Thursday, September 3, 2026

Today rasi palan - 03.09.2026

 


Today rasi palan -
03.09.2026

இன்றைய ராசிப்பலன் - 03.09.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் பாலஜோதிடம் வார இதழ்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Online consultation at - 0091  7200163001. 9383763001,

Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb

 

இன்றைய  பஞ்சாங்கம்

03-09-2026, ஆவணி 17, வியாழக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 02.26 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 12.29 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் மரணயோகம். கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

சனி (வ)

சந்தி

 

செவ்

ராகு

 

03.09.2026

குரு

 

சூரிய புதன் கேது

 

 

  சுக்கி

 

 

இன்றைய ராசிப்பலன் -  03.09.2026

 

மேஷம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

 

ரிஷபம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

 

மிதுனம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபார ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

 

கடகம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றங்கள் ஏற்படும். திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

 

சிம்மம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.

கன்னி

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

 

துலாம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தூரப் பயணங்களில் கவனம் தேவை.

 

விருச்சிகம்

இன்று உங்களுக்கு அனுகூலமான பலன்களை தரும் நாளாக இந்த நாள் அமையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியாக வெளிவட்டார தொடர்பு கிட்டும்.

 

தனுசு

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

 

மகரம்

இன்று உங்களுக்கு உடல் அசதி மந்த நிலை ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். கொடுக்கல்& வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபகரமான பலன்கள் கிட்டும்.

கும்பம்

இன்று வீட்டில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தாமதமாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

 

மீனம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்து நற்பலன்களை தரும். வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

No comments: