Thursday, January 22, 2015
Tuesday, January 20, 2015
தாரதோஷம்

காணத்தவறாதீர்
விஜய் டிவியில்
திங்கள் முதல் வெள்ளி வரை
காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல்
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
சென்னை புத்தக கண்காட்சியில் தற்போது நான்
எழுதிய
திருமண தோஷம் போக்கும் பாிகாரங்கள்
மற்றும்
காலமெல்லாம் நோயின்றி வாழ
ஜோதிட மருத்துவம்
ஆகிய இரு புத்தகங்களும் புதிதாக
வெளிவந்துள்ளது
தாரதோஷம்
ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வது தான் நம்முடைய இந்திய கலாச்சாரமாகும். மேல நாடுகளே நம்மைப் பார்த்து ஆச்சர்யப்படும் விஷயம் நம்முடைய கட்டுப்பாடான தாம்பத்ய வாழ்க்கைதான். பெண்கள் அனைவரும் சீதையாகவும், ஆண்கள் அனைவரும் ராமனாகவும் வாழத்தான் ஆசைபடுவார்கள். ஆனால், அந்த ஆசையானது எல்லோருக்குமே பூர்த்தியாகி விடுவதில்லை. சில சமய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை நிலை தடுமாறச் செய்து விடுகிறது.
மனரீதியான பிரச்சினைகளும். உடல் ரீதியான தேவைகளும் வாழ்க்கைத் துணையைவிட மற்றவர்களிடம் நிறைவேறும் போது மனமும் அவரைநாடி செல்கிறது. வீட்டு சாப்பாடு சரியில்லாத போது நல்ல உணவு விடுதியை தேடிச் செல்வதைப் போல, இது சரியா தவறா என்ற வாதத்தை முன் வைத்தால் நம்முடைய கலாச்சாரப்படி தவறு தான். ஆனால் இது மேலோட்டமான கருத்து ஆகும். வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பவருக்குதான் தெரியும் அதிலுள்ள பிரச்சனைகள்.
இப்படி தடம் மாறி வாழ்க்கை செல்வதற்கும் ஜோதிட ரீதியாக உள்ள கிரக அமைப்புகளே காரணமாக இருக்கின்றன. தடம் மாறி வாழுபவர்களை இந்த சமூகம் தூற்றத்தான் செய்யும் என்றாலும், ஒவ்வொருவரிடம் என் ஜாதக நிலை இவ்வாறு உள்ளது என விளக்கம் கூற முடியாது. எவ்வளவுதான் நல்லவராக வாழ மனம் நினைத்தாலும் கிரக நிலையின் ஆதிக்கங்களால் கண்டிப்பாக ஏதாவது ஒருவகையில் தவற தான் செய்வார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 7 ஆம் வீடான களத்திரஸ்தானமும், களத்திரகாரகன் சுக்கிரனும் மற்ற கிரகச் சேர்க்கைப் பெற்றிருக்கின்ற போதும், 7 ஆம் வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருக்கும் போதும் களத்திரதோஷம் எனும் தாரதோஷம் ஏற்படுகிறது. பொதுவாக 7 ஆம் வீட்டில் எத்தனை கிரகங்கள் இருக்கின்றதோ, அது போல சுக்கிரனுடன் எத்தனை கிரகங்கள் சேர்க்கைப்பெற்றுள்ளதோ, 7 ஆம் அதிபதி எத்தனை கிரகங்களின் சேர்க்கை பெற்றுள்ளரோ அத்தனை நபர்கள் அவர்களின் வாழ்கையில் குறிக்கிடுவாகள். அதனால் தான் நிம்மதியான வாழ்க்கை அமைவதற்கு 7 ஆம் வீடு சுத்தமாகவும், 7 ஆம் அதிபதி கிரக சேர்க்கைகளின்றியும் அமைய வேண்டும் என்று கூறுவார்கள்.
நவக்கிரகங்களில் சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது போன்ற பாவகிரகங்களில் ஏதாவது இரு கிரகங்கள் 7 இல் அமைந்தாலோ, 7 ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலோ, சுக்கிரனுடன் இணைந்திருந்தாலோ, ஒன்றுக்கும் மேற்பட்ட தாரம் அமையும். இதில் சூரியன், செவ்வாய் ஒரு ஜாதகத்தில் எந்த வீட்டில் கூடியிருந்தாலும் இருதாரம் அமையும் என்ற பழமொழியும் உண்டு. குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டில் 2 க்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் அமைகின்ற போதும், ஜென்ம இராசி என வர்ணிக்கப்படக் கூடிய சந்திரனுக்கு 7 ஆம் வீட்டில் இரண்டிற்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் இருந்தாலும், சந்திரனுக்கு 7 ஆம் அதிபதி 2க்கும் மேற்பட்ட பாவக்கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், களத்திரகாரகன் என வர்ணிக்கப்படக் கூடிய சுக்கிரனுக்கு 7 ஆம் வீட்டில் இரண்டிற்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும் களத்திரதோஷம் உண்டாகி மண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ஒருவரின் ஜாதகத்தில் 7 ஆம் வீட்டில் எத்தனை கிரகங்கள் பலம் பெறுகிறதோ, 7 ஆம் அதிபதியுடன் எத்தனை கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றிருக்கிறதோ அத்தனை தாரங்கள் கண்டிப்பாக அமையும். அதிலும் தாரதோஷம் உண்டான நபர்களுக்கு இளம் வயதில் திருமணம் நடைபெற்றால் மற்றொரு தாரமோ அல்லது வேறு ஒரு நபருடன் தொடர்போ உண்டாகும்.
ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகங்களால் தோஷங்கள் ஏற்பட்டிருக்கிறதோ, அந்த கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெறுகின்ற போது எவ்வளவு தான் குடும்ப வாழ்க்கையானது மகிழ்ச்சிகர மானதாகவும், நிம்மதியாகவும் இருந்தாலும் வேறு ஏதாவது ஒரு நபரின் தொடர்பு ஏற்பட்டு குடும்ப வாழ்வில் நிம்மதி குறையும்.
Contact
For your consultation
Please send Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of
MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) &
5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
Name ; Murugubalamurugan
Bank name - Bank of Baroda
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
Monday, January 19, 2015
Friday, January 16, 2015
ஏக தாரத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்பு
சென்னை புத்தக கண்காட்சியில் தற்போது நான்
எழுதிய
திருமண தோஷம் போக்கும் பாிகாரங்கள்
மற்றும்
காலமெல்லாம் நோயின்றி வாழ
ஜோதிட மருத்துவம்
ஆகிய இரு புத்தகங்களும் புதிதாக
வெளிவந்துள்ளது
மாபெரும் வெற்றி
10 லட்சத்தை கடந்த வலை பக்கம்.
சோதிட செய்திகளை மட்டும் தரும் எனது வலை பக்கத்திற்கு வருகை தந்த 10 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு எனது மன மார்ந்த நன்றி.
2011 ஜீலையில் தொடங்கி தற்போது 700 பதிவுகளை கொண்ட எனது வலை பக்கத்திற்கு எனது உழைப்பினை மதித்து தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 10 லட்சத்திற்கும் மேலான அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. அள்ளி தருகிறேன் மேலும் சோதிட செய்திகளை, வாரி பருகுங்கள் சலிக்காமல்.
அன்புடன்
முருகுபாலமுருகன்

காணத்தவறாதீர்,
விஜய் டிவியில்
திங்கள் முதல் வெள்ளி வரை
காலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல்
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
ஏக தாரத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்பு
கணவன் மனைவியிடையே உள்ள தொடர்பானது உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போல இணை பிரியாததாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. ஒருவருக்கு அமையக் கூடிய வாழ்க்கைத் துணையானது மனமொத்து வாழ்வதாக அமைந்து விட்டால், அந்த வாழ்வில் இன்பத்திற்கு எல்லையே இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் எந்த பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் அன்போடு வாழும் குடும்ப சூழல் மிக சிறப்பானதாக இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுடன் பிறன் மனைவி நோக்காது வாழும் தம்பதிகள் தங்கள் குடும்பத்தையும், தம்மை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.
ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் வந்து மென்ன வேரென நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன் என மனைவியிடம் மட்டுமே தம்முடைய மனக்குறைகளை பகிர்ந்து கொள்ளும் ராமர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள், துன்பங்கள், மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்றாலும், அதில் இருவருக்குமே பங்கு உள்ளது என்பதை உணர்ந்து ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ராமன் சீதையைப் போல வாழம் ஜோடிகள் இந்தியாவில் ஏராளம் ஏராளம். இப்படி ஒருவருக்கொரவர் ஒருடல் ஈருயிராய் வாழ்வதென்பது அறிதல்லவா. இப்படி சீதாராமனாய் வாழக்கூடிய யோகம் எத்தனைப் பேருக்க உள்ளது என ஜோதிட ரீதியாக பார்ப்போமா?
ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 7 ஆம் பாவம் களத்திரஸ்தானமாகும். 2 ஆம் வீடு குடும்பஸ்தானமாகும். களத்திரகாரகன் சுக்கிரன் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் 7 ஆம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருந்து, 7 ஆம் அதிபதி கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் தனித்து அமையப் பெற்று, சுபர் பார்வை மற்றும் சுபர் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருந்தாலும், அப்படியே 7 ஆம் வீட்டில் கிரகங்கள் அமையப் பெற்றாலும் ஒரே ஒரு கிரகமாக இருப்பதும் அதிலும் குறிப்பாக சுபகிரகமாக இருப்பதும் நல்லது.
ஒருவரது வாழ்க்கையில் களத்திரகாரகனாக சுக்கிரன் மிக முக்கிய பங்கு வகிப்பதால் அவர் கிரகச்சேர்க்கையின்றி அமைவதும், சுபர் பார்வையுடன், சுபர் நட்சத்திரத்தில் அமைந்திருப்பதும் நல்லது. குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டில் அதிக கிரகச் சேர்க்கையில்லாமல் இருப்பதும் மிகவும் நல்லது. குருவின் பார்வையானது 7 ஆம் வீட்டிற்கோ, 7 ஆம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ இருப்பதும் மிகவும் சிறப்பு. மேற்கூறியவாறு ஒருவரது ஜாதகத்தில் கிரக அமைப்புகள் அமையுமேயானால் ஏக தாரம் மட்டுமே உண்டாகி வாழ்க்கையில் எந்த வித சலனங்களும் இன்றி வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் இருக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் 7&ஆமதிபதி எவ்வளவு கிரகளுடன் கூடியிருந்தாலும் 7 ஆம் ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தால் ஒரே திருமணம் தான் நடைபெறும்.
பொதுவாக 7 ஆம் அதிபதியும் சுக்கிரனும் கிரகச் சேர்க்கை இல்லாமல் இருப்பது ஏக தாரத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், அக்கிரகங்களுக்கு இருபுறமும் பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும் பாவ கிரகங்களின் பார்வை பட்டாலும் வாழ்வில் சில பாதிப்புகள் உண்டாகிறது. இப்படி அமையப் பெற்ற பாவகிரகங்களின் தசாபுக்தி நடைபெறுகின்ற போது ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகளை உண்டாவதில்லை.
சுக்கிரன் களத்திரகாரகன் என்றாலும், செவ்வாயும் திருமண வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். செவ்வாயும் சூரியனும் கூடி ஒருவரின் ஜாதகத்தில் எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் இரு தாரம் உண்டாக கூடிய வாய்ப்புகள் உண்டு. அதனால் செவ்வாய் சூரியன் சேர்க்கை இல்லாமல் இருப்பது நல்லது.
ஜென்ம லக்னம் எப்படி ஒருவரின் ஜாதகத்தில் எவ்வளவு முக்கியமோ, சந்திரா லக்னமும் அவ்வளவு முக்கியமாகும். சந்திரனுக்கு 7 இல் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் சந்திரனுக்கு 7 ஆம் அதிபதி கிரகச் சேர்க்கையின்றி இருப்பதும் நல்லது.
இப்படிப்பட்ட கிரகச் சேர்க்கைகள் ஆண், பெண் ஜாதகங்களில் அமைந்திருக்குமேயானால் வாழ்க்கையில் எந்த பிரச்சினைகளும் இன்றி பெண்கள் சீதையைப் போலவும், ஆண்கள் ராமனைப் போலவும் வாழ முடியும்.
Contact
For your consultation
Please send Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of
MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) &
5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
Name ; Murugubalamurugan
Bank name - Bank of Baroda
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
Subscribe to:
Posts (Atom)


