Friday, November 29, 2019

Today rasi palan - 30.11.2019


Today rasi palan - 30.11.2019
இன்றைய ராசிப்பலன் -  30.11.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
30-11-2019, கார்த்திகை 14, சனிக்கிழமை, சதுர்த்தி மாலை 06.05 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூராடம் நட்சத்திரம் காலை 08.15 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.




ராகு

திருக்கணித கிரக நிலை
30.11.2019

 

கேது சனி குரு சுக்கி சந்தி
சூரிய
  செவ்
புதன்


இன்றைய ராசிப்பலன் -  30.11.2019
மேஷம்
இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 02.32 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதி உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் சற்று குறைந்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 02.32 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.
கடகம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.
கன்னி
இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள்.
தனுசு
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியத்தை கூட சிரமபட்டு முடிக்க நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.
மகரம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் வீண் செலவுகளை தவிர்த்து சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வண்டி வாகனங்களில் செல்கின்ற போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்.
மீனம்
இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள்.

Thursday, November 28, 2019

Today rasi palan - 29.11.2019


Today rasi palan - 29.11.2019
இன்றைய ராசிப்பலன் -  29.11.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
29-11-2019, கார்த்திகை 13, வெள்ளிக்கிழமை, திரிதியை மாலை 05.40 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. மூலம் நட்சத்திரம் காலை 07.33 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் காலை 07.33 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   




ராகு

திருக்கணித கிரக நிலை
29.11.2019

 

கேது சனி குரு சுக்கி சந்தி
சூரிய
  செவ்
புதன்


இன்றைய ராசிப்பலன் -  29.11.2019
மேஷம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
மிதுனம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்ழ்ழழழா£. உறவினர்களுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலப்பலன் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
சிம்மம்
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.  உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.
கன்னி
இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை தரும். கடன்கள் குறையும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
கும்பம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்ககூடிய வாய்ப்புகள் உருவாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.
மீனம்
இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சேமிப்பு உயரும்.