Wednesday, April 29, 2026

Today rasi palan - 29.04.2026

 


Today rasi palan -
29.04.2026

இன்றைய ராசிப்பலன் -  29.04.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-04-2026, சித்திரை 16, புதன்கிழமை, திரியோதசி திதி இரவு 07.52 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 12.16 வரை பின்பு சித்திரை. மரணயோகம் இரவு 12.16 வரை பின்பு சித்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

சனி செவ் புதன்

சூரிய

சுக்கி

குரு

ராகு

 

29.04.2026

 

 

கேது

 

 

  

சந்தி

 

இன்றைய ராசிப்பலன் -  29.04.2026

மேஷம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

இன்று நீங்கள் எதிர்பாராத வகையில் வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். பொருளாதார நெருக்கடிகளால் மனநிம்மதி குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் அறிமுகம் கிடைக்கும். வேலைபளு சற்று குறையும்.

கடகம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.  உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வெளி நபர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். தொழில் வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.

விருச்சிகம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

தனுசு

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி தேடி வரும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை கூடும். வியாபாரத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பொறுப்புடனும், சிக்கனத்துடனும் செயல்பட்டால் பண நெருக்கடிகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.

மீனம்

இன்று குடும்பத்தில் தாராள தனவரவும், சுபிட்சமும் உண்டாகும். பிள்ளைகள் கல்வி விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும்.

No comments: