Today rasi palan - 17.05.2026
இன்றைய ராசிப்பலன்
- 17.05.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
17-05-2026, வைகாசி 03, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி இரவு
09.41 வரை பின்பு வளர்பிறை துதியை. கிருத்திகை நட்சத்திரம் பகல் 02.32 வரை
பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம்.
இராகு காலம் - மாலை 04.30 -
06.00, எம கண்டம் - பகல் 12.00 -
01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 -
04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 -
11.00.
|
சனி |
செவ் |
சூரிய சந்தி புதன் |
குரு சுக்கி |
|
ராகு |
17.05.2026 |
|
|
|
|
கேது |
||
|
|
|
|
|
இன்றைய ராசிப்பலன் - 17.05.2026
மேஷம்
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன
நிம்மதி குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
மிதுனம்
இன்று எந்த
ஒரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலம் உண்டாகும்.
கடகம்
இன்று உடன்
பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
சிம்மம்
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடல்நிலை சீராகும்.
கன்னி
இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன்
பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களின் நீண்ட நாள்
ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
தனுசு
இன்று புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். உடன்
பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல
லாபம் உண்டாகும்.
மகரம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு
பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.
எடுக்கும் முயற்சிகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். எந்த
ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகளால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும்.
மீனம்
இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

No comments:
Post a Comment