Thursday, October 15, 2026

Today rasi palan - 15.10.2026

 


Today rasi palan - 15.10.2026

இன்றைய ராசிப்பலன் -  15.10.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் பாலஜோதிடம் வார இதழ்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Online consultation at - 0091  7200163001. 9383763001,

Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb

 

இன்றைய  பஞ்சாங்கம்

15-10-2026, புரட்டாசி 28, வியாழக்கிழமை, பஞ்சமி பின்இரவு 03.25 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. நாள் முழுவதும் கேட்டை. நாள் முழுவதும் பிரபலாரிஷ்ட யோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

சனி (வ)

 

 

 

ராகு

 

15.10.2026

செவ் குரு

 

கேது

 

சந்தி

 புதன்

சுக்கி (வ)

சூரிய

 

இன்றைய ராசிப்பலன் -  15.10.2026

 

மேஷம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானத்துடன் செல்ல வேண்டும்.

 

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

 

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

 

கடகம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு சற்று குறைந்து காணப்படும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும்.

 

சிம்மம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளி பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் கிட்டும்.

 

கன்னி

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

 

துலாம்

இன்று உத்தியோக ரீதியாக திடீர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கி லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலையில் பணிச்சுமை குறையும்.

 

தனுசு

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்படும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

 

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

 

கும்பம்

இன்று குடும்பத்தில் தனவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் சம்பந்தமாக போட்ட திட்டங்களில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும்.

 

மீனம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

No comments: