Today rasi palan - 24.11.2026
இன்றைய ராசிப்பலன்
- 24.11.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
24-11-2026, கார்த்திகை 08, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி இரவு
08.23 வரை பின்பு தேய்பிறை பிரதமை. கிருத்திகை இரவு
11.25 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் இரவு 11.25 வரை
பின்பு அமிர்தயோகம். கிருத்திகை - பௌர்ணமி விரதம். கார்த்திகை தீபம், அண்ணாமலை தீபம் சிவ
- முருக வழிபாடு நல்லது. தனிய
நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வாஸ்து நாள்
பகல் 11.09 மணி
முதல் 11.45 மணி
வரை.
இராகு காலம் மதியம்
03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம்
12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
|
சனி (வ) |
சந்தி |
|
|
|
ராகு |
24.11.2026 |
|
|
|
|
செவ் குரு கேது |
||
|
|
சூரிய |
புதன் சுக்கி |
|
இன்றைய ராசிப்பலன் - 24.11.2026
மேஷம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவ
உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புடன் செய்து முடிப்பீர்கள். வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எண்ணியது நிறைவேறும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நிலை
சற்று ஏற்ற
இறக்கமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமத நிலை
உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களின் ஒத்துழைப்புடன் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும்.
கடகம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் எளிதில் நிறைவெறும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை
தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் நல்ல
முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்
இன்று நீங்கள் சோர்வுடனும் மன
உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த
செயலிலும் பொறுமையை கடை பிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர சகோதரிகளால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பழைய
கடன்கள் குறையும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்ற நிலை
ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.
மகரம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த
நிலை காணப்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். மனைவி வழி
உறவினர்களால் உதவிகள் கிடைக்கலாம்.
கும்பம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.
மீனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள்
வராது இருந்த கடன்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

No comments:
Post a Comment