Monday, December 23, 2013

புத்தாண்டு பலன் & 2014- மகரம்

புத்தாண்டு பலன் & 2014- மகரம்


காணத்தவறாதீர், காணத்தவறாதீர், காணத்தவறாதீர்
01.01.2014 அன்று விஜய் டிவியில் 
காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை 
2014 ஆம் ஆண்டின் புத்தாண்டு பலன்கள் 
பற்றிய எனது சிறப்பு நிகழ்ச்சியை  காணத்தவறாதீர்


வாங்கி படிக்க தவறாதீர்கள் 

ஜனவரி 2014 ஓம்சரவணபவா இதழுடன்
காலம் எல்லாம் நோயின்றி 
வாழ ஜோதிட பாரிகாரங்கள் 
96 பக்கம் இலவச இனைப்பு
(மருத்துவ ஜோதிடம் பற்றிய முழுமையான புத்தகம் )

இப்படிக்கு
ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
 எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை&600 026

செல்  0091&7200163001.9383763001,9841771188



மகரம் ; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்கள்
     
ஆக்கும் சக்தியும், அழிவதை தடுக்கும் சக்தியும் கொண்ட மகர ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014&ஆம் ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு அவ்வளவு சாதகமானதாக இருக்காது. குரு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், கேது 4&லும், சனி,ராகு 10&லும் சஞ்சாரம் செய்வதாலும் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைந்து கொண்டால் கடன்களின்றி வாழ முடியும். வரும் 13.06.2014 &இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 7&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். குரும்பத்தில் தடைப்பட்ட திருமண சுப காரியங்களும் கை கூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுக்கல்&வாங்கலிருந்த நெருக்கடிகள் குறையும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். வரும் 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது பகவான் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் இடமாற்றங்கள் யாவும் சிறு சிறு தடைகளுக்குப் பின் கிட்டும். இந்த வருட இறுதியில் 16.12.2014 &இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் லாப ஸ்தானமான 11&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

தேக ஆரோக்கியம்
  உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களால் உடல் நிலை சோர்வடையும் குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளாலும் மனநிம்மதி குறையும் என்றாலும் எதையும் எதிர் கொண்டு ஏற்றத்தை அடைவீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை
  இந்த ஆண்டின் தொடக்கம் சற்று சோதனைகள் நிறைந்ததாகவே இருக்கும். உறவினர்களிடையே ஒற்றுமை குறைவு, கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடு, பொருளாதார நிலையில் இடையூறு போன்றவை உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் ஒரளவுக்கு முன்னேற்றத்தை அடைய முடியும். பொருளாதார முன்னேற்றங்களால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் கை கூடி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கொடுக்கல் வாங்கல்
  ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும்.

தொழில் வியாபாரிகளுக்கு
  தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்க்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களால் நற்பலன் ஏற்பட்டு அபிவிருத்தியை பெருக்க முடியும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
  பணிபுரிபவர்களுக்கு பணியில் வீண் பிரச்சனைகள், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் எதிர் பார்த்த பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிட்டும். சிலருக்கு எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். நிலுவையிலிருந்த சம்பள பாக்கிகளும் கைக்கு கிடைக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலை பளுவை குறைத்துக் கொள்ள முடியும்.

அரசியல்வாதிகளுக்கு
  பெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருக்காது. எடுக்கும் முயற்சிகளிலும் இடையூறுகளை சந்திக்க நேரிடும். ஆண்டின் பிற்பாதியில் ஒரளவுக்கு நற்பலன்களை எதிர் பார்க்க முடியும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்களும் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும். ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் லாபங்களையும் முன்னேற்றங்களையும் பெற முடியும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும்.

பெண்களுக்கு
  உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக செயல்பட முடியும். ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் பிற்பாதியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை ஏற்படுத்துவதால் அமையும்.

படிப்பு

கல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை போன்றவை ஏற்பட்டாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில எதிர் பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் அசிரியரிடம் நற்பெயரை பெறுவீர்கள்.

ஸ்பெகுலேஷன்

  ஆண்டின் தொடக்கத்தில் ஷேர் லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பிற்பாதியில் நற்பலனை அடைய முடியும்.

ஜனவரி

  ஈனை குணமும், உதாரண குணமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலிருப்பதும், 9&இல் செவ்வாய் சஞ்சரிப்பம் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அமைப்பாகும். பண வரவுகள் தேவைக் கேற்ற படியிருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ள தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடும். பூமி மனை போன்றவற்றாலும் சிறு சிறு லாபங்கள் அமையும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். இம்மாதம் சனிக்கு பரிகாரம் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 18.01.2014 மாலை 06.48 மணி முதல் 21.01.2014 காலை 04.56 மணி வரை.

பிப்ரவரி

  நண்பர்களிடமும், விரோதிகளிடமும் சமமாக பழகும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். 6&இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதால் பண வரவுகள் சரளமாக இருக்கும். 9&ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் செல்வம் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுப காரியங்கள் கை கூடும் அமைப்பு, கடன்கள் குறையக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்றே கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலையாட்களில் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை அளிக்கும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 15.02.2014 அதிகாலை 01.59 மணி முதல் 17.02.2014 பகல் 12.18 மணி வரை

மார்ச்

  எதையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியன் 10&இல் செவ்வாய் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் சரளமாகவே இருக்கும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமும், சுப காரிய முயற்சிகளில் அனுகூலமும், கணவன்&மனைவியிடையே ஒற்றுமையும் நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறு சிறு போட்டிகள் பொறாமைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். உத்தியோகத்திலும் கவனமுடன் செயல்படுவது நற்பலனை தரும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம் 14.03.2014 காலை 09.05 மணி முதல் 16.03.2014 மாலை 07.34 மணி வரை.

ஏப்ரல்

  எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் மனம் தளராத உங்களுக்கு, மாத முற்பாதி வரை சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் ஒரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெற முடியும். பணவரகளில் நெருக்கடிகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்திலிருந்தப் போட்டிகள் சற்று குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 10.04.2014 மாலை 04.09 மணி முதல் 13.04.2014 அதிகாலை 02.52 மணி வரை.

மே

  உழைப்பையே தெய்வமாக கருதும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4&இல் சூரியனும், 6&இல் குருவும் சஞ்சரிப்பதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள், பிரச்சனைகள் உண்டாகும். குடும்பத்திலும் நிம்மதி குறைவுகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. செவ்வாய் 9&இல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் திறமைக்கேற்ற உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். இம்மாதம் சிவபெருமானை வழிபாடு செய்வது நற்பலனை தரும். 

சந்திராஷ்டமம் 07.05.2014 இரவு 11.20 மணி முதல் 10.05.2014 பகல் 10.13 மணி வரை.

ஜீன்
    பிடிவாத குணம் இருந்தாலும் வீண் பிடிவாதம் இல்லாத உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9&இல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும். இம்மாதம் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 7&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பது சிறப்பாகும். இதனால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். சுப காரியங்கள் கை கூடும். வரும் 21 ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 3&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதன் மூலம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் உண்டாகும். துர்கை அம்மனை வழிபடுவது நற்பலனை தரும்.

சந்திராஷ்டமம் 04.06.2014 காலை 06.38 மணி முதல் 06.06.2014 மாலை 05.40 மணி வரை.

ஜீலை  
  எடுத்துக் கொண்ட காரியத்தில் கண்ணாக செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் சூரியனும் 7&இல் குருவும் சஞ்சரிப்பதால் பணம் பல வழிகளில் தேடி வரும். எந்த வித எதிர்ப்புகளையும் எதிர் கொண்டு வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் விலகும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கடன்கள் குறையும். மங்களகரமான சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சனி ப்ரீதி ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 01.07.2014 மதியம் 02.02 மணி முதல் 04.07.2014 அதிகாலை 01.13 மணி வரை.மற்றும் 28.07.2014 இரவு 09.24 மணி முதல் 31.07.2014 காலை 08.40 மணி வரை.-

ஆகஸ்ட்
  தேவையற்ற கோபமோ, மனசஞ்சலமோ கொள்ளாத குணம் கொண்ட உங்களுக்கு 3&இல் கேதுவும், 7&இல் குருவும், 10&இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துக் கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். அபிவிருத்தியும் பெருகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். சிலருக்கு பூமி மனை வண்டி வாகனம் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். செல்வம் செல்வாக்கு உயரும். சேமிப்பும் பெருகும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 25.08.2014 அதிகாலை 04. 37 மணி முதல் 27.08.2014 மதியம் 03.59 மணி வரை.

செப்டம்பர்
    எவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டாலும் எளிதில் சமாளிக்க கூடிய  ஆற்றல் கொண்ட உங்களுக்கு 7&ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும் என்றாலும் 8&இல் சூரியன் சஞ்சரிப்பதால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்தவ செலவுகள் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்ற படியிருக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களும் உயர்வடைய முடியும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 21.09.2014 பகல் 11.41 மணி முதல் 23.09.2014 இரவு 11.10 மணி வரை.

அக்டோபர்

  எதிலும் சிறிது பெரிது என வித்தியாசம் பாராமல் செயல்படும் உங்களுக்கு 3&இல் கேதுவும், 7&இல் குருவும், 11&இல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கலும் திருப்தியளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகும். கூட்டாளிகளாலும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். கடன்களும் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கும் உயர்வுகள் ஏற்படும். ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 18.10.2014 மாலை 06.39 முதல் 21.10.2014 காலை 06.20 மணி வரை.

நவம்பர்

  வாக்கு சாதுர்யம் படைத்த உங்களுக்கு 9&இல் சூரியனும்,11&இல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாகவும் லாபங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். பயணங்களால் லாபங்கள் கிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். இம்மாதம் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 15.11.2014 அதிகாலை 01.58 மணி முதல் 17.11.2014 மதியம் 01.25 மணி வரை.

டிசம்பர்
    தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு 7&இல் குருவும், 11&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. மாதபிற்பாதியில் 12&இல் சுக்கிரனும், சூரியனும் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் வியாபார ரீதியாகவும் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்றாலும் இம்மாத பிற்பாதியில் ஏற்படக் கூடிய சனி மாற்றத்தால் சனி பகவான் லாப ஸ்தானமான 11&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்களும் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சியும், சுபிட்சமும் ஏற்படும். அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 12.12.2014 காலை 09.11 மணி முதல்14.12.3014 இரவு 08.51 மணி வரை.

உத்திராடம் 2,3,4ம் பாதங்கள்,

  சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு நல்ல மனவலிமையும், வைராக்கியமும் இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவும். தேவையற்ற வம்பு வழக்குகளும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் எதிலும் ஒரளவுக்கு முன்னேற்றத்தை அடைய முடியும். பண விஷயத்திலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கை கூடும். பொன்னும் பொருளும் சேரும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

திருவோணம்

  சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு எல்லோருக்கும் உதவ கூடிய பரந்த மனப்பான்மை இருக்கும். இந்த வருடத்தின் தொடக்கம் உங்களுக்கு அனுகூலமானப் பலனைத் தராது என்பதே உண்மை என்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. தேவையற்ற பயணங்களையும் தவிர்க்கவும். ஆண்டின் பிற்பாதியில் குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் விலகி கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபங்களும் உண்டாகும். கடன்கள் யாவும் குறையும்.

அவிட்டம் 1,2ம் பாதங்கள்

  செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள நீங்கள் உங்கள் பேச்சாற்றலால் எதிரிகளை ஓட ஒட விரட்டுவீர்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். எதிர்பார்த்து காத்திருக்கும் உதவிகளும் தாமதமடையும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்களும் கை கூடும். பொருளாதார மேம்பாடுகளால் செல்வம் செல்வாக்கும் உயரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலப் பலனை அடைய முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 8,5,6,17,14,15 
கிழமை & சனி புதன் 
திசை & மேற்கு
நிறம் & நீலம், பச்சை
கல் & நீலக்கல்
தெய்வம் &ஐயப்பன்

பரிகாரம்
  மகர ராசியில் பிறந்துள்ள  உங்களுக்கு வரும் 13.06.2014 வரை குரு பகவான் 6&ஆம்  வீட்டில் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழக்கிழமை தோறும் குருப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது. சனிபகவான் ஜீவன ஸ்தானமான 10&இல் சஞ்சரிப்பதால் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும் வரும் 21.06.2014 வரை கேது 4லும் ராகு 10&லும் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, துர்கை அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்க்கொள்வது நற்பலனை உண்டாக்கும்.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal address  
From  14  January 2014 My office address as follows

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188

https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078

Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

புத்தாண்டு பலன் 2014 தனுசு


புத்தாண்டு பலன்  2014 தனுசு

தனுசு; மூலம், பூராடம், உத்திராடம் & 1ம் பாதம்
     
கள்ளம் கபடமின்றி உண்மையை மட்டுமே பேசும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 & ஆம் ஆண்டு உங்களின் பெயர், செல்வம், செல்வாக்கு புகழ் போன்ற அனைத்தையும் உயர்த்தும் ஆண்டாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7இல் குருபகவான் ஆண்டின் முற்பாதி வரை சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சனியும் ராகுவும் 11இல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்திலும் நல்ல லாபங்கள் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் லாபம் உண்டாகும். கொடுக்கல்-&வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களையும், உயர் பதவிகளையும் பெறுவார்கள். வரும் 13.06.2014 இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு 8ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் பண விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 21.06.2014இல் ஏற்படவுள்ள சாப் கிரக மாற்றத்தால் கேது 4ஆம் வீட்டிலும் ராகு 10ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கவுள்ளனர். இதனால் சிறு சிறு விரயங்கள் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலங்களும் உண்டு. உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இவ்வருட இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் ஏழரைசனியில் விரய சனி தொடங்கவுள்ளது.

தேக ஆரோக்கியம்
  
உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும் எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றிகளைப் பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்திலுள்ளவர்களும் மருத்துவ செலவுகளின்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

  கணவன்&மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதி நவீன பொருட்களின் சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை போன்ற யாவும் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும் எதிர் பாராத உதவிகளும் கிட்டும்.

கொடுக்கல்&வாங்கல்

  ஆண்டின் முற்பாதியில் பணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்&வாங்கலும் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும் என்றாலும் பிற்பாதியில் பணம் கொடுக்கல்&வாங்கல் விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமான பலன் கிட்டும்.

தொழில் வியாபாரிகளுக்கு

  தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு

    பணியில் கௌரமான நிலையிருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆண்டின் பிற்பாதியில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

  உங்களின் பெயர் புகழ் உயரக் கூடிய காலமாக இந்த ஆண்டு இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மறைமுக வருவாய்களும் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆண்டின் பிற்பாதியில் மேடை பேச்சுகளில் கவனமுடனிருப்பது மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

விவசாயிகளுக்கு

  பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் உழைப்பிற்கேற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம், பூமி மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்களும் நடைபெறும். ஆண்டின் பிற்பாதியில் பண விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

பெண்களுக்கு

  உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடையே இருந்த பகைமை விலகும். பிறந்த இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். திருமணமாகதவர்களுக்கு மணமாகும். அழகான புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். சேமிப்பும் பெருகும்.

படிப்பு

  கல்வியில் முதன்மை பெற்று விளங்கி பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். சிலருக்கு வெளியூர், வெளி நாடுகளுக்கு சென்று பணி புரிய கூடிய வாய்ப்பும் உண்டாகும். நல்ல நண்பர்களின் தொடர்புகளால் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

ஸ்பெகுலேஷன்

  லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் ஆண்டின் முற்பாதியில் நல்ல லாபம் கிடைக்கும். பிற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது.

ஜனவரி

  எதையும் எளிதில் கிரகிக்கும் தன்மை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உடல் நிலையில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் 10இல் செவ்வாயும், 11இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் வலிமையும் உண்டாகும். 7இல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலிருப்பதால் பணம் கொடுக்கல்&வாங்கல் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபத்தினை அடைய முடியும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 16.01.2014 காலை 07.13 மணி முதல் 18.01.2014 மாலை 06.48 மணி வரை.

பிப்ரவரி

  ஒழுக்கமும், நெறி தவறாத பண்பும் கொண்ட உங்களுக்கு 7இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரித்தாலும் 10இல் செவ்வாயும் 11இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களும் பணியில் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 12.02.2014 மதியம் 02.22 மணிமுதல் 15.02.2014அதிகாலை 01.59 மணிவரை

மார்ச்
  முன் கோபியாக இருந்தாலும், கள்ளம் கபடமில்லாத குணம் கொண்ட உங்களுக்கு 3&இல் சூரியனும், 11இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றயிருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் அனுகூலப் பலனை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலிருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்கள் யாவும் வசூலாகும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 11.03.2014 இரவு 09.25 மணி முதல் 14.03.2014 காலை 09.05 மணி வரை.

ஏப்ரல்

  அவசர குணமிருந்தாலும் எதையும், திருத்தமாக செய்து முடிக்கும் குணம் கொண்ட உங்களுக்கு, சம சப்தம ஸ்தானமான 7&இல் குரு சஞ்சரிப்பதால் திருமண சுப காரிய முயற்சிகளிலிருந்த தடைகள் விலகும். கணவன்&மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களால் இருந்த பிரச்சனைகள் விலகும். 10&இல் செவ்வாயும் 11&இல் சனி ராகுவும் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு  பணியில் உயர்வுகள் கிடைக்கப் பெறுவதோடு, திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிட்டும். வெளியூர் வெளி நாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். தொழில் வியாபாரமும் அபிவிருத்தி அடையும். கடன்கள் யாவும் குறையும். சனி ப்ரீதி, ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது

சந்திராஷ்டமம் 08.04.2014 அதிகாலை 03.19 மணி முதல் 10.04.2014 மாலை 04.09 மணி வரை

மே
  எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7இல் குருவும், 10இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்களும் திறம்பட செயல்படும் ஆற்றலும் உண்டாகும். கௌரவம் புகழ் யாவும் உயரும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். உறவினர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியான அளிப்பதாக அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 05.05.2014 மதியம் 11.37 மணி முதல் 07.05.2014 இரவு 11.20 மணி வரை.

ஜீன்

  அறிவாற்றலும், தீர்க்க தரிசனமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6இல் சூரியனும் 7இல் குருவும் சஞ்சரிப்பதால் பொருளாதார மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, எந்த வித  எதிர்ப்புகளையும் எதிர் கொள்ளும் வல்லமை உண்டாகும். வரும் 13ம் தேதி ஏற்படவுள்ள குருமாற்றத்தால் குரு 8ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் பணம் கொடுக்கல்&வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் செயல் படுவது நல்லது. வரும் 21&ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 4&லும் ராகு 10&லும் சஞ்சரிக்கவிருப்பதால் ஒரளவுக்கு சுமாரான பலனைப் பெற முடியும். அசையா சொத்துக்களால் வீண் விரயம் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 01.06.2014 இரவு 06.56 மணிமுதல் 04.06.2014 காலை 06.38 மணி வரை.மற்றும் 29.06.2014அதிகாலை 02.20 மணிமுதல் 01.07.2014 மதியம் 02.02 மணி வரை

ஜீலை
  தவறு செய்பவர்களை, மன்னிக்கும் சுபாவம் கொண்டே உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7&இல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். மாத பிற்பாதியில் 11 லுள்ள சனி வக்ர நிவர்த்தியடைவதாலும், செவ்வாய் 11&இல் சஞ்சரிக்க விருப்பதாலும் தொட்டதெல்லாம் துலங்கும். குரு 8&இல் சஞ்சரித்தாலும் பணவரவுகள் தேவைக்கேற்ற படியிருக்கும். கணவன்&மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறைவு உண்டாகும். தொழில் வியாபாரம் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் வர வேண்டிய லாபம் வரும் சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 26.07.2014 காலை 09.42 மணி முதல் 28.07.2014 இரவு 09.24 மணி வரை.

ஆகஸ்ட்
  தாம் கற்றணுர்ந்ததை பிறருக்கு போதிக்கும் சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8&இல் சூரியன் குரு சஞ்சரித்தாலும் 11&இல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது, கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 22.08.2014 மாலை 05.02 மணி முதல் 25.08.2014 அதிகாலை 04.37 மணி வரை.

செப்டம்பர்
  உதாரண குணமும், தர்ம சிந்தனையும் கொண்ட உங்களுக்கு, பாக்கிய ஸ்தானத்தில் சூரியனும் 10&இல் புதன் ராகுவும், 11&இல் செவ்வாய் சனியும் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மேன்மையும் உண்டாகும். தொழில் வியாபாரரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் லாபங்கள் சிறப்பாக அமையும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்பதியுடன் செயல்பட முடியும். வேலை பளுவும் குறையும் விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 18.09.2014 இரவு 12.12 மணி முதல் 21.09.2014 பகல் 11.41 மணி வரை.

அக்டோபர்
    சுய நலம் பாராமல் எதையும் துணிந்து செய்யக் கூடிய உங்களுக்கு ஜீவன ஸ்தானமான 10&இல் சூரியன் சுக்கிரனும், 11&இல் புதன் சனியும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. 12இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அசையா சொத்துக்களால் வீண் அலைச்சல் விரயம் போன்றவை ஏற்படும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடைபெறும். போட்டி பொறாமைகளை சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கப் பெறா விட்டாலும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் 16.10.2014 காலை 07.19 மணி முதல் 18.10.2014 மாலை 06.39 மணி வரை.

நவம்பர்
  எல்லா இடங்களிலும் வாதிக்கும் திறமை  கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாயும், 8&இல் குருவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. லாப ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் சனி போன்ற கிரகங்கள் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். எந்த இடையூறுகளையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் முன்னேற்றங்கள் உண்டாகும். சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 12.11.2014 மதியம் 02.40 மணி முதல் 15.11.2014 அதிகாலை 01.58 மணி வரை.

டிசம்பர்

  வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் செவ்வாய், 8&இல் குரு, 12&இல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்&மனைவியிடையே  வீண் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாகும். 10&இல் ராகுவும், 11&இல் சனியும் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விட முடியும். இம்மாத பிற்பாதியில் ஏற்படக் கூடிய சனி மாற்றத்தினால் சனி பகவான் விரய ஸ்தானமான  12இல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரை சனி தொடங்கவிருப்பது குறிப்பிடதக்கது. எனவே எதிலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. சனி ப்ரீதி, ஆஞ்ச நேயரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் 09.12.2014 இரவு 10.02 மணி முதல் 12.12.2014 காலை 09.11 மணி வரை.

மூலம்
  கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் இயற்கையிலேயே இருக்கும். இந்த வருடம் முழுவதும் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பண வரவுகள் சரளமாக இருக்கும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபத்தினை பெற முடியும். திருமண சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும்.

பூராடம்
  சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்துள்ள உங்களுக்கு கனிவான பார்வையால் அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆற்றல் உண்டாகும். இந்த வருடம் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. கொடுக்கல்&வாங்கலிலும் லாபம் கிட்டும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர் பார்த்த லாபங்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களால் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெற முடியும். ஆண்டின் பிற்பாதியில் பணவிஷயத்தில் கவனமுடன் செயல்படுவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

உத்திராடம் 1&ம் பாதம்
  சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எப்பொழுதும் நண்பர்களின் கூட்டம் அதிகமிருக்கும். இந்த ஆண்டு உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொருளாதார நிலையும் மிக சிறப்பாக இருக்கும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்களும் கைக்கூடும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவதால் மருத்துவ செலவுகள் குறையும்.

அதிர்ஷடம் அளிப்பவை,

எண் & 1,2,3,9,10,11,12 
கிழமை & வியாழன், திங்கள்
திசை & வடகிழக்கு
நிறம் & மஞ்சள், பச்சை
கல் & புஷ்ட ராகம்
தெய்வம் & தட்சிணா மூர்த்தி

பரிகாரம்
    தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு வரும் 13.06.2014 முதல் குருபகவான் 8&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது.


Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  
From  14  January 2014 My office address as follows
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078

Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078

புத்தாண்டு பலன் 2014 விருச்சிகம்

புத்தாண்டு பலன்  2014 விருச்சிகம்

விருச்சிகம் ; விசாகம் &4ம் பாதம், அனுஷம், கேட்டை

  நகைச்சுவையுணர்வும், சிறந்த பேச்சாற்றலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டு முழுவதும் உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி தொடருவதால் தேவையற்ற விரயங்கள், எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குருவும் ஆண்டின் முற்பாதி வரை அஷ்டம ஸ்தானமான 8&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படும். உற்றார் உறவினர்களாலும், குடும்பத்திலுள்ளவர்களாலும் மன சஞ்சலங்கள் ஏற்படும். கேது பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். வரும் 13.06.2014 முதல் குரு பகவான் பாக்கியஸ்தானமான 9&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். வரும் 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 11&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது சாதகமான அமைப்பே ஆகும். இதனால் தொழில் வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் குறைந்து லாபங்கள் பெருகும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். இந்த ஆண்டின் இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க விருப்பதால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்கவுள்ளது.

தேக ஆரோக்கியம்
  உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அஜீரண கோளாறு போன்றவை உண்டாகினாலும், அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல் படும் அளவிற்கு ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் வீண் விரயங்கள், மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.

குடும்பம் பொருளாதாரநிலை
  இந்த ஆண்டின் முற்பாதிவரை தேவையற்ற பிரச்சனைகள், கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், எல்லாம் இருந்தும் அனுபவிக்கத் தடைகள் போன்றவை ஏற்படும். ஆண்டின் பிற்பாதியில் திருமண சுப காரிய முயற்சிகளிலிருந்த தடைகள் விலகி சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் அசையும் அசையா சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்
  ஆண்டின் முற்பாதி வரை பணவரவுகளில் இடையூறுகள், நெருக்கடிகள் ஏற்படும். தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் தாராள தனவரவுகளைக் கொடுக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு
  இந்த ஆண்டின் முற்பாதி வரை தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல் படுவது நல்லது. பிற்பாதியில் ஒரளவுக்கு முன்னேற்றத் பெறுவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் சிறப்பான அபிவிருத்தியும் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
  பணியில் தேவையற்ற குழப்பங்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் இவற்றால் மன உளைச்சல்கள் போன்றவை ஏற்பட்டாலும் ஆண்டின் பிற்பாதியில் எல்லா பிரச்சனைகளும் படிப்படியாக விலகும். எதிர் பார்க்கும் ஊதிய உயர்வுகள், இடமாற்றங்கள் போன்றவை கிடைக்கப் பெறும். புதிய வேலைத் தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

அரசியல்வாதிகளுக்கு
  ஆண்டின் முற்பாதியில் கட்சிப் பணிகளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டிய  சூழ்நிலைகள் ஏற்பட்டு வீண் விரயங்கள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார நிலையில் மேம்பாடுகள் உண்டாகி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எதிர்பாராத உயர் பதவிகளும் கிடைக்கும். பெயர், புகழ் உயரும்.

விவசாயிகளுக்கு
  பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் நீர் வரத்து குறையும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது லாபத்தினை பெறுவீர்கள். புதிய பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

பெண்களுக்கு
  உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். ஆண்டின் பிற்பாதியில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். பொருளாதாரம் உயரும்.

படிப்பு
  கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டிய காலமிது. மந்த நிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைய முடியும். பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற நட்புக்களால் வீண் பழிச் சொற்களும், அவமானபடக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

ஸ்பெகுலேஷன்
  ஆண்டின் முற்பாதியில் எந்தவொரு காரியத்திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பிற்பாதியில் ஒரளவுக்கு அனுகூலங்களை அடைந்து விட முடியும்.

ஜனவரி
நகைக்சுவை உணர்வுடன் பேசக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, ஏழரை சனி நடைபெறுவது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். 8&இல் சஞ்சரிக்கும் குருவும் வக்ரகதியிலிருப்பதால் பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபங்களைப் பெற முடியும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். பயணங்களில் நிதானம் தேவை. சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

சந்திராஷ்டமம் 13.01.2014 இரவு 07.47 மணி முதல் 16.01.2014 காலை 07.13 மணி வரை.

பிப்ரவரி
  வாக்கு வாதங்களில் வாதிக்கும் திறமைக் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியனும், 4&இல் புதனும், 6&இல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து சற்றே விடுபடுவீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிலும் திறமையுடன் செயல்பட்டு லாபத்தினைப் பெற முடியும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 10.02.2014 அதிகாலை 03.04 மணி முதல் 12.02.2014 மதியம் 02.22 மணி வரை.

மார்ச்
  பிடிவாத குணமும், முரட்டுத்தனமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4&இல் சூரியனும், 8&இல் குருவும், 12&இல் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் இம்மாதம் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தபட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தை குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று தேக்க நிலை ஏற்பட்டாலும் மந்த நிலை உண்டாகாது. முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 09.03.2014 காலை 10.13 மணி முதல்  11.03.2014 இரவு 09.25 மணி வரை.

ஏப்ரல்
  பார்ப்பதற்கு வெகுளிப் போல தோற்றமளிக்கும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் கேதுவும் 12&இல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலும் இருப்பதால் எந்த வித எதிர்ப்புகளையும் எதிர் கொள்ள கூடிய அளவிற்கு பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில்  நிம்மதியுடன் செயல் படமுடியும். கொடுக்கல்&வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபத்தினை பெற்று விட முடியும். சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 05.04.2014 மாலை 05.25 மணி முதல் 08.04.2014 அதிகாலை 4.28 மணி வரை.

மே
  விளையாட்டுத் துறைகளில் அதிக ஆர்வம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் கேதுவும், சூரியனும்  சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகி எல்லா வகையிலும் லாபம் பெரும். குடும்பத்திலும் நிம்மதியான நிலையிருக்கும். சொந்த பூமி, மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் சற்றே குறையும். கொடுக்கல்&வாங்கலும் லாபமளிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்தை அடைய முடியும். கடன்களும் குறையும். குரு ப்ரீதி, தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 02.05.2014 இரவு 12.42 மணி முதல் 05.05.2014 மதியம் 11.37 மணி வரை.
மற்றும் 30.05.2014 காலை 08.07 மணி முதல் 01.06.2014 இரவு 06.56 மணி வரை.

ஜீன்
  எடுக்கும் காரியங்களை திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் கேதுவும், 11&இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதாலும், 12&இல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலிருப்பதாலும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். இம்மாதம் 13&ஆம் தேதி முதல் குரு 9&இல்  சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும் குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். 21&ஆம் தேதி முதல் ராகு 11&இல் சஞ்சரிக்க விருப்பதால் கடன்கள் குறைந்து சேமிப்பு பெருகும். சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 26.06.2014 மதியம் 03.43 மணி முதல் 29.06.2014 அதிகாலை 02.20 மணி வரை.

ஜீலை
  எளிதில் யாராலும் ஏமாற்ற இயலாத துணிவு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8&இல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குரு 9&இல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். மாத முற்பாதி வரை செவ்வாய் 11&இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபம் பெருகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும். இம்மாதம் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 23.07.2014 இரவு 11.21 மணி முதல் 26.07.2014 காலை 09.42 மணி வரை.

ஆகஸ்ட்
  குறும்புத் தனமும், விஷமத் தனமும் அதிகம் கொண்ட உங்களுக்கு ஏழரை சனி நடைபெற்றாலும், 9&இல் குருவும், 11&இல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வித பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபத்தினை அள்ளித் தரும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 20.08.2014 காலை 06.48 மணி முதல் 22.08.2014 மதியம் 05.02 மணி வரை.

செப்டம்பர்
  பிறரது குற்றங் குறைகளை எளிதில் அம்பலப் படுத்தக் கூடிய தைரியம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9&இல் குருவும் 11&இல் புதன் ராகுவும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களிலிருந்த வம்பு வழக்குகளில் அனுகூலப் பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்திலும் சுப காரியங்கள் கை கூடும். எதிர்பாராத சிறு சிறு விரயங்கள் ஏற்பட்டாலும் சேமிப்பு குறையாது. உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இட மாற்றத்தை பெற முடியும். இம்மாதம் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 16.09.2014 மதியம் 02.14 மணி முதல் 18.09.2014 இரவு 12.12 மணி வரை.

அக்டோபர்
  தன்னை விடப் பெரியவர்களிடம் அதிக மரியாதையுடன் பழகும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரித்தாலும் 9&இல் குருவும், 11&இல் சூரியன், சுக்கிரன் ராகுவும் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். தொழில் வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பொன் பொருள் சேரும். அசையா சொத்து யோகங்களும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 13.10.2014 இரவு 09.38 மணி முதல் 16.10.2014 காலை 07.19 மணி வரை.

நவம்பர்
  நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். பண வரவுகள் தாராளமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகளும் திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம் 10.11.2014 அதிகாலை 05.08 மணி முதல் 12.11.2014 மதியம் 02.40 மணி வரை.

டிசம்பர்
  தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் செவ்வாயும், 9&இல் குருவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், லாபமும் உண்டாகும் என்றாலும் ஜென்ம ராசியிலேயே சூரியன் சஞ்சரிப்பதாலும் வரும் 16&ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனியும் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்ய விருப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். கடன்களும் குறையும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். எதிலம் சிந்தித்து செயல் படுவது நல்லது. சனி ப்ரீதி ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 07.12.2014 மதியம் 12.46 மணி முதல் 09.12.2014 இரவு 10.02 மணி வரை.

விசாகம் &4ம் பாதம்,
  குரு பகவானின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள நீங்கள் நியாய அநியாயங்களை தெளிவாக எடுத்துரைப்பீர்கள். இந்த வருடத்தில் உங்களுக்கு தேவையற்ற சோதனைகள், வேதனைகள் உண்டாகி மனசஞ்சலங்களை ஏற்படுத்தும் என்றாலும் இவ்வருடத்தின் பிற்பாதியில் ஒரளவுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை அடைவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும், பொருட்தேக்கம்  உண்டாகாது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வை அடையலாம்.

அனுஷம்
    சனியின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஏதாவது மனக் குறைகள் இருந்து கொண்டே இருக்கும். இந்த வருடமும் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும் என்றாலும் எதிர் பாராத உதவிகள் கிடைக்கும். ஆண்டின் பிற்பாதியில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலும் சரளமாக நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்தாலும் சிறு சிறு அலைச்சல்களையும் எதிர் கொள்ள நேரிடும். பயணங்களில் சற்று கவனமுடன் இருப்பது வேகத்தை குறைப்பது நல்லது.

கேட்டை
  புதனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தான தர்மங்கள் செய்யும் குணம் இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் எந்தவொரு கரியத்திலும் சிந்தித்து செயல் படுவதே நல்லது. ஆண்டின் முற்பாதி வரை சில சங்கடங்களை சிந்தித்தாலும், பிற்பாதியில் நல்ல பல முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும்.  குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் &1,2,3,9,10,11
நிறம் &  ஆழ் சிவப்பு, மஞ்சள்
கிழமை & செவ்வாய், வியாழன்
திசை & தெற்கு
கல் & பவளம்
தெய்வம்& முருகன்

பரிகாரம்
  விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் சனிக்கிழமை தோறும் எள் எண்ணெயில் தீப மேற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது. 13.06.2014 வரை குரு 8&இல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. 21.06.2014 முதல் கேது 5&இல் சஞ்சரிக்கவிருப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.


Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078

Name ; R.Balamurugan
Bank name  - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - Vadapalani
Chennai - 600026.INDIA.
MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078