Wednesday, September 16, 2026

Today rasi palan - 16.09.2026

 


Today rasi palan -
16.09.2026

இன்றைய ராசிப்பலன் -  16.09.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் பாலஜோதிடம் வார இதழ்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Online consultation at - 0091  7200163001. 9383763001,

Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb

 

இன்றைய  பஞ்சாங்கம்

16-09-2026, ஆவணி 30, புதன்கிழமை, பஞ்சமி திதி காலை 08.59 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. விசாகம் நட்சத்திரம் மாலை 05.22 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

சனி (வ)

 

 

செவ்

ராகு

 

16.09.2026

குரு

 

சூரிய கேது

 

 

  சந்தி சுக்கி

புதன்

 

இன்றைய ராசிப்பலன் -  16.09.2026

 

மேஷம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 10.49 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

 

ரிஷபம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும்.

 

மிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். லாபம் பெருகும். பொருளாதாரம் மேலோங்கும்.

 

கடகம்

இன்று வியாபாரத்தில் எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

 

சிம்மம்

இன்று எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் லாபம் அடையலாம். சிக்கனமாக இருப்பதன் மூலம் பண நெருக்கடிகள் குறையும்.

 

கன்னி

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். தடைப்பட்ட காரியம் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அமையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

 

துலாம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

விருச்சிகம்

இன்று உறவினர்கள் மூலம் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

 

தனுசு

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எடுக்கும் புதிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம்.  அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். எதிலும் நிதானம் தேவை.

 

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். பெற்றோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும்.

 

கும்பம்

இன்று உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

 

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.49 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதி இருக்கும்.

No comments: