Tuesday, September 4, 2018

Today rasi palan - 05.09.2018



Today rasi palan - 05.09.2018

இன்றைய ராசிப்பலன் -  05.09.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
05-09-2018, ஆவணி 20, புதன்கிழமை, தசமி திதி பகல் 03.01 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. திருவாதிரை நட்சத்திரம் மாலை 05.14 வரை பின்பு புனர்பூசம் நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00




சந்தி

திருக்கணித கிரக நிலை
05.09.2018
ராகு
கேது  செவ்
சூரிய புதன்
சனி (வ)

குரு  சுக்கி


இன்றைய ராசிப்பலன் -  05.09.2018
மேஷம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அதிகமாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். கடன்கள் குறையும்.
ரிஷபம்
இன்று வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சனைகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பணபிரச்சனை குறையும். எதிலும் நிதானம் தேவை.
மிதுனம்
இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.
கடகம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம்
இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன்கள் தீரும்.
கன்னி
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று உங்களுக்கு உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வீண் பிரச்சினைகள் தேடி வரும். செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
தனுசு
இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வருமானம் பெருகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மீனம்
இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவிட நேரிடும். தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை அளிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.


Monday, September 3, 2018

Today rasi palan - 04.09.2018


Today rasi palan - 04.09.2018
இன்றைய ராசிப்பலன் -  04.09.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
04-09-2018, ஆவணி 19, செவ்வாய்க்கிழமை, நவமி திதி மாலை 05.23 வரை பின்பு தேய்பிறை தசமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 06.53 வரை பின்பு திருவாதிரை. சித்தயோகம் மாலை 06.53 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.



சந்தி


திருக்கணித கிரக நிலை
04.09.2018
ராகு
கேது  செவ்
சூரிய புதன்
சனி (வ)

குரு  சுக்கி


இன்றைய ராசிப்பலன் - 04.09.2018
மேஷம்
இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இனிய நிகழ்வுகள் நடைபெறும். வரவேண்டிய தொகை வந்து சேரும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
கன்னி
இன்று உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
துலாம்
இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படக்கூடும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாது இருப்பது நல்லது. வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.
தனுசு
இன்று இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மகரம்
இன்று நீங்கள் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
கும்பம்
இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.