Today rasi palan - 07.09.2026
இன்றைய ராசிப்பலன்
- 07.09.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
07-09-2026, ஆவணி 21, திங்கட்கிழமை, ஏகாதசி திதி
மாலை 05.04 வரை
பின்பு தேய்பிறை துவாதசி. புனர்பூசம் நட்சத்திரம் மாலை
06.14 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் மாலை 06.14 வரை
பின்பு சித்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற
நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம்
01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு
10.00-11.00.
|
சனி (வ) |
|
|
செவ் சந்தி |
|
ராகு |
07.09.2026 |
குரு |
|
|
|
சூரிய புதன் கேது |
||
|
|
|
சுக்கி |
|
இன்றைய ராசிப்பலன் - 07.09.2026
மேஷம்
இன்று உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடன்
பிரச்சினைகள் குறைந்து மன அமைதி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணத்தை தள்ளி வைப்பது நல்லது. உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும் என்றாலும் பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் நல்ல
முன்னேற்றம் உண்டாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி பெற
கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார ரீதியாக எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும்.
கடகம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண
வரவு தாராளமாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலையில் பணிச்சுமை குறையும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுப
முயற்சிகளில் மந்த
நிலை ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள
நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
துலாம்
இன்று உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதார நிலை சற்று உயரும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
விருச்சிகம்
இன்று உடல்
ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு பகல்
12.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
தனுசு
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல்
12.38 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணம்
கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மகரம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். தொழிலில் உள்ள மந்த
நிலை மாறும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
கும்பம்
இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு உண்டாகும். சிலருக்கு புதிய வேலை
வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை
சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். நினைத்தது நிறைவேறும்.

No comments:
Post a Comment