Sunday, June 7, 2020

Today rasi palan - 08.06.2020


Today rasi palan - 08.06.2020
இன்றைய ராசிப்பலன் -  08.06.2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
08-06-2020, வைகாசி 26, திங்கட்கிழமை, திரிதியை திதி இரவு 07.56 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. பூராடம் நட்சத்திரம் பகல் 01.45 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரண யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.



சூரிய சுக்கி(வ)
புதன் ராகு
செவ்
திருக்கணித கிரக நிலை
08.06.2020

குரு(வ) சனி(வ)

சந்தி கேது

 


இன்றைய ராசிப்பலன் -  08.06.2020
மேஷம்
இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமாக உங்கள் செயல்களுக்கு வெற்றி உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.
ரிஷபம்
இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது.
மிதுனம்
இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். சொந்த தொழில் புரிபவர்களுக்கு பெரிய மனிதர்களுடன் தொடர்பு கிட்டும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
கடகம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும், எடுக்கும் புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். பணப்பிரச்சினைகள் குறையும்.
சிம்மம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வராத கடன்கள் வசூலாகும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.
கன்னி
இன்று உடல்நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
துலாம்
இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். பணவரவு தாரளமாக இருக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அலைச்சலும் உடல் நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.
தனுசு
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களில் வேற்று மொழி நபர்களால் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுக்கும் காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
மகரம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் நிம்மதி குறைவு ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை சற்று குறையும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பழைய கடன்கள் தீரும்.
கும்பம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர  பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
மீனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

Saturday, June 6, 2020

Kanni rasi | கன்னி ராசி| Astrology | Dr.Murugubalamurugan

Today rasi palan - 07.06.2020


Today rasi palan - 07.06.2020
இன்றைய ராசிப்பலன் -  07.06.2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
07-06-2020, வைகாசி 25, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி இரவு 08.56 வரை பின்பு தேய்பிறை திரிதியை. மூலம் நட்சத்திரம் பகல் 02.10 வரை பின்பு பூராடம். அமிர்த யோகம் பகல் 02.10 வரை பின்பு சித்த யோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,



சூரிய சுக்கி(வ)
புதன் ராகு
செவ்
திருக்கணித கிரக நிலை
07.06.2020

குரு(வ) சனி(வ)

சந்தி கேது

 


இன்றைய ராசிப்பலன் -  07.06.2020
மேஷம்
இன்று எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மன அமைதி குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்ற நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.
கடகம்
இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் தம் பொறுப்பு அறிந்து செயல் படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் சேமிக்க முடியும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.
துலாம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கப் பெறும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
மகரம்
இன்று குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்ததில் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியுடன் எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கும்பம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக வெளியூர் நபர்களால் அனுகூலம் கிடைக்கும்.
மீனம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

Live super chat June 6 |55 th live| Q & A | Astrology | Dr.Murugubalamu...

யூ-டியூப் மூலமாக பதில் பெற ரூ. 100 மட்டும்


தினமும் யூ-டியூபில் நேரடி ஒளிபரப்பில் உங்கள் ஜாதக ரீதியான முக்கிய கேள்விக்கு பதில் பெற சூப்பர் சேட் மூலமாக ரூ.100 செலுத்தி தங்களது பெயர் (ஆணா-/பெண்ணா),பிறந்ததேதி, மாதம், வருடம், பிறந்த இடம் மற்றும் சரியான நேரத்தை அனுப்பி, துணை கேள்வி இல்லாமல் ஒரு கேள்வியை மட்டும் கேட்டு நேரடி ஒளிபரப்பில் பதில் பெறலாம்.


w