இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பணப்பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் உதவியால் கடன்கள் குறையும்.

Wednesday, July 3, 2024

Today rasi palan - 04.07.2024

 


Today rasi palan - 04.07.2024

இன்றைய ராசிப்பலன் - 04.07.2024

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

04-07-2024, ஆனி 20, வியாழக்கிழமை, திரியோதசி திதி காலை 05.54 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 04.58 வரை பின்பு அமாவாசை. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 03.54 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

 ராகு

செவ்

சந்தி குரு

சூரிய சுக்கி

சனி (வ)

 

04.07.2024

புதன்

 

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  04.07.2024

மேஷம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.

ரிஷபம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

மிதுனம்

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் நிம்மதியை தரும்.

கடகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் கிட்டும்.

சிம்மம்

இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். வீட்டில் பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி

இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற சற்று யோசித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர்.

துலாம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். உங்கள் ராசிக்கு மாலை 03.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

விருச்சிகம்

இன்று நீங்கள் உடல் சோர்வுடனும் குழப்பத்துடனும் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு மாலை 03.58 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

தனுசு

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.

மகரம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.

கும்பம்

இன்று நீங்கள் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.

மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.