Today rasi palan - 27.08.2026
இன்றைய ராசிப்பலன்
- 27.08.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
27-08-2026, ஆவணி 10, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை
09.09 வரை பின்பு பௌர்ணமி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 02.15 வரை பின்பு சதயம். சித்தயோகம் பின்இரவு 02.15 வரை
பின்பு மரணயோகம். பௌர்ணமி விரதம். ஆவணி அவிட்டம் .
இராகு காலம் - மதியம்
01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை
09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை
04.00-06.00, இரவு 08.00-09.00.
|
சனி (வ) |
|
|
செவ் |
|
ராகு |
27.08.2026 |
குரு |
|
|
சந்தி |
சூரிய புதன் கேது |
||
|
|
|
|
சுக்கி |
இன்றைய ராசிப்பலன் -
27.08.2026
மேஷம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். இதுவரை வராத
பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன்
கிடைக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல்
01.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் பொறுமை தேவை. எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சுப
முயற்சிகளையும், பயணங்களையும் மதியத்திற்கு பிறகு மேற்கொள்வது நல்லது.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு பகல்
01.35 மணிக்கு மேல்
சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை
தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.
சிம்மம்
இன்று எதிர்பாராத விதமாக மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண
பிரச்சினையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
துலாம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி
உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல்
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த
நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன்
பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்
இன்று எந்த
ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய
உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும்.
கும்பம்
இன்று உங்களின் பொருளாதார நிலை
சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன்
பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். கடன்கள் குறையும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
No comments:
Post a Comment