Tuesday, May 19, 2026

Today rasi palan - 19.05.2026

 


Today rasi palan -
19.05.2026

இன்றைய ராசிப்பலன் -  19.05.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

19-05-2026, வைகாசி 05, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பகல் 02.19 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 08.41 வரை பின்பு திருவாதிரை. சித்தயோகம் காலை 08.41 வரை பின்பு மரணயோகம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

சனி

செவ்

சூரிய புதன்

சந்தி குரு சுக்கி

ராகு

 

19.05.2026

 

 

கேது

 

 

  

 

 

இன்றைய ராசிப்பலன் -  19.05.2026

மேஷம்

இன்று குடும்ப உறவுகளுக்கு இடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். தொழிலில் சற்று மந்த நிலை இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெற்று நெருக்கடிகள் சற்று குறையும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோககத்தில் உங்கள் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு.

கடகம்

இன்று புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனசங்கடங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உங்களின் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வளரச்சிக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

கன்னி

இன்று வேலையில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று கால தாமதமாகும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை -னுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானமாக செல்ல வேண்டும்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

மகரம்

இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். சுபகாரியங்கள் கைகூடும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.

கும்பம்

இன்று உறவினர்களின் வகையில் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும்.

மீனம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

No comments: