Today rasi palan - 19.08.2026
இன்றைய ராசிப்பலன்
- 19.08.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
19-08-2026, ஆவணி 02, புதன்கிழமை, சப்தமி திதி
இரவு 07.20 வரை
பின்பு வளர்பிறை அஷ்டமி. சுவாதி நட்சத்திரம் காலை
06.47 வரை பின்பு விசாகம். நாள்
முழுவதும் சித்தயோகம். கரி நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 -
12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை
09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
|
சனி (வ) |
|
|
செவ் |
|
ராகு |
19.08.2026 |
புதன் குரு |
|
|
|
சூரிய கேது |
||
|
|
|
சந்தி |
சுக்கி |
இன்றைய ராசிப்பலன் -
19.08.2026
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபார ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு
வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடை
ஆபரண சேர்க்கை உண்டாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் வெற்றி பெற
உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் உண்டாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் சிறு
உபாதைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
சிம்மம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த
நாள் அமையும். வேலையில் புது
பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன்
பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல்
ஆரோக்கியம் சீராகும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண்
விரயங்கள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகளால் மனநிம்மதி குறையும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
துலாம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன்
பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
விருச்சிகம்
இன்று தொழில் வியாபாரத்தில் மந்த
நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் சக
ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்-. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
தனுசு
இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நீண்ட நாள்
எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கப் பெறும்.
மகரம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.
கும்பம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை
தோன்றும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன்
சுமை தீரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு
வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

No comments:
Post a Comment