Wednesday, December 31, 2025

Today rasi palan - 31.12.2025

 


Today rasi palan -
31.12.2025

இன்றைய ராசிப்பலன் -  31.12.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

31-12-2025, மார்கழி 16, புதன்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.48 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 01.30 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் பின்இரவு 01.30 வரை பின்பு சித்தயோகம். கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

சனி

சந்தி

 

குரு (வ)

 

ராகு

 

31.12.2025

 

 

கேது

சூரிய செவ் சுக்கி புதன்

 

  

 

 

இன்றைய ராசிப்பலன் -  31.12.2025

மேஷம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் நிலையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களின் உதவியால் பணப் பிரச்சினை ஓரளவு தீரும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

கடகம்

இன்று சகோதர சகோதரி வழியில் அனுகூலம் உண்டாகும். சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். கடன்கள் குறையும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு காலை 9.23 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகளில் பிற்பகலுக்கு பின் நற்பலன் கிடைக்கும்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு காலை 9.23 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். தூர பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

தனுசு

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.

மகரம்

இன்று குடும்பத்தில் செலவுகள் அதிகரித்தாலும் அவை சுப செலவுகளாகவே இருக்கும். உற்றார் உறவினர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக பகை நீங்கும்.

கும்பம்

இன்று நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் தேவை. திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும்.

மீனம்

இன்று உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

Tuesday, December 30, 2025

Today rasi palan - 30.12.2025

 


Today rasi palan -
30.12.2025

இன்றைய ராசிப்பலன் - 30.12.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

30-12-2025, மார்கழி 15 , செவ்வாய்க்கிழமை, தசமி திதி காலை 07.51 வரை பின்பு ஏகாதசி திதி பின்இரவு 05.01 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பரணி நட்சத்திரம் பின்இரவு 03.58 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். வைகுண்ட ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

சனி

சந்தி

 

குரு (வ)

 

ராகு

 

30.12.2025

 

 

கேது

சூரிய செவ் சுக்கி புதன்

 

  

 

 

இன்றைய ராசிப்பலன் -  30.12.2025

மேஷம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

மிதுனம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

கடகம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

கன்னி

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.

துலாம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.

தனுசு

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

மகரம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

கும்பம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.