Today rasi palan - 30.03.2026
இன்றைய ராசிப்பலன்
- 30.03.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
30-03-2026, பங்குனி 16, திங்கட்கிழமை, துவாதசி திதி
காலை 07.10 வரை
பின்பு வளர்பிறை திரியோதசி. மகம்
நட்சத்திரம் பகல்
02.48 வரை பின்பு பூரம். மரணயோகம் பகல் 02.48 வரை
பின்பு சித்தயோகம். சோம பிரதோஷ விரதம். மஹாவீர் ஜெயந்தி. சிவ
வழிபாடு நல்லது.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம்
01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு
10.00-11.00.
|
சூரிய சனி |
சுக்கி |
|
குரு |
|
புதன் செவ் ராகு |
30.03.2026 |
|
|
|
|
சந்தி கேது |
||
|
|
|
|
|
இன்றைய ராசிப்பலன் - 30.03.2026
மேஷம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை.
அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெற
முடியும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும்.
ரிஷபம்
இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். மாணவர்களின் படிப்பில் சற்று மந்தநிலை காணப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். உடல்
ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நவீன
பொருட்களை வாங்குவீர்கள்.
கடகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளின் உடல்
ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை
ஏற்படும். தொழில் ரீதியாக சில
தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.
சிம்மம்
இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்துடன் வெளி இடங்களுக்கு செல்ல நேரிடும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்துக்களால் மனநிம்மதி குறையும். ஆரோக்கிய ரீதியாக சிறு
தொகை செலவிட நேரிடும். வராத
கடன்கள் எதிர்பாராத வகையில் வசூலாகும். வியாபார சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
துலாம்
இன்று உங்கள் மனதிற்கு புது
தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சக
ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் வசூலாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் சுபநிகழ்வுகள் நடைபெறும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும்.
தனுசு
இன்று உடல்
ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தொழில் ரீதியான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும். கடன்கள் குறையும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை
தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். சுப
காரிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
கும்பம்
இன்று உங்களுக்கு காலையிலேயே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு
வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

No comments:
Post a Comment