Monday, August 10, 2026

Today rasi palan - 10.08.2026

 


Today rasi palan -
10.08.2026

இன்றைய ராசிப்பலன் -  10.08.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் பாலஜோதிடம் வார இதழ்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Online consultation at - 0091  7200163001. 9383763001,

Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb

 

இன்றைய  பஞ்சாங்கம்

10-08-2026, ஆடி 25, திங்கட்கிழமை, துவாதசி திதி காலை 08.01 வரை பின்பு திரியோதசி பின்இரவு 04.54 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 12.27 வரை பின்பு புனர்பூசம். சித்தயோகம் பகல் 12.27 வரை பின்பு அமிர்தயோகம். ஸோம பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

சனி (வ)

 

 

 

செவ் சந்தி

ராகு

 

10.08.2026

சூரிய புதன் குரு

 

கேது

 

 

  

சுக்கி

 

இன்றைய ராசிப்பலன் -  10.08.2026

 

மேஷம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும்.

 

ரிஷபம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

 

மிதுனம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்ய கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணிச்சுமை குறையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் தொடர்பு கிடைக்கும்.

 

கடகம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிட்டும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

 

சிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பொருளாதார பிரச்சினைகள் நீங்கும்.

 

கன்னி

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

 

துலாம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் நண்பர்களால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிட்டும்.

 

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

தனுசு

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் இனிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் பெருகும்.

 

மகரம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பொருளாதார தேவைகள் நிறைவேறும்.

 

கும்பம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

 

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும்.    குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்தழைப்பும் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

No comments: