Tuesday, October 2, 2018

Today rasi palan - 03.10.2018






Today rasi palan - 03.10.2018
இன்றைய ராசிப்பலன் -  03.10.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
03-10-2018, புரட்டாசி 17, புதன்கிழமை, நவமி திதி இரவு 12.10 வரை பின்பு தேய்பிறை தசமி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 10.24 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00




சந்தி

திருக்கணித கிரக நிலை
03.10.2018
ராகு
கேது  செவ்

சனி

குரு  சுக்கி
சூரிய புதன்

இன்றைய ராசிப்பலன் -  03.10.2018
மேஷம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும்.
ரிஷபம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தொழில் ரீதியான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும். கடன்கள் குறையும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.
கன்னி
இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் வெளிவட்டார நட்பு கிட்டும்.
துலாம்
இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடைகள் ஏற்படக் கூடும். உத்தியோகத்தில் சக நண்பர்களுடன் வீண் மன ஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.
தனுசு
இன்று குடும்பத்தில் தனவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் சம்பந்தமாக போட்ட திட்டங்களில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்திலும் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
மீனம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற யோசித்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். எதிலும் நிதானம் தேவை.

Monday, October 1, 2018

Today rasi palan - 02.10.2018




Today rasi palan - 02.10.2018
இன்றைய ராசிப்பலன் -  02.10.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
02-10-2018, புரட்டாசி 16, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 02.17 வரை பின்பு தேய்பிறை நவமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.45 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் இரவு 11.45 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கால பைரவருக்கு உகந்த நாள். மஹாலட்சுமி விரதம் முடிவு. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். 
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.




சந்தி

திருக்கணித கிரக நிலை
02.10.2018
ராகு
கேது  செவ்

சனி

குரு  சுக்கி
சூரிய புதன்

இன்றைய ராசிப்பலன் -  02.10.2018
மேஷம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனைத் தரும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். வியாபார ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
கடகம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
சிம்மம்
இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும்.
கன்னி
இன்று உங்களின் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன்- மனைவியிடையே மன ஸ்தாபங்கள் மறைந்து சந்தோஷம் கூடும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வருமானம் பெருகும். சுபகாரிய முயற்சிகளில் -னுகூலம் கிட்டும்.
துலாம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படக்கூடும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
விருச்சிகம்
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.  வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
தனுசு
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.
மகரம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்
இன்று பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனகசப்பு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சனை குறையும்.
மீனம்
இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் கிட்டும்.