Sunday, May 6, 2012

குரு பெயர்ச்சிபலன்கள் ரிஷப ராசி

ஆடம்பர வாழ்க்கையிலும், அழகாக ஆடை அணிவதிலும் அதிக ஆர்வம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே!

ஆண்டுக் கோளான குருபகவான் வரும் 17.05.2012 முதல் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செ;யவுள்ளார். ஜென்ம ராசியில் கேது வும் 7ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் பண விஷயங் களில் கவனமுடன் செயல்படுவது திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை பெறமுடியும், என்றாலும் உங்கள் ஜென்ம ராசிக்கு தர்ம கர்மாதிபதியான சனி பகவான் குணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் உச்சம் பெற்று பலமாக சஞ்சரிப்பதால் குருவால் ஏற்படகூடிய பிரச்சனைகள் குறைந்து வாழ்வில் முன்னேற்றங்களை அடைய முடியும். 02.12.2012ல் ஏற்படக்கூடிய சர்ப கிரகமாற்றத்தின் மூலம் ராகுபகவானும் 6ம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் மேலும் உங்களின் பலமும் வலிமை யும் கூடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக உள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். பொருளாதாரம் உயரும் கடன்கள் சற்று குறையும்.


முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

 

 

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Name ; MurughuRajendran
Bank name - Indianbank
Savings Account No - 437764153
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
தேக ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அஜீரண கோளாறு போன்றவை உண்டாகும். மனைவி மற்றும் நெருங்கியவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி விரோதிகள் நண்பர்களாக செயல் படுவதால் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் மற்றவர்களின் உதவிகள் தடையின்றி கிடைத்து எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். குருபகவான் கேது சேர்க்கைப் பெற்று ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பொரு ளாதார நிலையானது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யுமளவிற்கு அமையும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். கணவன் மனைவியடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குருபார்வை 7ம் வீட்டிற்கு இருப்பதால் பெரிய கெடுதிகள் ஏற் படாது. உற்றார் உறவினர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆடம்பர செலவு களை குறைத்துக்கொண்டால் கடன்கள் உண்டாவதை தவிர்க்கலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் போன்ற யாவும் தடையின்றி கிட்டும். பணியிலும் நிம்மதியான நிலையிருக்கும். திறமைகளை வெளிப்படுத்து வதற்கான சந்தர்ப்பங்களும் கிடைப்பதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், ஆதரவும் சிறப்பாக அமையும். வெளியூர் வெளிநாடு களுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன் பணிபுரிபவர்களும் ஒத்துழைப்புடன் செயல்படு வதால் வேலைபளு குறையும்.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி ஓடும். என்றாலும் எதிர்பார்த்த லாபங்களும், புதிய வாய்ப்புகளும் சற்று தாமதப்படும். குறித்த நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் அனுகூலம் கிட்டும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றலும் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம்.

கமிஷன், ஏஜென்ஸி

தனக்காரன் குருபகவான் உங்கள் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் பணவிஷ யங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றத் துறைகளிலிருப்போருக்கு சுமாரான லாபமே கிட்டும். முடிந்தவரை பெரிய முதலீடு களை ஈடுபடுத்துவதை தவிர்ப்பதால் வீண் விரயங்கள் ஏற்படுவதையும் குறைக்க முடியும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல் வாதிகள் பதவிகளை தக்கவைத்துக் கொள்ள மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவது நல்லது. எடுக்கும் முயற்சிக ளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடுவதால் பொருளாதார நிலை சற்று மந்தமடையும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் பட்டபாட்டிற்கான பலனை சற்று கஷ்டப்பட்டாவது அடைந்து விடுவார்கள். விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையினைப் பெற முடியாமல் போகும். கால்நடைகளால் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டு. புதிய முயற்சிகளில் ஈடு படும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

பெண்களுக்கு

குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறை யாது. முடிந்தவரை குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் தேவைகேற்ற படியிருந்தாலும் ஆடம்பரமாக செலவுகள் செய் வதை தவிர்த்து விட்டால் கடன்கள் ஏற்படுவதை யும் குறைக்கலாம். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணிபுரியவர்களுக்கும் உயர்வுகள் ஏற்படும்.

படிப்பு

கல்வி பயிலுபவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்து மகிழ்ச்சியடைவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் மேலும் மேலும் உற்சாகத்தை அளிக்கும். உல்லாசப் பயணங்கள் செல்லும் வாய்ப்புகளும் கிட்டும். தேவையற்ற நட்புகள் விலகி நல்ல நண்பர்களின் ஆதரவும் மகிழ்ச்சிதரும். அரசு வழியில் ஆதரவுகள் சற்று தாமதமாகும்.

ஸ்பெகுலேஷன்

லாடட்டரி, ரேஸ் போன்றவற்றில் பெரிய தொகை களை ஈடுபடுத்தினால் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள்.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் இக்காலங்களில் கேது சேர்க்கைப் பெற்று ஜென்ம ராசியிலேயே சஞ்சரிக்கிறார். குரு ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும் கேது சேர்க்கையுடனிருப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றகூடும் என்பதால் அனை வரையும் அனுசரித்து செல்வது நல்லது. ஜென் மராசியில் கேதுவும் 7ல் ராகுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். தொழில் வியா பாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதும் உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்க ளுக்கும் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில்  30.06.2012 முதல் 10.10.2012 வரை

குருபகவான் ஜென்ம ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் பொருளாதார நிலை சுமாராகத்தானிருக்கும். பணம் கொடுத்தால் திரும்ப பெறுவது கடினமான காரியமாகும். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப் பதை தவிர்ப்பதும் நல்லது. குடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்தாலும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். வரும் 12.09.2012 முதல் மீண்டும் சனி துலா ராசியில் 6ம் வீட்டில் சஞ்சரிக்க இருப் பது அற்புதமான அமைப்பு என்பதால் எந்தவித வம்பு வழக்குகள், போட்டி பொறாமைகள் யாவும் இல்லாமல் மனநிம்மதி உண்டாகும். பொருளாதார நிலையும் சற்று உயரும். தொழில் வியாபாரம் செய்பவர்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களும் உயர் வடைவார்கள். அரசியல் வாதிகளின் பேச்சிற்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும், கௌரவமும் உயரும்.

குருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பே என்றாலும் சனி 6ல் பலமாக சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றிப் பெறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டா கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்ச pகளில் தடைகள் நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள  சர்பகிரக மாற்றத்தால் ராகு பகவான் 6ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது மேலும் உங்கள் பலத்தை அதிகரிக்கச் செய்யக்கூடிய அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த நெருக்கடிகள் குறைந்து உயரதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

குருபகவான ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்திப்பீர்கள். இது மட்டுமன்றி 6ல் சஞ்சரிக்கும் சனியும் வக்ர கதியி லிருப்பதால் இக்காலங்களில் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறைவு, உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடு போன்ற யாவும் ஏற்பட்டு மன உளைச்சலை உண்டாக்கும். குடும்பத் தேவை களைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டி வரும். நீங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டாலே பிரச்சனைக்கு உள்ளாவீர்கள். தொழில் வியாபாரத்திலும் போட்டிகளை எதிர் கொள்ள நேரிடும். மறைமுக எதிர்ப்புகளால் வரவேண்டிய வாய்ப்புகளும் தட்டி செல்லும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறு களுக்கும் பொறுப்பேற்க வேண்டிய காலம் என்பதால் பணியில் கவனமுடனிருப்பது நல்லது. வேலை பளுகூடும். 

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

இக்காலங்களிலும் எதிலும் சிந்தித்து செயல்படு வதே நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே தேவை யற்ற பிரச்சனைகளை உண்டாக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் வீண் விரயங் கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும், 6ல் ராகு இருப்பதால் எதையும் சமாளித்து விடக் கூடிய ஆற்றலையும் பெறுவீர்கள். உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். அரசியல்வாதி கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் உடனிருப்பவர்களிடம் கவனமுடனிருப்பதும் மிகவும் உத்தமம்.

கார்த்திகை 2,3,4 பாதங்கள்

இயற்கையிலேயே நல்ல தைரியமும் துணிவும் கொண்டு கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குருபகவான் சற்று சாதகமற்று சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவிஷயத்தில் கொடுத்ததை கேட் டால் அடுத்தது பகையாகிவிடும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகள் நிலவும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நன்மையளிக்கும்.

ரோகிணி

எந்த எதிர்ப்புகளையும் திறமையுடன் சமாளிக்க கூடிய ரோகினி நட்சத்திர நேயர்களே குருவின் சாதகமற்ற சஞ்சாரத்தால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டாலும் சனிபகவான் 6ல் சஞ்சரித்து உங்கள் குறைகளை தீர்ப்பார் என்றாலும் பண விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்றாலும் எதிர்பார்த்த லாபங்கள் சற்று தாமதப்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த நேரிடும். புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

மிருகசீரிஷம்

எதிலும் சிந்தித்து செயல்படும் மிருகசீரிஷ நட்சத்திர நேயர்களே! குரு ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருந்தாலும் தேவையற்ற விரயங்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் அமையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும். 

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 6,15,24

 திசை: தென்கிழக்கு

கிழமை: வெள்ளி

 கல்: வைரம்

நிறம்:வெள்ளை

 தெய்வம்:ஸ்ரீலக்ஷ்மி

பரிகாரம்

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குருஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழக் கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு கொண் டைக்கடலை மாலை சாற்றி நெய்தீபமேற்றி வழிபடுவது உத்தமம் 02.12.2012 வரை கேது ஜென்ம ராசியிலும் ராகு 7லும் சஞ்சரிப்பதால் துர்க்கை வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்



முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

 

 

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

Saturday, May 5, 2012

குரு பெயர்ச்சிபலன்கள் மேஷ ராசி


நல்ல நிர்வாகத் திறனைக் கொண்ட மேஷ ராசி நேயர்களே!

பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவான் 17.05.2012 முதல் உங்கள் ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2ம் வீட்டில் சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சித் தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறுவதுடன், சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்ககூடிய யோகமும் உண்டா கும். குரு 6,8,10 ஆகிய வீடுகளை பார்வை செய்வதால் தொழில் வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றிலும் மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். சனி 7ல் சஞ் சரிப்பதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சர்ப கிரகங்களும் சாதக மின்றி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பதும் உத்தமம். கூட்டு தொழில் செய்பவர்களும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் சரள மாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன் பொருள் சேரும்.




முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்

மாபெரும் குருபெயர்ச்சி யாகம்

0091 7200163001,9383763001

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி  ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம்  குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்

    அன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300  (ரூபாய் 1200  வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன்,   தொடர்புக்கு ஜோதிடமாமணி  முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல்  7200163001.9383763001 ,

 

 

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail: murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.

Bank account details are

Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் பணிகளை அன்றாடம் சுறுசுறுப்புடன் செய்து முடிக்க முடியும். அவ்வப் போது கைகால்களில் வலி, உடல்சோர்வு, மந்தநிலை ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களுக்கும் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும். பெரிய கெடுதியில்லை.

குடும்பம் பொருளாதார நிலை

உங்கள் ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 2ல் தனக்காரகன் குருபகவான் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தன வரவுகளும் உண்டாகி குடும்பத்தில் மேன்மை ஏற்படும். திருமண சுபகாரியங்களும் தடையின்றி கைகூடும். புத்திரர்களாலும் மகிழ்ச்சி நிலவும். 7ம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அற்புதமான நற்பலனை பெறமுடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்து சேர்க்கைகளும், ஆடை ஆபரணமும் சேரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பதவி உயர்வுகள் கிடைக்க சற்று தாமதமாகலாம். சில ருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படுவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர் பார்த்த லாபங்கள் தடையின்றி கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வருவதால் லாபங்கள் பெருகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும், வாக்குவாதங்களும் ஏற்படும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக் கும் காரியங்களில் தடையில்லாமல் லாபம் கிட்டும்.

கமிஷன் ஏஜென்ஸி

கமிஷன் ஏஜென்ஸி மற்றும் காண்டிராக்ட் துறையிலிருப்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். பெரிய தொகைகளை எளிதில் ஈடு படுத்தி பல மனிதர்களின் தொடர்பையும், நட்பையும் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். உங்களுக் குள்ள வம்பு வழக்குகளிலும் வெற்றி கிட்டும்.

அரசியல் வாதிகளுக்கு

அரசியல்வாதிகளுக்கு ஏற்றத்தை அளிக்கும் காலமாக இருக்கும். பல பெரிய பதவிகள் தேடி வரும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து பல பெரிய மனிதர்களின் தொடர்பையும் மக்களின் ஆதரவையும் அமோகமாகப் பெறுவீர்கள். உடன் பழகுபவர்களிடம் சற்று நிதானமுடன் நடந்துகொள்வது நல்லது.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக அமை வதால் லாபமும் தாராளமாகவே இருக்கும். புதிய முயற்சிகளிலும் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். கால்நடைகளாலும் லாபத்தை பெற முடியும். கூலியாட்களாலும் சிறு சிறு பிரச்சனை களை சந்தித்தாலும் மக்கள் எதிர்பார்த்தபடி இருக்கும். 

பெண்களுக்கு

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்களும் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். உற்றார் உறவினர்களால் அனுகூலமானப் பலன்கள் ஏற்பட்டாலும் சில நேரங்களில் சிறு சிறு பிரச்ச னைகளையும் சந்திப்பீர்கள். சிலருக்கு பூமிமனை யோகமும், ஆடை ஆபரண சேர்க்கைகளும் தாராளமாகவே இருக்கும்.

படிப்பு

கல்வி பயிலும் மாணவ மாணவிகள் எதிர்பார்த்த படி நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். விளையாட்டு போட்டிகளிலும் கலந்துகொண்டு பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகி வாழ்க்கை தரமும் உயரும்.

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு கேது சேர்க்கைப் பெற்று இருப்பது கோடீஸ் வரயோகத்தை உண் டாக்கும் அமைப்பாகும். இதனால் குடும்பத்தின் பொருளாதாரநிலையானது சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் காரியங்களில் முன்னேற்றமான நிலை ஏற்படும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருப்ப தால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். போட்டி பொறாமைகள் இருக்காது. பயணங்களாலும் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். கடன்களும் படிப்படியாக குறையும்.

குருபகவான் ரோகினி நட்சத்திரத்தில் 30.06.2012 முதல் 10.10.2012 வரை

உங்கள் ஜென்ம ராசிக்கு 2ம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இக்காலங்களிலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணம் பல வழிகளில் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். 2ல் கேது, 8ல் ராகு சஞ்சரிப்ப தால் உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வதால் நற்பலனை பெறமுடியும். தொழில் வியாபாரம் செய்பவர்க ளுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் லாபம் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்பு டையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறமை களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் கௌரவமான பதவிகளும் கிடைக்கும். சேமிப்புகள் பெருகும். 

குருபகவான் வக்ர கதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை

தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் இக்காலங்களில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவிவகாரங்களில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கொடுக்கல் வாங்கல் போன்ற வற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். சனி 7ல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடு களும், உற்றார் உறவினர்களிடையே வாக்கு வாதங்களும் ஏற்படும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர் களும், குறிப்பாக கூட்டுத் தொழில் செய்பவர் களும் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வரும் 2.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது ஜென்ம ராசியிலும், ராகு 7லும் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் சற்று கவன முடனிருப்பதும் மற்றவர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தி யோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு கூடும்.

குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை

குருதனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இக் காலங்களில் பல மேன்மைகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். 7ல் சஞ்சரிக்கும் சனியும் வக்ரகதியிலிருப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் பலமும் வளமும் கூடும். ஜென்ம ராசியில் கேதுவும் 7ல் ராகுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்து வது நல்லது. உற்றார், உறவினர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. தொழில் வியா பாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபம் அமையும். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகளும் தடையின்p அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறி பொருளாதாரமும் உயரும். கல்வி பயிலுபவர் களுக்கு அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும்.

குருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை

குருபகவான் தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 7ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலும் இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். சுபகாரியங் கள் தடபுடலாக காணப்பெறும். புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் படிப்படி யாக குறையும். கொடுக்கல் வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். ராகுகேது சாதகமற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், உற்றார் உறவினர்களிடம் விட்டுகொடுத்து நடப்பதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அரசி யல் வாதிகளின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதை யும் உயரும். மாண்புமிகு பதவிகளும் கிட்டும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலா கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அஸ்வினி

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு பொதுவாக எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகம் இருக்கும். இந்த குருபெயர்ச்சியின் மூலம் குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 2ல் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.

பரணி

பரணியில் பிறந்து தரணியை ஆளக்கூடிய ஆற் றல் கொண்ட உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி யானது சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும். கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மகிழ்ச் சிக்கும், சுபிட்சத்திற்கும் பஞ்சம் இருக்காது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுமளவிற்கு பலமும் வலிமையும் கூடும். உத்தியோகஸ் தர்களுக்கு தடைபட்டு வந்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். சேமிப்புகள் பெருகும் கொடுத்த கடன்களும் வசூலாகும்.

கார்த்திகை

சிறந்த உழைப்பாற்றலும் எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு இந்த குருபெயர்ச்சியானது பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை கொடுக்கும் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங் களிலும் வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியா பாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகஸ் தர்களும் உயர்வடைவார்கள். பதவி உயர்வு களும் கிடைக்கும். 

அதிர்ஷ்டம் அளிப்பவை

திகதி: 9,18,27  திசை: தெற்கு
கிழமை: செவ்வாய் கல்: பவளம்
நிறம்: ஆழ்சிவப்பு தெய்வம்: முருகன்

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் சாதகமாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். என்றாலும் சனி 7ல் சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. சர்ப கிரகங்களும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்பசாந்தி செய்வது, ராகுகாலங்களில் துர்க்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.





Friday, May 4, 2012

துலாம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சந்திர பகவானாவார். இவர் ஒரு வீட்டு ஆதிபத்யம் கொண்டவர். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று குரு போன்ற சுபகிரக சேர்க்கையுடன், நட்பு கிரக வீடுகளில் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகருக்கு சமுதாயத்தில் கௌரவத்துடன் வாழக்கூடிய அற்புதமான அமைப்பு, தொழில் ரீதியாக கை நிறைய சம்பாதித்து சுக வாழ்க்கை வாழக்கூடிய யோகம் உண்டாகும்.

 சந்திரன் ஜல காரகன் என்பதால், அவர் துலாம் லக்னத்திற்கு 9,12 க்கு அதிபதியாக விளங்கக்கூடிய புதன் பகவானின் சேர்க்கை பெற்று 9 அல்லது 12 ல் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகர் கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று தொழில், உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், அந்திய நாட்டவர்களால் அனுகூலங்களும் உண்டாகும்.  குரு, சந்ஙதிரன் ஆட்சி உச்சம் பெற்று 10 ம் வீட்டில் பலமாக அமையப் பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த  பணிகளில் உயர் பதவிகள் வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். குரு சந்திரன் பலம் பெற்று சனி, புதன் வீட்டில் இருந்தாலும், துலாம் லக்னத்திற்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோக காரகனாகிய சனி பலம் பெற்று அமைந்திருந்தாலும், அரசாங்க அதிகாரியாகவும், அரசுத் துறையில் பணிபுரிபவராகவும் இருக்கக்கூட வாய்ப்பு உண்டாகும். அதுபோல சந்திரனுக்கு நட்பு கிரகங்களாகிய சூரியனும் குருவும் பலம் பெற்று அமைந்தாலும் அரசுத் துறையில் பணியுரியக்கூடிய வாய்ப்பு அமையும். 

துலாம் லக்னத்திற்கு ஜீவன ஸ்தானத்தில் அந்த வீட்டதிபதியான சந்திரன் தனித்து ஆட்சிப் பெற்று பலமாக அமைந்திருந்தால் ஜல சம்பந்தப்பட்ட தொழில், உணவு சம்பந்தப்பட்ட தொழில், ஹோட்டல் தொழில் போன்றவற்ல் நல்ல லாபம் அமையும். மேலே குறிப்பிட்டது போல சந்திரன் ஜல காரகன் என்பதால், கடல் சார்ந்த துறைகளில் கூட பணி புரியக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.  சூரியன், செவ்வாய் 10ல் பலம் பெறுகின்றபோது அரசு துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நல்ல நிர்வாகத் திறன் உண்டாகும். குரு 10ல் பலம் பெற்றிருந்தால் சிறந்த ஆலோசகராக விளங்கக்கூடிய வாய்ப்பு, தொழில் ரீதியாக முன்னேற்றம், வாக்கால் பேச்சால் சம்பாதிக்கக்கூடிய யோகம், வக்கில் பணி, ஆசிரியர் பணி போன்றவை உண்டாகும்.  சுக்கிரன் பலம் பெற்று உடன் சந்திரன் 10ல் அமையப் பெற்றால் கலை, இசை, சினிமாத்துறை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.  சந்திரன், செவ்வாய் பலம் பெற்று 10ல் அமையப் பெற்றால் கலை, இசை, சினிமாத்துறை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

சந்திரன், செவ்வாய் பலம் பெற்று 10ல்  அமைந்தால் பூமி, மனை சம்பந்தப்பட்ட தொழிலில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

புதன் பலம் பெற்று 10ல் அமைந்து குரு பார்வை இருக்குமேயானால் கணக்கு, கம்ப்யூட்டர், தொழில் மற்றும் வணிக தொடர்புடைய தொழிலில் சம்பாதிக்க முடியும். புதன், சந்திரன் சேர்க்கை பெற்று 10ல் கேது சந்திரன் சேர்க்கை பெற்றால் மருந்து, கெமிக்கல் தொடர்புடைய தொழில் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று  சுபர்சேர்க்கையுடன் அமைந்து 10ம் வீட்டிற்கும் குரு பார்வை இருந்தால் நிலையான வருமானம் உண்டாகும். அதுவே சந்திரன் பலமிழந்து சனி 10 ம் வீட்டில் அமைந்தாலும் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் 10ம் வீட்டில் அமையப் பெற்றாலும் அடிமைத் தொழில்  செய்யக்கூடிய நிலை, சில சட்டத்திற்கு விரோதமான தொழில்கள் செய்து சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சனி பார்வை 10 ம் வீட்டிற்கு இருந்தாலும், சந்திரனுக்கு இருந்தாலும் தொழில்  ரீதியாக நிறைய போரட்டங்களைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருந்து சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் நிலையான தொழில் என்பது அமையாமல் வாழ்க்கையானது போராட்டகரமாகவே இருக்கும்.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Wednesday, May 2, 2012

கன்னிலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10 ம் அதிபதி புதன் பகவானாவார். லக்னாதிபதி புதன் பகவானே ஜீவனாதிபதியாகவும் இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். பொதுவாகவே, கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாளியாகவும் எதிலும் சிந்தித்து செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ஆட்சி உச்சம் பெற்று தனக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், சனி போன்றவர்களின் சேர்க்கை பெற்று, குரு போன்ற சுபகிரகங்களின் பார்வைப் பெற்றால் சமுதாயத்தில் சிறப்பான உயர் நிலையினை அடைவார்கள். அதிகாரமிக்க பதவிகளை அடையக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். புதன் வலுப்பெறுவது மட்டுமின்றி உடன் செவ்வாய் சூரியன் சேர்க்கை உண்டானால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்வான பதவிகளை அடைய கூடிய யோகம் அமையும். இத்துடன் சனியும் பலம் பெற்று அமைந்து விடுமாயின் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவிகள் ஜாதகரைத் தேடி வரும். இது மட்டுமின்றி புதன் கேந்திர திரிகோணங்களில் சூரியன் சேர்க்கை பெற்று சந்திரனும் பலமாக அமைந்த குரு பார்வை செய்தாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பும் அதன் மூலம் பொருளாதார மேன்மைகளும் பெற்று வாழ்வில்  உயர்வு உண்டாகும்.

புதன் பகவான் சுக்கிரன், சனி போன்ற நட்பு கிரக சேர்க்கைப் பெற்று வலுவாக அமையப் பெற்றால் சொந்தத்தொழில் செய்யும் யோகம், வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் அற்புத நிலை உண்டாகும். புதனுடன் சுக்கிரன், சந்திரன் சேர்க்கை உண்டாகி 9,12 ல் ராகு பகவான் அமையப் பெற்றால் ஜாதகர் கடல் கடந்து வெளிநாடு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

புதனுடன் சந்திரன் அமைந்து சுக்கிரனும் சேர்க்கை பெற்றால், பயிர் தொழிலில் செய்யக்கூடிய அமைப்பு, புதனுடன் செவ்வாய் சேர்க்கைப் பெற்றால் பூமி, வேளாண்மை, விவசாய தொடர்புடைய பணிகள் அமையும். புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று வலுப்பெற்றிருந்தால் கலை, இலக்கியம், சங்கீத துறையில் புகழ் பெறும் அமைப்பு உண்டாகும்.
புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று, கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்று, உடன் குரு பார்வையும் இருந்தால் பெண்கள் வழியிலும், பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில்களிலும் சம்பாதிக்கக்கூடிய (பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் ) வாய்ப்பு அமையும். இது மட்டுமின்றி கணிதம், கம்ப்யூட்டர் துறையில் வல்லவராகத் திகழ்வார். புதன் தனித்து பலம் பெற்று குரு போன்ற சுபகிரகங்களின் பார்வை இருந்தால் ஆசிரியர் பணி, பதிப்பகம், பத்திரிகைத் தொழில், புத்தகம் வெளியிடும் பணி, வக்கீல் தொழில், வாக்கால் பேச்சால், முன்னேறக்கூடிய தொழில் போன்றவற்றில் அனுகூலங்கள் உண்டாகும். புதன் தனக்கு நட்பு கிரகங்களான  சுக்கிரன், சனி சேர்க்கை பெறுவதும், சுக்கிரன், சனி வீடுகளில் அமைவதும் கல்விக்கு சம்பந்தமில்லாத துறைகளில் முன்னேற்றத்தை கொடுக்கும்.
சனி, புதன் சேர்க்கை பெற்று வலு இழந்திருந்தால் அடிமைத்தொழில் அமைப்பு, சனி, ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தால் இழிவான வேலைகளைச் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். புதனுக்கு 7ல் சனி, செவ்வாய், ராகு கேது போன்ற பாவிகள் இருந்தால், எவ்வளவு திறமை இருந்தாலும் வாழ்வில் மேன்மை அடைய இடையூறுகள் உண்டாகும். அது போல புதனுக்கு இருபுறமும் பாவிகள் இருந்தாலும் வாழ்வில் முன்னேற்றம் உண்டாக தடை ஏற்படும். கன்னி லக்னத்தில்  பிறந்தவர்களுக்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் முடிந்தவரை கூட்டு சேர்ந்து தொழில் செய்வதை தவிர்த்து எதிலும் தனித்து செயல்படுவதும், பிறரை சார்ந்து உத்தியோகம் செய்வதும் நல்லது-.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001