Today rasi palan - 21.09.2026
இன்றைய ராசிப்பலன்
- 21.09.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
21-09-2026, புரட்டாசி 04, திங்கட்கிழமை, தசமி திதி
இரவு 08.01 வரை
பின்பு வளர்பிறை ஏகாதசி. நாள்
முழுவதும் உத்திராடம் நட்சத்திரம். நாள்
முழுவதும் மரணயோகம். கெஜலட்சுமி விரதம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம்
01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு
10.00-11.00.
|
சனி (வ) |
|
|
|
|
ராகு |
21.09.2026 |
செவ் குரு |
|
|
|
கேது |
||
|
சந்தி |
|
சுக்கி |
சூரிய புதன் |
இன்றைய ராசிப்பலன் - 21.09.2026
மேஷம்
இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு
வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
ரிஷபம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.15 மணி
வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் மதியத்திற்கு பின் நற்பலன் கிடைக்கும். பணப்பிரச்சினைகள் குறையும்.
மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.15 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன
அமைதி குறையும். வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் போது
கவனம் தேவை.
வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.
கடகம்
இன்று இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை
விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல
முன்னேற்றம் காணப்படும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.
சிம்மம்
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை
உருவாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவுகள் சற்று சுமாராக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
இன்று உங்களின் உடல்நிலையில் சிறு
உபாதைகள் தோன்றி மறையும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் விலகி லாபம் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
மகரம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உத்தியோக ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.
கும்பம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
மீனம்
இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

No comments:
Post a Comment