Sunday, October 18, 2026

Today rasi palan - 18.10.2026

 


Today rasi palan - 18.10.2026

இன்றைய ராசிப்பலன் -  18.10.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் பாலஜோதிடம் வார இதழ்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Online consultation at - 0091  7200163001. 9383763001,

Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb

 

இன்றைய  பஞ்சாங்கம்

18-10-2026, ஐப்பசி 01, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி காலை 08.28 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூராடம் பகல் 12.49 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பகல் 12.49 வரை பின்பு அமிர்தயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

சனி (வ)

 

 

 

ராகு

 

18.10.2026

செவ் குரு

 

கேது

சந்தி

 

 சூரிய புதன்

சுக்கி (வ)

 

 

இன்றைய ராசிப்பலன் -  18.10.2026

 

மேஷம்

இன்று உங்களின் உடல்நிலையில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.

 

ரிஷபம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

மிதுனம்

இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

 

கடகம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் விலகி லாபம் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

 

சிம்மம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

 

கன்னி

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

 

துலாம்

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.

 

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவுகள் சற்று சுமாராக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

 

தனுசு

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உத்தியோக ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

 

மகரம்

இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். தெய்வ வழிபாடு நல்லது.

 

கும்பம்

இன்று இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.

 

மீனம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும்.

No comments: