Friday, May 22, 2026

Today rasi palan - 22.05.2026

 


Today rasi palan -
22.05.2026

இன்றைய ராசிப்பலன் -  22.05.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

22-05-2026, வைகாசி 08, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி காலை 06.25 வரை பின்பு சப்தமி திதி பின்இரவு 05.05 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 02.08 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நவகிரக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  

 

சனி

செவ்

சூரிய புதன்

குரு சுக்கி

ராகு

 

22.05.2026

சந்தி

 

கேது

 

 

  

 

 

இன்றைய ராசிப்பலன் -  22.05.2026

மேஷம்

இன்று பிள்ளைகளிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். எதிர்பாராத உதவி கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் லாபத்தை அடையலாம்.

ரிஷபம்

இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் வசூலாகும். பொன் பொருள் சேரும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்

இன்று உங்களுக்கு பண புழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத செலவுகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சிலருக்கு உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

துலாம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

தனுசு

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரியங்களை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும்.

கும்பம்

இன்று உங்களுக்கு சுப செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். வெளியூர் பயணங்களில் வேற்று மொழி நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப செய்திகள் வந்து சேரும்.

No comments: