Today rasi palan - 15.08.2026
இன்றைய ராசிப்பலன்
- 15.08.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
15-08-2026, ஆடி 30, சனிக்கிழமை, திரிதியை திதி
மாலை 05.29 வரை
பின்பு வளர்பிறை சதுர்த்தி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 03.25 வரை பின்பு அஸ்தம். நாள்
முழுவதும் மரணயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை
09.00-10.30, எம கண்டம் மதியம்
01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
|
சனி (வ) |
|
|
செவ் |
|
ராகு |
15.08.2026 |
சூரிய புதன் குரு |
|
|
|
கேது சந்தி |
||
|
|
|
|
சுக்கி |
இன்றைய ராசிப்பலன் - 15.08.2026
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப
முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வேலையில் உடன்
பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.
ரிஷபம்
இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும்.
தெய்வ வழிபாடு நல்லது.
மிதுனம்
இன்று நீங்கள் மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பொறுமையுடன் இருப்பது நல்லது.
கடகம்
இன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருட்கள் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வருமானம் இரட்டிப்பாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண்
விரயங்கள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று மந்த
நிலை ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல
மாற்றத்தை தரும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கன்னி
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். நண்பர்கள் மூலம் சுப
செய்திகள் வந்து சேரும். மன
நிம்மதி ஏற்படும்.
துலாம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, அசதி
இருந்தாலும் எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். அசையா சொத்துக்களால் சிறு விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை
அடையலாம்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு விடியற்காலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பொன் பொருள் சேரும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு
வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு காலை 09.34 மணி
வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் மதியத்திற்கு பிறகு அனுகூலப் பலன் கிடைக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு
மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் வீண்
பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 09.34 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை.
மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
மீனம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

No comments:
Post a Comment