Wednesday, October 14, 2026

Today rasi palan - 14.10.2026

 


Today rasi palan - 14.10.2026

இன்றைய ராசிப்பலன் -  14.10.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் பாலஜோதிடம் வார இதழ்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Online consultation at - 0091  7200163001. 9383763001,

Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb

 

இன்றைய  பஞ்சாங்கம்

14-10-2026, புரட்டாசி 27, புதன்கிழமை, சதுர்த்தி பின்இரவு 01.13 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி அனுஷம் பின்இரவு 04.03 வரை பின்பு கேட்டை நாள் முழுவதும் சித்தயோகம். மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

சனி (வ)

 

 

 

ராகு

 

14.10.2026

செவ் குரு

 

கேது

 

சந்தி

 புதன்

சுக்கி (வ)

சூரிய

 

இன்றைய ராசிப்பலன் -  14.10.2026

 

மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. பேச்சை குறைக்கவும்.

 

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.  உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் இரட்டிப்பாகும்.

 

மிதுனம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்பு உயரும்.

 

கடகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை தரலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

 

சிம்மம்

இன்று உங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் மனசங்டங்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை விலகி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

 

கன்னி

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.

 

துலாம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பண நெருக்கடிகள் குறையும்.

 

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

 

தனுசு

இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.

 

மகரம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.  தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்லது நடக்கும்.

 

கும்பம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நற்பலனை தரும்.

 

மீனம்

இன்று வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

No comments: