Sunday, November 23, 2025

Today rasi palan - 24.11.2025

 

Today rasi palan - 24.11.2025

இன்றைய ராசிப்பலன் -  24.11.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 


இன்றைய  பஞ்சாங்கம்

24-11-2025, கார்த்திகை 08, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி இரவு 09.22 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூராடம் நட்சத்திரம் இரவு 09.53 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வாஸ்து நாள் பகல் 11.09 மணி முதல் 11.45 மணி வரை.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

சனி (வ)

 

 

 

ராகு

 

24.11.2025

குரு (வ)

 

 

கேது

சந்தி

சூரிய

செவ்

 

புதன் (வ) சுக்கி

 

 

இன்றைய ராசிப்பலன் -  24.11.2025

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்.

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி, வாகனங்களால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.

மிதுனம்

இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.

கடகம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

சிம்மம்

இன்று நீங்கள் சோர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்து தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.

தனுசு

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.

மகரம்

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உடல்நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

Saturday, November 22, 2025

Today rasi palan - 23.11.2025

 

Today rasi palan - 23.11.2025

இன்றைய ராசிப்பலன் -  23.11.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 


இன்றைய  பஞ்சாங்கம்

23-11-2025, கார்த்திகை 07, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி இரவு 07.25 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. மூலம் நட்சத்திரம் இரவு 07.28 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் இரவு 07.28 வரை பின்பு சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

சனி (வ)

 

 

 

ராகு

 

23.11.2025

குரு (வ)

 

 

கேது

சந்தி

சூரிய

செவ்

புதன் (வ)

சுக்கி

 

 

இன்றைய ராசிப்பலன் -  23.11.2025

மேஷம்

இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியான கொடுக்கல்& வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது. வயதில் பெரியவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, எதிலும் நிதானமாக இருப்பது உத்தமம்.

மிதுனம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கடகம்

இன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

சிம்மம்

இன்று நீங்கள் எடுத்த காரியம் பாதியில் நிற்பதற்கான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அதிக லாபம் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.

கன்னி

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதமாகும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பெண்களுக்கு வேலைபளு கூடும்.

துலாம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடன் பிறப்புகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை அளிக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உறவினர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் மன உளைச்சல் அதிகரிக்கும். எதிலும் கவனமாகவும், நிதானத்துடனும் செயல்படுவது நல்லது. பணவரவில் இருந்த தடைகள் நீங்கி தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.

மகரம்

இன்று பிள்ளைகளிடம் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். பெரியோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

மீனம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.