Today rasi palan - 18.05.2026
இன்றைய ராசிப்பலன்
- 18.05.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
18-05-2026, வைகாசி 04, திங்கட்கிழமை, துதியை திதி
மாலை 05.53 வரை
பின்பு வளர்பிறை திரிதியை. ரோகிணி நட்சத்திரம் பகல்
11.32 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 11.32 வரை
பின்பு சித்தயோகம். சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம்
01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு
10.00-11.00.
|
சனி |
செவ் |
சூரிய சந்தி புதன் |
குரு சுக்கி |
|
ராகு |
18.05.2026 |
|
|
|
|
கேது |
||
|
|
|
|
|
இன்றைய ராசிப்பலன் - 18.05.2026
மேஷம்
இன்று உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். சுபகாரியங்களில் மந்த
நிலை இருக்கும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். எதிலும் யோசித்து செயல்பட்டால் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தடைப்பட்ட பணவரவுகள் கைக்கு வந்து சேரும்.
மிதுனம்
இன்று உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். கடின
உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் சற்று குறையும்.
கடகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு புது
தெம்பைத் தரும்.
கன்னி
இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம். சுபகாரிய முயற்சிகளில் தாமதபலன் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு
தொகை கடன்
வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். ஆன்மீக காரியங்களில் அதிக
ஈடுபாடு உண்டாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப
காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. எந்த செயலிலும் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய வண்டி வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைகள் பாராட்டப்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும்.
கும்பம்
இன்று உடன்பிறப்புகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற ஆதாயங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு
ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
மீனம்
இன்று உடன்
பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அனுகூலமான பலன்கள் கிட்டும். எதிர்பாராத உதவியால் கடன் பிரச்சினை குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

No comments:
Post a Comment