Thursday, January 1, 2026

புத்தாண்டு பலன்கள் - 2026 - கடக ராசி

 புத்தாண்டு பலன்கள் - 2026 - கடக ராசி

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சிறப்பான பேச்சாற்றலும் மற்றவர்களை வசீகர படுத்தக்கூடிய தோற்றமும் திறமையும் இயற்கையிலேயே கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமான சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர்பார்த்த பண உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.

தொழில் வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டிய ஒரு நிலை இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகளை பெரிதளவு எதிர்பார்க்காமல் எந்த ஒரு காரியத்திலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது ஏற்படும். உங்களுக்கு இந்தாண்டில் வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு வெளியூர் நபர்கள் மூலமாக ஆதாயத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சில சட்ட சிக்கல்களை நீங்கள் எதிர்கொண்டாலும் வேலையாட்கள் உடைய ஆதரவானது மிகச் சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை பூர்த்தி செய்யக்கூடிய பலம் உண்டாகும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பதன் மூலமாக தொழிலில் நல்ல ஒரு வளர்ச்சியினை அடைய முடியும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது.

வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் மற்றவருடைய வேலையும் இணைத்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். பணியில் நீங்கள் சற்று கவனத்தோடு இருந்தால்தான் நல்ல பெயர் எடுக்க முடியும். உங்களுக்கு ஏற்படக்கூடிய சின்ன சின்ன உடம்பு பாதிப்பின் காரணமாக வேலையில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு ஒரு நெருக்கடியான நிலை நிலவும். சூழ்நிலையை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் இவ்வாண்டில் நல்ல வளர்ச்சியினை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி நிமித்தமாக வெளியூர், வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

நவகிரகங்களில் சர்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு- கேது குறிப்பாக இந்த ஆண்டில் கேது பகவான் உங்கள் ராசிக்கு 2-லும், ராகு 8-லும் 5-12-2026 முடிய சஞ்சாரம் செய்வதால் பேச்சில் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் அதனை தவறாக புரிந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக திடீரென்று ஏதாவது உடல் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. அஜீரண கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு செயல்படுவது உத்தமம். தேவையற்ற பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் பயணங்களை தவிர்ப்பது சிறப்பு. ஒரு சிலருக்கு நெருங்கிய உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் கவனமாக இருப்பது, ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது மிகவும் நல்லது.

உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியும் ஆண்டு கோளுமான குரு பகவான் 2-6-2026 முடிய விரைய ஸ்தானமான 12-ம் வீட்டிலும் அதன் பின் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு அநாவசியமாக வாக்குறுதி கொடுப்பதனை தற்காலிகமாக தள்ளி வைப்பது நல்லது. சில நேரங்களில் சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டால் தேவையற்ற வீண் நெருக்கடிகளை சமாளிக்க முடியும்.

ஆண்டின் முற்பாதியில் குரு பகவான் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுப காரிய முயற்சிகளில் தேவையில்லாத இடையூறுகள் இருக்கும். ஜூன் மாதம் முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய இருப்பதன் மூலமாக குரு தனது சிறப்பு பார்வையாக 5, 7, 9-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பார் என்பதால் ஜூனுக்கு பிறகு சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமண வயதை அடைந்த ஆண், பெண்களுக்கு ஆண்டின் பிற்பாதியில் திருமண சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இனிய செய்தி கிடைக்கும். பெரியோர்களுடைய ஆதரவானது இக்கட்டான நேரத்தில் கிடைத்து எதையும் சமாளிக்க கூடிய ஒரு பலம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் ஒரு சில மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஒரு சிலருக்கு வீடுகளை பராமரிப்பதற்காக சுபச் செலவுகள் செய்யக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். பெண்கள் மூலமாக எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு.

ஒரு சில நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் எளிதில் சமாளித்து ஒரு நல்ல வளர்ச்சியினை அடையக் கூடிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். குறிப்பாக நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

ஜூனுக்குப் பிறகு ஜென்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் அதிசாரமாக 2-ம் வீட்டில் 31.10.2026 முதல் சஞ்சாரம் செய்ய இருப்பது உங்களுக்கு மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை தரக்கூடிய அமைப்பு என்பதால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உண்டு. பொருளாதார ரீதியாக மேன்மைகள், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள், உத்தியோக ரீதியாக ஒரு மிகப்பெரிய ஒரு அனுகூலங்கள் ஏற்படக்கூடிய அதிர்ஷ்டங்கள், மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்பு, பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள், உடல் ஆரோக்கியத்தின் சிறப்பான நிலை, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் ஏற்படும்.

 

உடல் ஆரோக்கியம் 

உங்களின் தேக ஆரோக்கியம் சற்று சிறப்பாக இருக்கும். தேவையற்ற அலைச்சல்கள் இருந்தாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் நிதானத்துடன் செயல்பட்டால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. மனைவி, பிள்ளைகளின் அரோக்கியத்திற்கு முக்கியத்தும் தருவது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். பண வரவுகள் சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து மகிழ்ச்சியுடன் வாழ முடியும். சுபகாரிய முயற்சிகளில் மே மாதத்திற்கு பிறகு நல்லது நடக்கும்.

உத்தியோகம்

எந்தவொரு பணியில் ஈடுபட்டாலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பணி சுமைகள் குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். உங்கள் தகுதிக்கு ஏற்ற பதவிகள் தேடி வரும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இனைந்து வாழ முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை முற்றிலும் விலகி நல்ல லாபத்தை அடைவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள் தொழிலில் இனைவார்கள். போட்டி பொறாமைகள் விலகி நல்ல முன்னேற்றத்தை தொழிலில் அடைய முடியும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி ஆதாயம் அடைவீர்கள். வம்பு வழக்குகளில் இருந்த இழுபறி நிலை மாறி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக முடியும்.

அரசியல்

எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் பெற்று நல்ல பதவியை அடைவீர்கள். நினைத்த காரியங்களை நிறைவேற்றி விட முடியும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருந்தால் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். உங்கள் தனி திறமைகளை வெளிபடுத்த சிறப்பான சந்தர்ப்பங்கள் அமையும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைப்பதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

விவசாயிகள்

புழு பூச்சிகளால் இருந்த தொல்லைகள் குறைந்து பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலையினை சந்தையில் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். அரசு வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும். நவீன கருவிகள் வாங்கி விவசாயத்தில் புதிய முறைகளை கையாள்வீர்கள்.

பெண்கள்

கடந்த கால உடல் உபாதைகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் வரும் நாட்களில் நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் மே மாதத்திற்கு பிறகு நல்லது நடக்கும்.

மாணவ மாணவியர்

மாணவ மாணவியர் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க முடியும். மேற்படிப்பிற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. பயணங்களில் கவனமுடன் நடந்து கொள்வது நன்மை அளிக்கும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளைப் பெற முடியும்.

 

பரிகாரம்   

குரு பகவான் 12 மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

உங்கள் ராசிக்கு 2-ல் கேது 8-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9             நிறம் - வெள்ளை, சிவப்பு          கிழமை - திங்கள், வியாழன்

கல் -  முத்து                   திசை - வடகிழக்கு           தெய்வம் - வெங்கடாசலபதி

புத்தாண்டு பலன்கள் - 2026 - மிதுன ராசி

 புத்தாண்டு பலன்கள் - 2026 - மிதுன ராசி

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்

நவகிரங்களில் கல்விகாரன் என வர்ணிக்கப்படக்கூடிய புதனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதில் சிறந்து விளங்கக்கூடிய நபராக இயற்கையிலேயே இருப்பீர்கள். வரும் 2026-ம் ஆண்டில் ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் ஜென்ம ராசியில் 02-06-2026 முடிய சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய குரு பகவான் தனது சிறப்பு பார்வையாக 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. பூர்வீக சொத்து வகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்று ஏங்கியவர்களுக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய அதிர்ஷ்டமானது உண்டாகும். உங்களின் தனித் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 3-ம் வீட்டில் கேது பகவான், பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் ராகு பகவான் 5-12-2026 முடிய சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு ஆகும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு உடன் இருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் ஆண்டின் முற்பாதியில் சற்று பொறுமையோடு இருந்துவிட்டால் பிற்பாதியில் மிகவும் அனுகூலமான பலன்களை அடைய முடியும். ஆண்டின் முற்பாதியில் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொண்டு சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது மிகவும் நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டால் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

ஆண்டு முற்பாதியில் நீங்கள் சற்று நிதானத்தோடு இருந்தாலும் வருகின்ற 02-06-2026 முதல் தன காரகன் குருபகவான் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். உங்கள் வாழ்வில் சகல விதத்திலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குரு மாற்றத்திற்கு பிறகு பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பெற்றோர்களுடைய ஆசியானது மிகச் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக பங்காளியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து பாகப்பிரிவினை தற்போது சுமூகமாக முடியும். கடன் பிரச்சினைகள் குறையக் கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு.

தொழில் வியாபாரத்தில் தொடக்கத்தில் நீங்கள் சற்று நிதானத்தோடு செயல்பட்டால் ஜூன் மாதம் முதல் நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். அரசாங்க வழியில் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் உங்களுக்கு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். குறிப்பாக தொழில் ரீதியாக இருந்து வந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் படிப்படியாக குறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய நபர் அதிகாரியாக வரக்கூடிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கிறது. கடந்த காலங்களில் நீங்க செய்த பணிக்கு தற்போது தக்க சன்மானம் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். மே மாதத்துக்கு பிறகு உங்களின் பொருளாதார நிலையானது சிறப்பாக இருந்து அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு தந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி நிம்மதி ஏற்படும். உங்கள் மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் படிப்படியாக விலகுவதால் பணியில் நீங்கள் அதிக ஈடுபாடுடன் செயல்படக்கூடிய பலம் உண்டாகும்.

ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமான சனி பகவான் இந்த ஆண்டில் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானம் என வர்ணிக்க படக்கூடிய 10-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தோடு செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நீங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு சனியின் சஞ்சாரத்தால் சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளித்து படிப்படியான வளர்ச்சிகளை அடையக்கூடிய பலம் உங்களுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக ஆண்டு முற்பாதியில் சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் ஆண்டு பிற்பாதியில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

உங்களது தேக ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த மருத்துவ செலவுகள் எல்லாம் வருகின்ற நாட்களில் குறைய கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்களை நம்பாமல் சில காரியங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய பலம் உண்டாகும்.

ஜூன் மாதம் முதல் குருபகவான் தன ஸ்தானத்தில் அமையப்பெற்று உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்ய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் குறையக் கூடிய அமைப்பும், வம்பு வழக்குகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய பலமும், கடந்த கால வீண் செலவுகள் குறையக்கூடிய ஒரு யோகமும், புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடிய ஒரு அதிர்ஷ்டமும் ஏற்படும். நீண்ட நாட்களாக நீங்கள் சந்தித்து வரக்கூடிய தேவையற்ற பிரச்சினைகள் எல்லாம் ஆண்டின் பிற்பாதியில் முழுமையாக குறைந்து ஒரு முன்னேற்றமான நிலையினை அடைய கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொண்டு அதன் மூலமாக ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை எட்டக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஒரு சிலர் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

வரும் 2026-ம் ஆண்டில் முதல் ஐந்து மாதங்கள் மட்டும் சற்று நிதானத்தோடு செயல்பட்டு விட்டால் அதன் பிறகு உங்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரிய வளர்ச்சியினை அடையக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உங்களின் பொருளாதார நிலையில் படிப்படியான வளர்ச்சிகள் உங்களுக்கு இருக்கும் என்றாலும் கடன்கள் வாங்குகின்ற பொழுது உங்கள் பெயரில் மட்டும் வாங்காமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது தற்போதைக்கு மிகவும் சிறப்பு.

 

உடல் ஆரோக்கியம்

கடந்த கால அலைச்சல்கள் குறைந்து உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் உங்களால் சமாளித்து விட முடியும். முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

குடும்பம் பொருளாதார நிலை

பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். சிலருக்கு அசையா சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரர்களால் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்திகரமாக செயல்படலாம். உங்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களை பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வானது மே மாதத்திற்கு பிறகு கிடைத்து மனநிம்மதி ஏற்படும். எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இனையும் வாய்ப்பு உண்டாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் பல வகையில் லாபங்களை பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை ஜுன் மாதம் முதல் செயல்படுத்தினால் மிகவும் சாதகமான பலனை பெற முடியும். வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த நெருக்கடிகள் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். மே மாதத்திற்கு பிறகு எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு உங்களின் அனைத்து விதமான பிரச்சினைகளும் குறையும். கடந்த கால வம்பு, வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு செல்வம் செல்வாக்கு பெயர், புகழ், யாவும் உயரக்கூடும். உடனிருப்பவர்கள் மிகவும் சாதகமாக செயல்படுவார்கள். எதிர் அணியினரால் வீண் பிரச்சினைகளும் மன சஞ்சலங்களும் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கட்சியின் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புக்கள் தடையின்றி கிடைக்கும். ஜுன் மாதம் முதல் உங்கள் பொருளாதார நிலை மேலும் சிறப்பாகி உங்கள் வாழ்க்கை தரம் உயரும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பத்திரிக்கைகளில் வரக்கூடிய கிசுகிசுக்களால் சற்று மன நிம்மதி குறையும் என்றாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்து சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலையினைப் பெற முடியும்.  பட்டபாட்டிற்குகான பலனை தடையின்றி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கும். அசையா சொத்து விஷயங்களில் பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

பெண்கள்

எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றியினை பெற முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஜுன் மாதம் முதல் நல்லது நடக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை பெற முடியும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

மாணவ மாணவியர்

மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றி மேல் வெற்றியினை பெற முடியும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. உடன் பழகும் நண்பர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது சிறப்பு.

 

பரிகாரம்   

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது, ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது, சனிப்ரீதியாக அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.

குரு பகவான் ஜென்ம ராசியில் 02.06.2026 முடிய சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,          நிறம் - பச்சை, வெள்ளை,   கிழமை - புதன், வெள்ளி

கல் - மரகதம்          திசை - வடக்கு              தெய்வம் - விஷ்ணு

புத்தாண்டு பலன் - 2026 - ரிஷப ராசி

 

புத்தாண்டு பலன் - 2026 - ரிஷப ராசி

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்

ராசி மண்டலத்தில் இரண்டாவது ராசியான ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு நவகிரங்களில் சுக காரகன் என வர்ணிக்க கூடிய சுக்கிரன் உங்கள் ராசியாதிபதி ஆவார். சுக்கிரனின் ராசியில் பிறந்த நீங்கள் இயற்கையிலேயே ஆடம்பரத்தை அதிகம் விரும்பக் கூடிய நபராக இருப்பீர்கள். உங்களின் கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களை வசிகர படுத்தக் கூடிய இயற்கை சுபாவம் கொண்ட உங்களுக்கு வரும் 2026-ம் ஆண்டின் உங்கள் ராசிக்கு தர்ம கர்மாதிபதியும் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமுமான சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் இந்த ஆண்டு முழுவதும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நீண்ட நாளைய கனவுகள் வரும் நாட்களில் நிறைவேறக் கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. உங்களின் பொருளாதார நிலை மிக மிகச் சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யக்கூடிய அதிர்ஷ்டமானது வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. பண வரவுகள் அதிகப்படியாக இருப்பதால் ஒரு சிலருக்கு வண்டி, வாகனங்களை வாங்கக்கூடிய யோகங்களும் குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான சாதனங்களை வாங்கிக் கொள்ளக்கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டு. உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த வம்பு வழக்குகளில் ஒரு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும்.

குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினிடமிருந்து வந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது முழுமையாக மறைந்து மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்று ஏங்கியவர்களுக்கு வரும் நாட்களில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற மருத்துவ செலவுகள் எல்லாம் தற்போது குறைய கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் நல்ல ஆதரவு கிடைத்து லாபகரமான பலன்களை அடைவீர்கள். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு சமூக சூழ்நிலை உண்டாகி சாதகமாக அமையும். புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய அதிர்ஷ்டமானது வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்களுடைய நிறுவனத்தில் இணைவதால் கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிக்க கூடிய பலம் உண்டாகும். வெளியூர் வெளிநாடு தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது இருக்கிறது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வருவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் தற்போது விடிவு காலம் பிறந்து மன மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு இனிய நிலையினை நீங்கள் அடைவீர்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைந்து வாழக்கூடிய சாதகமான சூழ்நிலை உண்டாகும். சிலருடைய நீண்ட நாளைய ஆசைகள் தற்போது நிறைவேறி மன மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டும் என்று எண்ணி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கு வரும் ஆண்டில் நல்லதோர் சூழ்நிலை உண்டாகி விரும்பிய இடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய ஒத்துழைப்பானது வெளி நபர்கள் மூலமாக கிடைப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும்.

ஒரு சிலருக்கு நீண்ட நாட்களாக சில திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்திருப்பார்கள் அதனை இந்தாண்டு முற்பாதியில் மேற்கொண்டால் அதற்கு சாதகமான சூழ்நிலை உண்டாக கூடிய அமைப்பானது இருக்கிறது. ஒரு சிலருக்கு பங்குச்சந்தைகள் மூலமாகவும் அவர்கள் செய்த முதலீடுகள் மூலமாகவும் நல்ல ஒரு லாபத்தை ஈட்டக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். கடந்த காலங்களில் நீங்கள் மற்றவர்களுக்கு தந்த கடன்களை தற்போது வசூல் செய்யக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. குறிப்பாக உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகள் தற்போது கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தற்போது குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் இருந்து வந்த மனக் கவலைகள் எல்லாம் தற்போது மறைந்து மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் வரும் நாட்களில் நடக்கும். பூர்வீக சொத்து வகையில் பங்காளியின் வழியில் நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தற்போது மறைந்து பங்காளிகளிடையே சரியான முறையில் பாகப்பிரிவினை ஏற்பட்டு உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்துக்கள் வரும் நாட்களில் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டமானது இருக்கிறது. சிலருக்கு உல்லாச பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு.

இந்தாண்டில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ல் 02-06-2026 முடிய சாதகமாக சஞ்சரிப்பதால் ஆண்டின் முற்பாதியில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பொருளாதார ரீதியாக மிகப்பெரிய ஒரு முன்னேற்றம் ஏற்படும். சுப நிகழ்வுகள் கைகூடும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருப்பதால் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உங்களுக்கு உண்டாகும். உறவினர்களின் ஆதரவானது மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களது தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் முன்பை விட சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த மனக் கவலைகளை எல்லாம் தற்போது குறையும்.

வரும் 02-06-2026 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ம் வீட்டுக்கு மாறுதலாகி சஞ்சரித்தாலும் சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அனுகூலமான பலன்களே நடக்கும். குரு 3-ல் சஞ்சரிக்கின்ற பொழுது தனது 5-வது பார்வையாக 7-ம் வீட்டை பார்ப்பார் என்பதால் கணவன்- மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, குடும்பத்தில் நல்லது நடக்கக்கூடிய யோகம், நெருங்கியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பு எல்லாம் உங்களுக்கு இந்த ஆண்டில் உண்டு. ஆண்டின் பிற்பாதியில் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருந்தால் மிகவும் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

நவகிரங்களில் சர்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு- கேது இந்த ஆண்டில் குறிப்பாக ராகு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிலும், கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலும் திருக்கணித சித்தாந்தப்படி 5-12-2026 முடிய சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு தாய் வழியில் சின்ன சின்ன மனக் கவலைகள், தேவையற்ற அலைச்சல்கள் சில ஏற்படலாம் என்றாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டு. தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் இருந்தாலும் நீங்கள் எதையும் எதிர்கொண்டு லாபகரமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனியின் சாதக சஞ்சாரத்தால் வருகின்ற 2026-ம் ஆண்டில் உங்கள் வாழ்வில் ஒரு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படக்கூடிய ஆண்டாக இருக்கும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் எல்லா காரியங்களிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிகளைப் பெற முடியும். நீண்ட நாட்களாக சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடல் நிலை சிறப்பாகி மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்கள் சிறப்பான ஆரோக்கியத்துடன் இருப்பதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

குடும்பம் பொருளாதார நிலை

பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதி நவீன பொருட்களின் சேர்க்கை, ஆடை ஆபரண வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் மே மாத்திற்குள் நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஏற்றங்களை அடைய முடியும்.

உத்தியோகம்

கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் முற்றிலும் மறைந்து செய்யும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவுபடுத்தும் யோகம் ஏற்படும். உங்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். 

கொடுக்கல்- வாங்கல்

பணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகி உங்களுக்குள்ள சிக்கல்கள் எல்லாம் முழுமையாக குறையும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்

உங்களின் பெயர், புகழ் உயரக் கூடிய காலமாக இந்த ஆண்டு இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மறைமுக வருவாய் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மேடை பேச்சுகளில் கவனமுடன் இருப்பது மூலம் தேவையற்ற வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

கலைஞர்கள்

வரவேண்டிய பணவரவுகளில் இருந்த இழுபறி நிலை விலகி தக்க நேரத்தில் வந்து சேரும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து பெயர், புகழ் உயரும். வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் நல்ல நிலை ஏற்பட்டு மன நிம்மதி ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் உழைப்பிற்கேற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம், பூமி, மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்கள் கைகூடும். பண விஷயங்களில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் மன நிம்மதி உண்டாகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடம் இருந்த பகை விலகும். பிறந்த இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். மண வயதை அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். அழகிய குழந்தையை பெற்று எடுக்கும் யோகம் இவ்வாண்டில் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள்.

மாணவ- மாணவியர்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று படிக்க கூடிய வாய்ப்பு உண்டாகும். நல்ல நண்பர்களின் தொடர்புகளால் மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.

 

பரிகாரம்   

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 3-ல் 02.06.2026 முதல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

உங்களுக்கு ராசிக்கு கேது 4-லும், ராகு 10-லும் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8          நிறம் - வெண்மை, நீலம்,      கிழமை - வெள்ளி, சனி

கல் -  வைரம்          திசை - தென்கிழக்கு,             தெய்வம் - விஷ்ணு, லட்சுமி

புத்தாண்டு பலன்கள் - 2026 - மேஷ ராசி

ஒம்சரவணபவா

புத்தாண்டு பலன்கள் - 2026 - மேஷ ராசி

 

 கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்

ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷ ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதி செவ்வாய் என்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய நபராக இருப்பீர்கள். வரும் 2026-ம் ஆண்டில் ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ல் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரையச் சனி நடப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் ஆகும். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருக்க வேண்டும். எதிர்பாராத வகையில் வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலையைப் புரிந்து நடந்து கொள்வது மிகவும் நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பதும் மிகவும் சிறப்பு. முடிந்தவரை தேவையற்ற தூரப் பயணங்களை தள்ளி வைப்பது மிகவும் நல்லது. மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியத்திலும் சற்று அக்கறை செலுத்த வேண்டும். எந்த ஒரு உடல் பாதிப்பு என்றாலும் அதை ஆரம்ப கட்டத்திலேயே பார்க்கின்ற பொழுது தேவையற்ற வீண் மருத்துவ செலவுகளை குறைப்பதற்கு வழிவகுக்கும். வீட்டில் வயதில் மூத்தவர்கள் இருந்தால் அவர்கள் மூலமாக எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் முடிந்த வரை நீங்கள் மருத்துவ காப்பீடுகள் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் மன தைரியத்தோடு செயல்பட்டால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளித்து ஏற்ற மிகுந்த பலன்களை அடைய முடியும். ஒரு சில காரியங்களில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் மற்றவர்கள் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் கூட தடைப்படக்கூடிய காலமாகும்.

வரும் ஆண்டில் சர்ப கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திலும், கேது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலும் இந்த ஆண்டு முழுவதும் குறிப்பாக 05-12-2026 முடிய சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர். ராகு 11-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத சில அனுகூலங்களை நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, நேரத்திற்கு சாப்பிடுவது மிகவும் நல்லது.

கணவன்- மனைவி இடையே ஒற்றுமையானது மிகச் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிக்கக் கூடிய பலம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் உறுதுணையால் ஒரு சில இக்கட்டான நிலையினை தாண்டி வரக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. பூர்வீக சொத்து வகையில் தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்படலாம் என்பதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் தேவையில்லாத மனக்கவலைகள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அவர்களை கையாளுகின்ற பொழுது சற்று பக்குவமாக கையாள்வது மிகவும் நல்லது.

உங்கள் ராசிக்கு 9, 12-ம் அதிபதியும் ஆண்டு கோளான குரு பகவான் இந்த ஆண்டில் வரும் 02-06-2026 முடிய உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத்தோடு இருப்பது மிக மிக நல்லது. 3-ம் வீட்டில் சஞ்சரிக்க கூடிய குரு பகவான் தனது சிறப்பு பார்வையாக 7-ம் வீட்டை பார்ப்பார் என்பதால் ஆண்டின் முற்பாதியில் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவால் ஒரு சில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

வரும் 2-6-2026 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆண்டின் பிற்பாதியில் நெருக்கடிகள் சற்று குறைந்து படிப்படியான வளர்ச்சிகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதை அனுபவிப்பதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். அசையும், அசையா சொத்து வகையில் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். குறிப்பாக வண்டி, வாகனங்கள் மூலமாக எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவதில் ஒரு சில இடையூறுகள் ஏற்படும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது மிகவும் நல்லது.

ஜூன் முதல் உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்க கூடிய குரு 31.10.2026 முதல் அதிசாரமாக 5-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஒரு மிகப்பெரிய அணுகூலங்கள், தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம், உத்தியோகத்தில் வளர்ச்சி, குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கக்கூடிய அமைப்புகள் அசைவு, அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடப்பதால் உங்கள் பெயரில் கடன் வாங்குவதை தற்காலிகமாக தள்ளி வைப்பது மிகவும் நல்லது. அப்படி கடன் வாங்கக் கூடிய இக்கட்டான சூழ்நிலை இருந்தால் அதனை உங்கள் பெயரில் வாங்காமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது தற்போதைக்கு சிறப்பு. தொழில் வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் தான் போட்ட முதலை எடுக்க முடியும். பெரிய வாய்ப்பு எதிர்பார்க்காமல் கிடைக்கக்கூடிய சிறிய வாய்ப்பையும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் உங்களுக்கு ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் தொடர்பான கணக்குகளை சரியான முறையில் பராமரிப்பதன் மூலமாக தேவையற்ற சட்ட சிக்கல்களை தவிர்க்க உதவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு சற்று கூடுதலாக இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கண்ணும் கருத்துமாக இருந்தால் எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்கள் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி தற்போது இருக்கக்கூடிய வாய்ப்பை தவறவிடாமல், இருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஒரு சில நேரங்களில் நீங்கள் தன்னிலை மறந்து உணர்ச்சிவசப்படக் கூடிய நேரம் என்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு முடிந்தவரை பொறுமையை கடைப்பிடிப்பது மிக மிக நல்லது. நெருக்கடியான நேரம் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டு வீண் பிரச்சினைகளை தவிர்த்தால் மட்டுமே போட்டிகள் நிறைந்த உலகில் அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகளும், வரும் நாட்களில் உங்களது குல தெய்வ வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக எதிர்மறை சக்தியில் இருந்து விடுபட்டு ஏற்றங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது, முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்களால் உடல் நிலையில் சோர்வு ஏற்படும் என்றாலும் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

பொருளாதார ரீதியாக பணவரவுகளில் முன்னேற்றம் இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு நல்லது நடக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது.

உத்தியோகம்

பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் நல்ல வாய்ப்புகளும் சிறு தடைகளுக்குப் பின் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் சற்று தாமதமாக கிடைக்கும். பணியில் வீண் அலைச்சல், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும் என்றாலும் உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகி ஏற்றம் அடைவீர்கள்.

அரசியல்

பெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருக்காது. எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். பெரியோர்களின் ஆசியால் ஒரளவுக்கு நற்பலன்களை அடைய முடியும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலங்களை அடைவீர்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது சிறப்பு.

கலைஞர்கள்

பொருளாதார ரீதியாக தேக்க நிலை இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்கள் பெயரை காப்பாற்றி கொள்ள முடியும். தேவையற்ற அலைச்சல்களால் மன அமைதி குறையும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் உடன் இருப்பவர்களிடம் பேச்சில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் உதவியால் உங்களின் நெருக்கடிகள் சற்று குறையும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் நெருங்கியவர்களின் உதவியால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும், திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பெரியோர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை ஏற்படுத்துவதாக அமையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை ஏற்படும் நேரம் என்பதால் முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியரிடம் வீண் வாக்கு வாதங்களை குறைத்து கொண்டு படிப்பில் கவனமாக செயல்பட்டால் நற்பெயரை பெறுவீர்கள்.

 

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி 12-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வது, நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது நல்லது. கருப்புநிற ஆடை, கைக்குட்டை பயன்படுத்துவது நல்லது. சனிப்ரீதியாக அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.

குரு பகவான் இந்தாண்டு 3, 4-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

கேது 5-ல் சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9,            நிறம் - ஆழ்சிவப்பு                       கிழமை - செவ்வாய்

கல் - பவளம்           திசை - தெற்கு                   தெய்வம் - முருகன்