Today rasi palan - 22.08.2026
இன்றைய ராசிப்பலன்
- 22.08.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
22-08-2026, ஆவணி 05, சனிக்கிழமை, தசமி திதி
பின்இரவு 02.00 வரை
பின்பு வளர்பிறை ஏகாதசி. கேட்டை நட்சத்திரம் பகல்
02.49 வரை பின்பு மூலம். நாள்
முழுவதும் சித்தயோகம்.
இராகு காலம் - காலை
09.00-10.30, எம கண்டம் மதியம்
01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
|
சனி (வ) |
|
|
செவ் |
|
ராகு |
22.08.2026 |
புதன் குரு |
|
|
|
சூரிய கேது |
||
|
|
சந்தி |
|
சுக்கி |
இன்றைய ராசிப்பலன் - 22.08.2026
மேஷம்
இன்று செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை
காணப்படும். உங்கள் ராசிக்கு பகல்
02.49 மணி வரை
சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மாலை
நேரத்திற்கு பிறகு பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். வீண்
வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு பகல்
02.49 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வெளிப் பயணங்களில் கவனம் தேவை.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு
வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
இன்று எதிர்பாராத பிரச்சினைகள் இல்லம் தேடி வரலாம். வீட்டு பராமரிப்பிற்காக சிறு தொகை
செலவிட நேரிடும். பெரியவர்களின் நன்மதிப்பை பெற பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும்.
சிம்மம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் உடல்
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல
முன்னேற்றத்தை தரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.
கன்னி
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண்
மன-ஸ்தாபங்கள் ஏற்பட்டு மனஅமைதி குறையும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
துலாம்
இன்று உடல்
ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கப் பெறும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன்
பிரச்சினைகள் தீரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
தனுசு
இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
மகரம்
இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த ஒரு
கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். நவீன
பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

No comments:
Post a Comment