Friday, September 11, 2026

Today rasi palan - 11.09.2026

 


Today rasi palan -
11.09.2026

இன்றைய ராசிப்பலன் -  11.09.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

ஆசிரியர் பாலஜோதிடம் வார இதழ்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Online consultation at - 0091  7200163001. 9383763001,

Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb

 

இன்றைய  பஞ்சாங்கம்

11-09-2026, ஆவணி 25, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி காலை 08.57 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பூரம் நட்சத்திரம் பகல் 01.16 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். அம்மன் வழிபாடு நல்லது.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 

 

சனி (வ)

 

 

செவ்

ராகு

 

11.09.2026

குரு

 

சூரிய சந்தி கேது

 

 

  சுக்கி

புதன்

 

இன்றைய ராசிப்பலன் -  11.09.2026

 

மேஷம்

இன்று உங்களின் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். தொழில் ரீதியான பணவரவில் தாமதநிலை உண்டாகும் என்றாலும் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் ஓரளவுக்கு லாபகரமான பலன்களை அடையலாம்.

 

ரிஷபம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் ஆதரவாக இருப்பார்கள்.

 

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வராத கடன்கள் இன்று வசூலாகும்.

 

கடகம்

இன்று வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வரவேண்டிய தொகை கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

 

சிம்மம்

இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் ரீதியாக எதிர்பார்த்த கடன்கள் உதவி எளிதில் கிடைக்கும்.

 

கன்னி

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிர்பாராத திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

 

துலாம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக லாபம் பெருகும். செலவுகள் குறைந்து காணப்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

 

விருச்சிகம்

இன்று நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

 

தனுசு

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வகையில் பணவிரயங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் நிகழும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளால் லாபம் கிட்டும்.

 

மகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வேலையில் மேலதிகாரிகளிடம் பேசும் பொழுது கவனமாக பேசுவது நல்லது. வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

 

கும்பம்

இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினை தீரும்.

மீனம்

இன்று பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

No comments: