Monday, April 13, 2015

நட்சத்திர பொருத்தம்

14.04.2015 அன்று விஜய் டிவியில்

காலை 05.45 மணிக்கு

மன்மத ஆண்டு - தமிழ் புத்தாண்டு பலன்கள்


பற்றிய எனது சிறப்பு

நிகழ்ச்சியை காணத்தவறாதீர்

நட்சத்திர பொருத்தம் 

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அதைப் பருவத்தில் பயிர் செய்வது மட்டுமின்றி பாதுகாப்பதும் அவசியம். ஆண், பெண் இருவரையும் சேர்த்து வைக்கக்கூடிய திருமண உறவானது நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் அமைவது நல்லதல்லவா. மணவாழ்க்கையில் எல்லா வகையான சிறப்பான அம்சங்கள் அமைந்தால்தான் மனமகிழ்ச்சியுடன் வாழமுடியும். இல்லை என்றால் மகிழ்ச்சி இருக்காது. எப்படி டாக்டரிடமும் வக்கீலிடமும் பொய் சொல்லக்கூடாதோ, அது போல வரன் தேடும் விஷயத்தில் ஜோதிடரிடமும் பொய் சொல்லக்கூடாது. ஒருவரது பிறந்த தேதி, மாதம், வருடம் மற்றும் சரியான பிறந்த நேரம், ஊர் ஆகியவற்றைத் தெளிவாக எந்த தவறுதலும் இன்றி ஜோதிடரிடம் கூறினால் மட்டுமே,  அவரால் தெளிவான ஜனன ஜாதகத்தை கணிக்க முடியும். அப்படி கணிக்கப்படும் ஜாதகமே அவரின் கடைசி காலம் வரை உள்ள பலா பலன்களை எடுத்துரைக்கும் ஜாதகத்தைக் கொண்டுதான் திருமணத்தை நிச்சயிக்க வேண்டும். ஜோதிட ரீதியாக ஆண் பெண் இருவருக்கும் வரன் தேடும் படலம் தொடங்கியதும் முதலில் நாம் பார்ப்பது நட்சத்திரம் பொருந்துகிறதா என்பதுதான். ஆனால் நட்சத்திர பொருத்தம் பார்ப்பது மட்டுமின்றி ஜாதக ரீதியாகவும் பொருத்தங்கள் உள்ளதா என தெளிவாக ஆராய வேண்டும். பெயர் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது சுமாரான அமைப்பே ஆகும். 
முதலில் நட்சத்திரப் பொருத்தங்களான 10 வகையான பொருத்தங்களை பார்க்க வேண்டும். பிறகு ஜாதக ரீதியாக உள்ள சாதக, பாதகப் பலன்களைப் பற்றி ஆராய வேண்டும். இப்படி பொருத்தங்கள் பார்த்து செய்யும் திருமணங்கள் நீண்டகால சந்தோஷப் பலன்களை ஏற்படுத்தும். இப்பொழுது பத்து பொருத்தங்களைப் பற்றி பார்ப்போம்.


1.தினப் பொருத்தம்
  தினப் பொருத்தம் நன்றாக கூடி வந்தால் தம்பதிகள் நோய் நொடியின்றி சுக வாழ்க்கை வாழ்வார்கள். தினப்பொருத்தம் சிறப்பாக இருந்தால் ஆயுள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்
ஒருவருக்கு தன்னுடைய நட்சத்திரத்திற்கு
ஜென்ம நட்சத்திரம் பகை, இரண்டாவது நட்சத்திரம் செல்வம், மூன்றாவது நட்சத்திரம் விபத்து,4வது நட்சத்திரம் சுகம், 5வது நட்சத்திரம் மனசஞ்சலம், 6வது நட்சத்திரம் அனுகூலம், 7வது நட்சத்திரம் வதம், மரணம், 8வது நட்சத்திரம் நட்பு,  9&வது நட்சத்திரம் பரம நட்பு.

     பெண் நட்சத்திரத்திலிருந்து தொடங்கி ஆண் நட்சத்திரம் எத்தனையாவதாக வருகிறதென்று எண்ணுகின்ற போது 1 முதல் 9 வரை உள்ளது 1&வது பர்யாயம், 10 முதல் 18 வரையுள்ள நட்சத்திரங்கள் 2வது பர்யாயம், என்றும் 19 முதல் 27 வரையுள்ள நட்சத்திரங்கள் 3வது பர்யாயம் ஆகும்

பெண் நட்சத்திரம் தொடங்கி ஆணின் நட்சத்திரம் வரை எண்ணுகின்ற போது 2,4,6,8,9,11,13,15,18,20,24,26வது நட்சத்திரங்களாக வந்தால் தினப் பொருத்தம் உண்டு. 12வது நட்சத்திரத்தில் 1ஆம் பாதமும் 14வது நட்சத்தரத்தில் 4ஆம் பாதமும் 16வது நட்சத்திரத்தில் 3ஆம் பாதமும் பொருந்தாது. மற்ற பாதங்கள் பொருந்தும். 22 நட்சத்திரத்தில் 88வது பாதமாக இருந்தாலும் தினப் பொருத்தம் இருக்காது. பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் 27வதாக வந்து இருவரும் ஒரே ராசியானால் தினப் பொருத்தம் உண்டு. வேறு ராசியானால் பொருத்தம் இல்லை

வதவை வைநாசிகம்

வதம்&பெண் நட்சத்திரத்திலிருந்து 7வது நட்சத்திரம் ஆண் நட்சத்திரமாகும். 
வைநாசிகம்&ஆண் நட்சத்திரத்திலிருந்து 7வது நட்சத்திரம் பெண் நட்சத்திரமாகும். வதவை,வைநாசிகம் என்றால் தவிர்ப்பது நல்லது.

ஏக நட்சத்திரப் பொருத்தம்

உத்தம நட்சத்திரங்கள் ;
     ரோகிணி, திருவாதிரை, மகம், விசாகம், ஹஸ்தம், திருவோணம், ரேவதி, உத்திரட்டாதி ஆகியவை. ஆனால் தசா சந்தி வராமலிருக்க வேண்டும்.
மத்திம நட்சத்திரங்கள்;
     பூரம், உத்திரம், பூசம், சித்திரை, புனர்பூசம், அசுவினி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீரிஷம், அனுஷம், ஆகியவை

     மேற்கூறிய நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உண்டு. திருமணம் செய்யலாம். ஆண் பெண் இருவரும் ஏக நட்சத்திரம் ஏக ராசியாக இருந்தால் ஆண் நட்சத்திரம் முதலாவதாகவும், பெண் நட்சத்திரம் அடுத்ததாகவும் இருப்பது நல்லது. பெண் நட்சத்திரம் முந்தியதாகவும், ஆண் நட்சத்திரம் பிந்தியதுமாக இருந்தால் தவிர்ப்பது நல்லது. 

2, கணப் பொருத்தம்
    உலகில் பிறந்த மானிடர்கள் எல்லோரும் ஒரே வித குணங்களுடன் இருப்பதில்லை. கணப் பொருத்தம் என்றால் இனப் பொருத்தம் என பொருள் கொள்ள வேண்டும்.கணப் பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் சுப பலனை அடைவார்கள்.    
உயர்ந்த நோக்கங்களை கொண்டவர்களை தேவ கணம் என்றும், சாதாரண எண்ணங்களை கொண்டவர்களை மனுஷ கணம் என்றும், கீழ்த்தரமான எண்ணங்களை உடையவர்களை ராட்ச கணம் என்றும் குணத்தின் அடிப்படையை கொண்டு மூன்று வகையாக பிரித்துள்ளனர்.  
தேவக் கணம் ;
     அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி, போன்றதாகும். இவை சாத்வீக குணமுடையவை.
மனுஷ கணம்;
     பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவையாகும். இவை தமோ குணத்தை உடையவை.
இராட்ச கணம் ; 
     கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம் அவிட்டம், சதயம் ஆகியவை. இவை ராஷய குணத்தை உடையது. 
    
கணப் பொருத்தம் பார்க்கும் போது ஆண் பெண் இருவருக்கும் ஒரே கணமானால் உத்தமம்.
பெண் தேவ கணத்திலும், ஆண் மனுஷ அல்லது ராட்சஷ கணத்தில் இருப்பது நல்லது.
பெண் மனுஷ கணத்திலும் ஆண் தேவ கணத்திலும் இருப்பது நல்லது.
பெண் மனுஷ கணத்திலும் ஆண் இராட்சஷ கணத்திலும் இருக்க கூடாது.

3.மகேந்திரப் பொருத்தம் (சம்பத்து விருத்தி)
    மகேந்திர பொருத்தம் சிறப்பாக இருந்தால் நல்ல புத்திர பாக்கியம், பெண்ணின் மாங்கல்ய பலமும், கணவன் மனைவியின் ஆயுளும் நல்லபடியாக அமையும். பெண்ணுக்கு மாங்கல்ய பலமும், ஆணுக்கு ஆயுள் தீர்க்கமும் அவசியம் என்பதால் எந்த வித பொருத்தமும் இல்லாவிட்டாலும் இந்த பொருத்தம் மிகவும் அவசியம் என்பதால் இதனை தெய்வீக பொருத்தம் என்கிறார்கள். மகேந்திரப் பொருத்தம் அமைந்தவர்களின் திருமணம் சொர்க்கத்திலுள்ள தேவர்களாலே நிச்சயிக்கப் பட்டதாக கருதப்படுகிறது.பெண் நட்சத்திரத்திலிருந்து எண்ணும் பொழுது ஆண் நட்சத்திரம் 1,4,7,10,13,16,19,22,25 ஆக வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு. 

4.ஸ்திரி தீர்க்கம் (சகல சம்பத்து விருத்தி)
   ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் சிறப்பாக இருந்தால் மணமக்களின் மண வாழ்க்கையில் எல்லா நலத்தையும், செல்வ வளத்தையும் அளிக்கும்.ஸ்திரி என்பது திருமகளை குறிக்கும். பெண் நட்சத்திரத்திலிருந்து எண்ணும் போது ஆண் நட்சத்திரம் 13&க்கு மேல் இருக்க வேண்டும். 7&நட்சத்திரத்திற்கு மேல் இருந்தாலே திருமணம் செய்யலாம் என்ற கருத்தும் உள்ளது.

5.யோனிப் பொருத்தம் (அன்னியோன்ய நட்பு)
    திருமணப் பொருத்தங்களை பார்க்கும் போது திருமணம் செய்ய வேண்டிய ஆண் பெண் ஆகிய இருவருக்கும் தாம்பத்ய உறவு எந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ள உதவும்.
  
யோனிப் பொருத்தத்தை 14 வகையான மிருகங்களின் உணர்வு, 27 நட்சத்திரங்களில் பிறந்தோரின் உணர்வுடன் ஒப்பிடப்பிடுகிறது.

நட்சத்திரம் மிருகம்


அஸ்தம், சுவாதி எருமை
சித்திரை, விசாகம் புலி
அனுஷம், கேட்டை மான்
பூராடம்,திருவோணம் குரங்கு
உத்திராடம் கீரி
அவிட்டம், பூரட்டாதி சிங்கம்
உத்திரட்டாதி பசு

அஸ்தம், சுவாதி எருமை சித்திரை, விசாகம் புலி அனுஷம், கேட்டை மான் பூராடம்,திருவோணம் குரங்கு உத்திராடம் கீரி அவிட்டம், பூரட்டாதி சிங்கம் உத்திரட்டாதி பசு   

மிருகம் பகை மிருகம்               மிருகம் பகை மிருகம்
குதிரை # எருமை                      பூனை# எலி
யானை# சிங்கம்                                       எலி #       பாம்பு
ஆடு# குரங்கு      லி           பசு# பாம்பு கீரி            
      மான்#           நாய்
நாய்# பூனை                                              யானை# சிங்கம்
ஆண் பெண் இருவருக்கும் ஒரே யோனியாக இருந்தால் உத்தமமாகவும் வெவ்வேறு யோனியானால் மத்திமமாக கருதப்படுவதால் பகையோனியாக இருந்தால் பொருத்தம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

6. ராசிப் பொருத்தம் (வம்ச விருத்தி)
இராசி என்பது ஒருவரின் ஜனன ஜாதகத்தில் அவர் பிறந்த போது சந்திரன் எந்த ராசியில் அமைந்துள்ளாரோ அவரை அந்த ராசிகாரர் என்று சொல்வது வழக்கம். ராசிப் பொருத்தமிருந்தால் வம்சம் விருத்தி யாகும்.

  பெண் ராசிக்கு 6 ராசிகளுக்கு மேல் ஆண் ராசி இருந்தால் உத்தமம்.  பெண் ராசிக்கு 3,4  ராசியாக ஆண் ராசி  இருந்தால் மத்திமம். பெண் ராசிக்கு 8 ராசியாக ஆண் ராசி இருக்க கூடாது.


7.இராசியதிபதி பொருத்தம்.

பெண் பிறந்த இராசியின் அதிபதியும், ஆண் பிறந்த ராசியின் அதிபதியும் நட்பா, பகையா, சமமா என்பதை ஆராய்ந்து திருமணப் பொருத்ததை நிச்சயம் செய்ய வேண்டும்.
    பெண் ராசியாதிபதிக்கு ஆண் ராசியாதிபதி நட்பாகவோ சமமாகவோ இருந்தால் ராசி அதிபதிப் பொருத்தம் உண்டு. பெண் ராசிக்கு ஆண் ராசி பகையாக இருந்து, ஆண் ராசிக்கு, பெண் ராசி பகையில்லாமல் இருந்தால் மத்திமமமான பொருத்தம் உண்டு. இருவருக்கும் பகை ராசிகளாக இருந்தால் ராசியாதிபதி பொருத்தமில்லை.

இராசி                 கிரகம்        பகை                  சமம்                     நட்பு
சிம்மம்           -        சூரியன்      -   சுக்,சனி,இரா,கே - புத சந்,   -    செவ், குரு
கடகம்  -       சந்திரன்- ரா, கே  -      செ, குரு, சுக், சனி- சூரி, புத
மேஷம், விருச்சிகம்- செவ்வாய் -புத, ரா, கே -சுக், சனி- சூரி, சந், குரு
மிதுனம், கன்னி -புதன்- சந்தி- செ, குரு,சனி,ரா,கே- சூரி, சுக்
மீனம், தனுசு- குரு -புத, சுக்- சனி, ரா, கே-# செ, சூரி, சந்
ரிஷபம், துலாம்# சுக்கிரன் #சூரி, சந்# செவ், குரு #புத, சனி, ரா, கே
மகரம், கும்பம் சனி #சூரி, சந், செ# குரு #புத, சுக், ரா, கே
இராகு.கேது #சூரி, சந், செ #புதன், #   குரு சனி, சுக்



8.வசியப் பொருத்தம் (அன்னியோன்யம்)
வசியப் பொருத்தம் கூடி வந்தால் தம்பதிகள் அன்யோன்ய வசீகரத்துடன் இன்பு-ற்று வாழ்வார்கள்.

ராசி (பெண்) வசிய ராசிகள் (ஆண்)
மேஷம்              சிம்மம், விருச்சிகம்
ரிஷபம்             கடகம், துலாம்
மிதுனம்              கன்னி
கடகம்                       விருச்சிகம், தனுசு
சிம்மம்                  துலாம்
கன்னி               ரிஷபம், மீனம்
துலாம்               மகரம்
விருச்சிகம் கடகம், கன்னி
தனுசு            மீனம்
மகரம் ,             கும்பம்
கும்பம்                   மீனம்
மீனம்              மகரம்

பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமாக வந்தால் உத்தமம். ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமாக வந்தால் மத்திமம்.

9.இரஜ்ஜீ பொருத்தம் (தீர்க்க சுமங்கலி)
நமது நாட்டில் இது மிகவும் விஷேமானதாகும். ரஜ்ஜு என்று சொல்லத் தெரியாதவர்கள் கூட இதை கழுத்துப் பொருத்தம் என்று கூறுவர். ரஜ்ஜு தட்டினால் விவாகம் செய்ய கூடாது. ரஜ்ஜு இருந்தால் தான் மாங்கல்ய பலம் சிறப்பாக இருக்கும்.

இரஜ்ஜீ நட்சத்திரங்கள்

தலை மீருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

கழுத்து ரோகிணி, அஸ்தம், திருவோணம் (ஆரோகணம்)
திருவாதிரை, சுவாதி, சதயம் (அவரோகணம்)

வயிறு (அ)உதரம்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் (ஆரோகணம்)
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (அவரோகணம்)

தொடை
பரணி, பூரம், பூராடம் (ஆரோகணம்)
பூசம், அனுஷம், உத்திரட்டாதி, (அவரோகணம்)

பாதம்
அசுபதி, மகம், மூலம் (ஆரோகணம்)
ஆயில்யம், கேட்டை, ரேவதி (அவரோகணம்)

     தலை  கழுத்து, தவிர மற்ற மூன்று ரஜ்ஜீகளிலும் ஆண் பெண் இருவருக்கும் ஒன்றாக இருந்து ஒன்று ஆரோகணமாகவும், மற்றொன்று அவரோகணமாக இருந்தால் திருமணம் செய்யலாம். ஆண் பெண் இருவருக்கும் ரஜ்ஜீக்கள் மாறி இருந்தால் ரஜ்ஜீ பொருத்தம் உண்டு திருமணம் செய்யலாம். ஆண் பெண் இருவருக்கும் தலை கழுத்து ஒரே ரஜ்ஜீவாக இருந்தால் ரஜ்ஜீ பொருத்தம் இல்லை. தவிர்ப்பது நல்லது.


10.வேதை பொருத்தம்
வேதைப் பொருத்தம் சிறப்பாக இருந்தால் துக்கங்கள் சோகங்கள் இல்லாமல் இல்வாழ்க்கை இன்பகரமாக இருக்கும்.
அஸ்வினிக்கு கேட்டை
பரணிக்கு அனுஷம்
கார்த்திகைக்கு விசாகம்
ரோகிணிக்கு சுவாதி
திருவாதிரைக்கு திருவோணம்
புனாபூசத்திற்கு உத்திராடம்
பூசத்திற்கு பூராடம்
ஆயில்யத்திற்கு மூலம்
மகத்திற்கு ரேவதி
பூரத்திற்கு உத்திரட்டாதி
அஸ்தத்திற்கு சதயம்
உத்திரத்திற்கு பூரட்டாதி
    
 இவை ஒன்றுக் கொன்று வேதையாம். மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் இவை ஒன்றுக்கொன்று வேதை. வேதையானால் பொருந்தாது. திருமணம் செய்யக் கூடாது. வேதை இல்லாமலிருந்தால் திருமணம் செய்யலாம்.

தசா வித பொருத்தத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷேச விதிகள்
அஸ்வினி,பரணி,ரோகிணி,திருவாதிரை,பூசம்,ஆயில்யம்,மகம்,சித்திரை,சுவாதி,கேட்டை, பூராடம்,பூரட்டாதி . ஆகியவை  ஆண் நட்சத்திரங்களாகும். 
கிருத்திகை,மிருகசீரிஷம்,புனர்பூசம்,பூரம்.அஸ்தம்,விசாகம்,அனுஷம்,மூலம்,திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகியவை பெண் நட்சத்திரங்களாகும்.
உத்திரம்,உத்திராடம்,உத்திரட்டாதி  ஆகியவை  அலி நட்சத்திரங்களாகும்.

திருமணப் பொருத்த விஷயத்தில் ஆண்  ஆண் நட்சத்திரமாகவும், பெண் பெண் நட்சத்திரமாகவும் இருப்பது உத்தம பொருத்தமாகும். ஆண்  பெண் நட்சத்திரமாகவும், பெண் ஆண் நட்சத்திரமாகவும் இருப்பின் பொருத்தமாகாது. ஆண் பெண் நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்று அலி நட்சத்திரமாக இருந்தால் மத்திம பொருத்தமாகும். இருவரும் ஆண் நட்சத்திரமாகவோ, பெண் நட்சத்திரமாகவோ இருந்தால் மத்திம பொருத்தமாகும்.

Contact

For your consultation


please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamuru
gan M.A.astro

Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA



Thursday, April 9, 2015

கொடி சுற்றிப் பிறத்தலும் கொடிய பலன்களும்

                                 
       

காணத்தவறாதீர்

 விஜய் டிவியில்

தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்                           
கொடி சுற்றிப் பிறத்தலும் கொடிய பலன்களும்
                                              
     எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே... அது நல்லவராவதும் கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் வரிகள் உண்டு. ஆனால் ஜோதிட ரீதியாக ஒரு குழந்தையின் ஜாதகத்தில்  குரு புதன் சந்திரன் ராகு அல்லது கேது இணைந்து ஜென்ம லக்னத்தில் வீற்றிருந்தால் அந்த குழந்தைக்கு பிறவியிலேயே கொடூரமான குணங்கள் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகின்றது. இதோடு மட்டுமின்றி, அந்த வம்சத்தையே இழி சொல்லுக்கு ஆளாக்கும் படி அதின் நடவடிக்கையிருக்கும் அக்குழந்தையால் அந்த தலைமுறையே தலைகுனிய கூடிய சூழ்நிலை உண்டாகும். இது அன்னையின் கருவினிலேயே உண்டாகிவிட்ட குணங்களா இல்லை பூர்வ ஜென்ம பாவமா என எண்ணத் தோன்றும். தாயானவள்  தான் பெற்ற குழந்தையே எமனுக்கு கொடுத்தாலும் கொடுப்பாளே தவிர மற்றவருக்கு கொடுக்க மாட்டாள் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் பிறக்கும் குழந்தையின் ஜெனன ஜாதகத்தில் சந்திரன் பாவியாகி ஜென்ம லக்னத்தில் வீற்றிருக்க, சனியும் செவ்வாயும் இணைந்து ஏழில் அமைந்து குருவின் பார்வை பெற்றால் அந்த குழந்தை பெற்ற தாயிடம் வளராமல் மற்றவர்களால் வளர்க்கப்படும் நிலை உண்டாகும்.     

 குழந்தைகள் கொடி சுற்றி பிறப்பது நல்லதில்லை. உடலில் கொடி சுற்றி பிறக்கும் குழந்தையால் தந்தைக்கு கெடு பலன்கள் உண்டாகிறது. தாய் தந்தை பிரியக் கூடிய சூழ்நிலையும் உருவாகிறது. பிறக்கும் குழந்தையின் ஜென்ம லக்னம் மேஷம் அல்லது ரிஷபமாக இருந்து சனியும் செவ்வாயும் இணைந்து ஜென்ம லக்னத்தை பார்வை செய்தால் அந்த குழந்தையின் உடலில் இரண்டு கொடிகள் சுற்றிருக்கும். செவ்வாய் மட்டும் லக்னத்தைப் பார்த்தால் செங்கொடி சுற்றியும் சனி பார்வையிருந்தால் கறுப்பு கொடி சுற்றியும் குழந்தைகள் பிறக்கும்.
     குழந்தையின் உடம்பில் ஒரு கொடி சுற்றியிருந்தால் அது தாய் மாமனுக்கு கண்டம் ஏற்படும். எதிர்பாராத விபத்து ஏற்பட்டு துர்மரணத்தை அடையக் கூடிய சூழ்நிலையும்  உண்டாகும்.
     குழந்தையின் வலது கையில் மாலை போல் கொடி சுற்றி பிறந்தால் உடன் பிறந்த சகோதரனுக்கும், இடது கையில் கொடி சுற்றி பிறந்தால் அது சகோதர முறையிலிருப்பவனுக்கும் தோஷம் ஏற்படும்.
     இப்படி கொடி சுற்றி குழந்தை பிறந்தால் உடல் ஊனமுற்றவர்களுக்கு வேட்டி, துண்டு, புடவை, ரவிக்கை எடுத்து கொடுத்து அன்னதானம் செய்வது மிகவும் நல்லது. இதனால் தோஷத்தின் கெடு பலன் சற்று குறையும்.

Contact

For your consultation



please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Wednesday, April 8, 2015

திருமண தோஷங்கள் புத்திர தோஷம்

 

காணத்தவறாதீர்

 விஜய் டிவியில்

தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்


ஆண் பெண் இருவருக்கும் நட்சத்திர பொருத்தங்கள் பார்ப்பது மட்டுமின்றி ஜாதக ரீதியாக புத்திர ஸ்தானம் பலமாக உள்ளதா என ஆராய்வது அவசியம். 

புத்திரஸ்தானமான 5 ஆம் பாவம் பாதிக்கப்பட்டால், குழந்தை யோகம் உண்டாகத் தடை உண்டாகிறது. நவக்கோள்களில் ஆண்கிரகங்கள், பெண் கிரகங்கள் என்பதைப் போல அலி கிரகங்களும் உண்டு. அலி கிரகங்களான புதன், சனி, ராகு, கேது 5 இல் அமையப் பெற்றாலும், 5 ஆம்  அதிபதியாக இருந்தாலும், புத்திர காரகன் குரு வலுவிழந்திருந்தாலும் புத்திர தோஷம் உண்டாகிறது. 

5 ஆம் அதிபதி வக்ரம், நீசம், அஸ்தங்கம் பெற்றாலும், ராகு கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, திருவாதிரை, மகம், சுவாதி, முலம், சதயம் ஆகிய நட்சத்திரங்களில் அமையப் பெற்றாலும் புத்திர தோஷம் உண்டாகிறது. அது போல 5 ஆம் அதிபதியும் குருவும் வக்ரம் பெறுவது புத்திர தோஷமாகும். 

சனி, புதன், ராகு, கேது ஆகியன அலி கிரகம் என்றாலும், 5 இல் ராகு இருப்பதும், பகை வீடாக இருந்து 5 இல் சனி அமைவதும் கடுமையான புத்திர தோஷமாகும். புதன் வீடான மிதுனம், கன்னி 5ஆம் பாவமாக இருந்தால் புத்திர தோஷம் ஏற்படுகிறது. 

5 இல் கேது அமைகின்ற போது சிலருக்கு ஆண்வாரிசு ஏற்படாமல் பெண் வாரிசு உண்டாகிறது. 5 ஆம் வீட்டிற்கு இருபுறமோ, 5ம் அதிபதிக்கு இருபுறமோ, குருவுக்கு இருபுறமோ பாவகிரகங்கள் அமையப் பெற்றால் புத்திர தோஷம் உண்டாகிறது. சந்திரனுக்கு 5 ஆம் வீட்டில் பாவிகள் இருப்பதும், 5 ஆம் அதிபதி பலவீனமடைவதும் புத்திர தோஷமாகும். 

ஆண்கள் ஜாதகத்தில் 5 ஆம் பாவத்தை கொண்டு புத்திர பாக்கியத்திற்கு பார்ப்பது போல பெண்கள் ஜாதகத்தில் 5 ஆம் பாவம் மட்டும் இன்றி 9 ஆம் பாவத்தையும் புத்திர பாக்கியத்திற்கு பார்க்க வேண்டும்
ஒருவருக்கு புத்திர தோஷம் உண்டாகி இருந்தால் புத்திர ஸ்தானம் பலமாக உள்ளவராகப் பார்த்து திருமணம் செய்து வைத்தால் ஒருவரின் பலத்தாலேயே சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். 


Contact

For your consultation




please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

Monday, April 6, 2015

திருமண தோஷங்கள் மாங்கல்ய தோஷம்

 

காணத்தவறாதீர்

 விஜய் டிவியில்

தினமும் 

 காலை 05.45  மணி முதல் 05.55  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்


திருமண தோஷங்கள்
மாங்கல்ய தோஷம்

ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வதுதான் நம் இந்திய கலாச்சாரத்தின் பண்பாடாகும் மேலை நாடுகளிலும் நம்மைப் பார்த்து மூக்கின் மேல் விரலை வைக்கக்கூடிய ஒரே விஷயம் நம்முடைய தாம்பத்திய ஒற்றுமைதான். எப்படித்தான் ஒருவர் ஒருத்தியோடு முப்பது, நாற்பது ஆண்டு காலங்கள் வாழ்கிறார்களோ என ஆச்சரியப்படுகிறார்கள். இதில் முக்கியமாக இந்தியப் பெண்கள் சுமங்கலியாகவே வாழ ஆசைப்படுகிறார்கள். எத்தனையோ பெண்கள் நான் பூவோடும், பொட்டோடும் சுமங்கலியாய் வாழ வேண்டும் என தெய்வ வழிபாடுகளையும் பரிகாரங்களையும் மேற்கொள்கிறார்கள். அதுவும் நம் நாட்டில் 60 வயது, என்பது வயது வரை  என திருப்தியோடு வாழும் தம்பதியினருக்கு விழா எடுத்து கொண்டாடுகிறார்கள். இளம் தம்பதிகள் அவர்களிடம் சென்று வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் பெறுவதை வழக்கமாக கொள்வார்கள். அதையும் மீறி இளம் வயதிலேயே விதவை கோலம்  ஏற்படக்கூடிய அவல நிலைகளும் பெண்களுக்கு உண்டாகிறது. அந்த காலத்தில் கணவன் இறந்தால் உடனே உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இப்பொழுதுள்ள விஞ்ஞான யுகத்தில் விதவைப் பெண்களும் வாழ முடியும் என தைரியத்தைக் கொடுத்துள்ளது. விதவை என்ற  சொல்லுக்கு பொட்டு வைக்க முடியாது என்பதால் கைம்பெண் என மாற்றி இரண்டு பொட்டுக்கள் வைத்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் இந்திய பெண்கள் சுமங்கலியாக வாழ்வதைத்தான் விரும்புகிறார். பூவும், பொட்டும், மஞ்சள் குங்குமமும் நிலைத்திருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களுக்குத்தான் திருமண விழாக்களிலும், மற்ற சுப காரியங்களிலும் முன்னுரிமை வழங்கப் படுகிறது
இப்படி சுமங்கலியாக வாழ ஒவ்வொரு பெண்ணின் ஜாதக ரீதியாகவும் 8 ஆம் பாவமானது பலமாக அமைய வேண்டும். பெண்களுக்கு 8 ஆம் பாவம் மாங்கல்ய ஸ்தானமாகும். 7 ஆம் இடம் களத்திர ஸ்தானம் என்றாலும் 8 ஆம் இடம் மாங்கல்ய ஸ்தானம் என்பதால், 8 ஆம் வீட்டாதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 8 ஆம் வீட்டை குரு போன்ற சுப கிரகங்கள் பார்வை செய்தாலும், களத்திர ஸ்தானமான 7 ஆம் பாவமும் பலமிழக்காமல் இருந்தாலும் கணவனுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், நிலையான மாங்கல்ய பாக்கியம், தாம்பத்திய வாழ்வில் அன்யோன்யம் உண்டாகும். 

8 ஆம் வீட்டை குரு, சுக்கிரன், வளர்பிறை, சந்திரன் பார்வை செய்வது உத்தமம்.  அதுவே சுபர் பார்வை 8 ஆம் வீட்டிற்கு இல்லாமல் இருந்து 8ல் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது அமையப் பெற்றாலும், 8 ஆம் அதிபதி சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது சேர்க்கை பெற்றாலும், 8 ஆம் அதிபதி நீசம் பெற்றாலும் வக்ரம் பெற்றாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகி வரக்கூடிய கணவருக்கு கண்டம் ஏற்படுகிறது. 8 ஆம் அதிபதி பலம் இழந்து அதாவது நீசம் பெற்று மற்ற கிரகங்களால் பங்கம் பெற்றிருந்தாலும் முதலில் அமையும் வாழ்க்கையானது நிலைப்பதில்லை. 

7 ஆம் வீட்டதிபதி நீசம் பெற்றாலும் சனி, சூரியன், செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும் கணவருக்கு கண்டம் உண்டாகிறது. அது மட்டுமின்றி 7 ஆம் அதிபதி நீசபங்கம் ஏற்பட்டிருந்தாலும் முதலில் அமையக்கூடிய வாழ்வில் ஒரு பாதிப்பு ஏற்பட்டு அதன் பிறகு தான் வாழ்க்கை சிறப்பாக அமையும். 7 ஆம் வீட்டிற்கும் 8 ஆம் வீட்டிற்கும் இரு புறமும் பாவிகள் அமைவதும், 8 ஆம் அதிபதி இருக்கும் வீட்டிற்கும் இருபுறமும் பாவிகள் அமைவதும் மாங்கல்ய தோஷமாகும்.

மாங்கல்ய ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கு சமசப்தம ஸ்தானமான 2 இல் பாவிகள் அமைவதும் மாங்கல்ய தோஷமாகும். அது போல பெண்களுக்கு களத்திர காரகன் என வர்ணிக்கபடக்கூடிய செவ்வாய், சுக்கிரன் ஆகியவர்கள் சனி, ராகு போன்ற பாவகிரக சேர்க்கைப் பெற்றிருப்பதும் மாங்கல்ய தோஷமாகும்.  8 ஆம் இடம் மாங்கல்ய ஸ்தானம் என்பதால் அதனை சனி, செவ்வாய், போன்ற பாவ கிரகங்கள் பார்வை செய்வதால் மாங்கல்ய தோஷம் உண்டாகிறது. 

பொதுவாக 7,8 ஆம் பாவங்கள் களத்திர ஸ்தானம், மாங்கல்ய ஸ்தானம் என்பதால், பெண்கள் ஜாதகத்தில் 7,8 ஆம் பாவங்கள் சுத்தமாக இருக்கிறதா எனப் பார்த்து தான் திருமணம் செய்வார்கள். அப்பொழுதுதான் பெண்கள் நீண்ட காலம் சுமங்கலியாக வாழக்கூடிய பாக்கியத்தைப் பெறுவார்கள். 

Contact



please contact my postal adress  
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA