Today rasi palan - 20.09.2026
இன்றைய ராசிப்பலன்
- 20.09.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
20-09-2026, புரட்டாசி 03, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி
மாலை 05.52 வரை
பின்பு வளர்பிறை தசமி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 04.34 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பின்இரவு 04.34 வரை
பின்பு அமிர்தயோகம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் - மாலை 04.30 -
06.00, எம கண்டம் - பகல் 12.00 -
01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 -
04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 -
11.00.
|
சனி (வ) |
|
|
|
|
ராகு |
20.09.2026 |
செவ் குரு |
|
|
|
கேது |
||
|
சந்தி |
|
சுக்கி |
சூரிய புதன் |
இன்றைய ராசிப்பலன் - 20.09.2026
மேஷம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது
கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.
ரிஷபம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன
உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.
மிதுனம்
இன்று வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய
முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மனைவி வழி
உறவினர்களால் உதவிகள் கிட்டும். வியாபார ரீதியான பிரச்சினைகள் குறையும். புதிய பொருட்கள் வீடு
வந்து சேரும்.
சிம்மம்
இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப்பிரச்சினைகள் ஏற்படும். உடல்நிலையில் சிறு
பாதிப்புகள் உண்டாகலாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை.
உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண்
செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். வருமானம் அதிகரிக்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம
காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் உதவியுடன் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.
தனுசு
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
மகரம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் தோன்றும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கும்பம்
இன்று
நீங்கள் எந்த
செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.
மீனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். பழைய
பாக்கிகள் வசூலாகும்.

No comments:
Post a Comment