Tuesday, July 31, 2012

பிறந்த தேதியும் நவரத்தினங்களும்


பிறந்த தேதியும் நவரத்தினங்களும்

ஒரு மாதத்தில் 1 லிருந்து 30 அல்லது 31 தேதிகள் உள்ளது. இதில் செப்டம்பர், ஏப்ரல், ஜுன், நவம்பர் ஆகிய மாதங்களில் 30 நாட்கள் வரும்.

பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களாகும். லீப் வருடம் என்றால் 29 நாட்கள் வரும். இதுவும் 4 வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும். 

ஜனவரி, மார்ச், மே, ஜுலை, ஆகஸ்ட், அக்டோபர், டிசம்பர் ஆகிய மாதங்களில் 31 நாட்கள் வரும். 

ஒருவர் 1,10,19 ஆகிய தேதிகளில் பிறக்கிறார் என்றால் அவர் 1ம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராகிறார். இது சூரியனின் ஆதிக்கத்திற்குட்பட்ட எண்ணாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய நவரத்தினம் மாணிக்கமாகும். 

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் அவர் 2ம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராவார். இது சந்திரனின் ஆதிக்கமாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய நவரத்தினம் முத்தாகும்.

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 3ம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவராகிறார். இது குருவின் ஆதிக்கம் கொண்ட எண்ணாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் புஷ்ப ராகமாகும். 

4,13,22 ஆகியவை 4ம் எண்களாகும். இவை ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டதால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் கோமேதகமாகும். 

5,14,23 ஆகிய 5ம் எண்களாகும். இவை புதனின் ஆதிக்கத்திற்குட்பட்டவை யாதலால் இவர்கள் அணியவேண்டிய ரத்தினம் மரகத பச்சை. 

6,15,24 ஆகியவை 6ம் எண்களாகும். இவை சுக்கிரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவையாததால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் வைரமாகும். 

7,16,25 ஆகிய 7ம் எண்களாகும். இவை கேதுவின்  ஆதிக்கத்திற்குட்பட்டவையாததால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் வைடூரியம்.

8,17,26 ஆகியவை 8ம் எண்களாகும். இவை சனியின்  ஆதிக்கத்திற்குட்பட்டவையாததால் இவர்கள் அணிய வேண்டிய ரத்தினம் நீலக்கல்லாகும். 

9,18,27 ஆகியவை 9ம் எண்களாகும். இவை செவ்வாயின்  ஆதிக்கத்திற்குட்பட்டவையாததால் இவர்கள் அணிய வேண்டியது பவளமாகும். 


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Sunday, July 29, 2012

நவகிரகங்களின் தசா புக்திக்குரிய நவரத்தினங்கள்



ஓருவரின் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளைக் கொண்டு தான் அவர்களுடைய தலை எழுத்தானது நிர்ணயிக்கப்படுகிறது. 12 கட்டங்களும் 9 கிரகங்களுமா நம் வாழ்வை நிச்சயிக்கின்றன? என பலர் ஆச்சர்யப்படலாம். யாரையும் நம்ப வைப்பதோ, கட்டாயத்திற்குட்படுவதோ நோக்கமல்ல. ஆனால் ஒன்றை மட்டும்தெளிவாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பிறக்கும்போது எந்ததெந்த கிரகங்கள் என்னென்ன நிலையில் உள்ளதோ அவை இறக்கும் வரை அப்படியேதான் இருக்கும். பிறந்த நட்சத்திரத்துக்குரிய  கிரகத்தின் திசையில் ஆரம்பித்து அடுத்தடுத்து என்னென்ன கிரகங்கள் வருமோ அந்தந்த திசைகள் வந்தே தீரும். 

உதாரணமாக ஒருவர் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்திருப்பாரேயானால் அவருக்கு முதலாவதாக வரக்கூடிய திசை சூரிய திசையாக இருக்கும். ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கர்ப செல் நீக்கி இருப்பு என கணக்கிட்டு 3 வருடம் 2 மாதம் 27 நாட்கள் என கொடுத்திருப்பார்கள். அதாவது இவரின் சூரிய திசை 3 வருடங்கள் 2 மாதங்கள் 27 நாட்கள்  மீதமிருப்பதாக கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து சந்திர திசை 10 வருடங்கள்,செவ்வாய் 7வருடங்கள், ராகு 18  வருடங்கள், குரு 16 வருடங்கள் என தொடர்ந்து சனி, புதன், கேது, சுக்கிரன் என திசைகள் நடைபெறும். 

ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்து அதன் திசை புக்தி காலங்களில் ஜாதகர் சுபிட்சமானப் பலனைப் பெறுவார். அதுவே கிரக நிலைகள் சாதகமின்றி அமைந்து விட்டால் அதற்குரிய கெடுபலன்களை அடைந்தே தீர வேண்டும். ஒரு கிரகத்திற்கு பலத்தை கொடுப்பதற்கோ, பலமிழக்க செய்வதற்கோ மனிதனாக பிறந்த நமக்கு எந்த சக்தியுமில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். 

கெடுபலன்களை குறைப்பதற்காகவும் அதன் பிடியிலிருந்து தப்பித்து கொள்வதற்காகவும் தான் இப்படி நவரத்தின கற்களை அணிந்து கொண்டு இறைவழிபாடுகளை மேற்கொண்டு வருகிறோம். இது மட்டுமல்லாமல் நவகிரகங்களுக்குரிய பரிகாரங்களைச் செய்வதும் நல்லது. நவரத்தின கற்களை எந்த கிரகத்திற்காக அணிகிறோமோ அந்த ஒளிக்கதிரானது நம் மீது பட்டு அதனால் உண்டாகக்கூடிய கெடுபலன்கள் விலகி வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Friday, July 27, 2012

நவரத்தினங்களில் பவழம்



பவழம் கடல் வாழ் முதுகெலும்பற்ற உயிரின வகையைச் சேர்ந்தவையாகும். இவற்றின் மேல் சுண்ணாம்பு அல்லது கடினமான ஓடு இருக்கும்.  இவைகள் இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. கடலில் விளையும் இரு ரத்தினங்களில் பவழம் பவழப்பூச்சிகள் எனப்படும். சிறிய உயிரினங்களினால் உருவாக்கப்படுகின்றன. கடினமான பாறைகளின்  மேல் இந்த பூச்சிகள் நின்று கொண்டு இரை தேடும் போது இப்பூச்சிகள் உடல்களிலிருந்து உண்டாகக்கூடிய எச்சங்களே பவழப் பாறைகளாக மாறுகின்றன. இதுவே பவழம் உண்மையாக உற்பத்தியாகும் முறையாகும். பவழம் கால்சியம் கார்பனேட்டினால் ஆனது. மிகச் சிறந்த பவழம் கிளியின் மூக்கு நிறத்தைப் போன்றும், செம்பருத்தி பூவின் நிறத்தைப் போன்றும், கோவைப் பழத்தைப் போன்றும் செந்திறமாக இருக்கும். நாம் பவழம் என்றாலே சிவப்பு நிறம் மட்டும்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் கருப்பு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது. வெண் பவழம் என்றால் முருகப்பூ போன்ற நிறத்துடன்  காணப்படும். பவழத்திற்கு ஆங்கிலத்தில் கோரல் என்று பெயர்

பவழத்தின் அமைப்பைக் கொண்டு 6 அல்லது 8 கிரகங்கள் உடையதென  இரு வகையாக பிரிக்கப்படுகிறது. சிவப்பு பவழமானது 8 காரங்கள் பிரிவைச் சார்ந்ததாகும். முன்பு நம் நாட்டு கடல் பகுதிகளில் பவழம் நிறைய கிடைக்கப் பெற்றது. தற்போதோ இத்தாலி மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளில் கிடைக்கப் பெறுகிறது. பவழம் குடுமையான வேதிப் பொருளான அமிலமானது பட்டால் உடனே கரைந்துவிடக்கூடிய தன்மை கொண்டது. 

பவழத்திற்கு 6 குற்றங்கள் உண்டு. அப்படிப்பட்ட பவளங்கள் அணிவதைத் தவிர்த்து விடுவது நல்லது. பவழங்கள் பிளவு பட்டோ, கரும் புள்ளிகளுடனோ, நிறம் வெளிறிப்போயோ, ஓரங்கள் ஓடிந்தோ, துளைகளுடனோ, இருந்தால் அவை குற்றமுடைய பவழமாக கருதப்படும். பவழத்தில் நாள் பட்ட, பூச்சி அரித்த பவழம் உபயோகத்திற்கு உகந்தது அல்ல. கார்னீலியன், சிகப்பு ஜாஸ்பர் கற்கள் பூமியில் விளைபவையாகும். இந்த கற்கள் பவழம் போன்ற அமைப்பை கொண்டது என்பதால் இவற்றை பவழம் என்று எண்ணிவிடக்கூடாது.

செந்நிற கிரகமான செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களான மேஷ, விருச்சிக ராசிக்காரர்களும், எண் கணிதப்படி 9,18,27 ம் தேதிகளில் பிறந்தவர்களும் பவழத்தை அணியலாம். இதைத் தவிர மருத்துவ ரீதியாகவும் பவழத்தை அணிந்தால் இர்த சிகப்பணுக்கள் கூடுகின்றது. உடலில் சுறுசுறுப்பும் உண்டாகிறது. செவ்வாய் தோஷமுடையவர்களும், மனத் தளர்ச்சியடைபவர்களும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெறவும், நிலையான ஐஸ்வர்யத்தை அடைய விரும்புபவர்களும் பவழக்கல்லை அணியலாம். பவழத்தை தங்கத்தில் பதித்து மோதிர விரலில் அணிந்து கொள்வது நல்லது. 

கண்களில் பாதிப்புடையவர்கள், குடல் புண், இருதய பாதிப்பு, உஷ்ண சம்பந்தப்பட்ட நோய், தோல் நோய், பெண்களுக்கு உண்டாகக்கூடிய மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களும் பவழக்கல்லை அணிவதால் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுபடலாம். பவழம் தடைகளையும் விபத்தையும் தவிர்க்கும். சண்டையையும் வெறுப்பையும் குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். 

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Wednesday, July 25, 2012

நவரத்தினங்களில் நீலம்




நீலம் அலுமினியம் டிரை ஆக்ஸைடு என்ற மூலப்பொருளால் ஆனது. இக்கல்லுக்கு நீல நிறத்தைத் தருவதற்கு டைட்டானியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. ஆழ்ந்த நீல நிறமுள்ள நீலக்கல்லில் டைட்டானியம் அதிகம் இருக்கும். இதன் நிறத்தின் பெயரே கல்லின் பெயரானது. முன்பெல்லாம் உயர்தரமான நீலம் இந்தியாவில் காஷ்மீரில் கிடைத்து வந்தது. தற்போது இந்தியாவில் கிடைப்பது அரிதாகிவிட்டாலும் தாய்லாந்து, இலங்கை, கென்யா, டான்சானியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகிறது
. 
நீலம் கடினத்தன்மை அதிகமுடையதாக இருப்பதால் நீண்ட நாட்களுக்கு, பளபளப்பு குன்றாமல் இருக்கும். வெளிர் நீல கற்கள் பாங்காங்கில் அடர் நீலமாக மாற்றப்பட்டு பாங்காங் நீலம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. அதிக எடையும், சுத்தமான தன்மையும் கொண்ட கல்லை கெட்டி நீலம் என்கிறார்கள். 

பர்மா மற்றும் காஷ்மீரில் அற்புதமான நீல கற்கள் கிடைக்கின்றன. இவை அழகான ஒளி கற்கள் கிடைக்கின்றன. இவை அழகான ஒளிமிகுந்த, கண்களைக் கவரக்கூடியவையாக இருக்கும். நீலக்கல்லை அணிவதால் போட்டி, பொறாமை மற்றும். கண் திருஷ்டிகள் விலகும். மன அமைதியையும், சுகமான, ஆபத்தில்லாத பயணங்களைத் தரும். இடமாறுதலையும், நாள்பட்ட துன்பங்க¬யும் போக்கும். நீலக் கல்லிலேயே  தோஷமற்ற இந்திர கல் கிடைக்கப்பெற்று அதை அணிபவர்களுக்கு ஏழ்மை விலகி செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமை போன்ற யாவும் தேடி வரும். கஷ்டங்கள் அனைத்தும் விலகும். 

நீலக் கல்லை நீல நிற சனி கிரகத்தின் ஆதிக்கத்திற்குள்ளோரானான மகர, கும்ப ராசி உடையவர்களும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, சனி திசை போன்றவை எண் கணிதப்படி 8,17, 26 எண்ணில் பிறந்தவர்களும் அணியலாம். 
மருத்துவ ரீதியாகவும் வாதநோய், பாரிச வாய்பு, எலும்பு வியாதி, பல் நோய், ஜலதோஷம், சித்த சுவாதீனம், உடல் சோர்பு, மந்த நிலை போன்ற  நோய்களிலிருந்தும் ஓரளவுக்கு விடுதலை கிடைக்கும். 

நீலக்கல்லை வெள்ளியில் பதித்து உடலில் படும்படி நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலில் அணிந்து கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் அணிவது உத்தமம். நீலக்கல் அணிவதால் நம்மை பிடித்துள்ள நீச குணங்கள் விலகி சனி கிரகத்தின் அருளை முழுமையாகப் பெறமுடியும். 

அக்கோமரின், நீலக்கல்லிற்குப் பதிலாக இந்த அக்கோமரின் ( கற்களையும் அணியலாம். இதுவும் பார்ப்பதற்கு அழகாகவும், வெளிர்நீல நிறமுடையதாகவும் விலையில் சற்று குறைவாகவும் கிடைக்கின்றது. 

சனியால் ஏதாவது பாதிப்பு உடையவர்கள் அக்காலங்களில் மட்டும் இக்கற்களை அணிந்து கொள்ளலாம். மற்றோர் அணிவது கூடாது. அழகுக்காக சிலர் அணிகிறார்கள். இவற்றால் கெடுபலன்களையே  அடைய நேரிடும். 

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

Monday, July 23, 2012

நவரத்தினங்களில் வைடூரியம்



வைடூரியம் லேசான பச்சையும், பழுப்பு நிறமும் கொண்டதாகும். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுவதோடு நடுவே ஒரு வெண்மை நிறத்தில் கோடு போன்ற அமைப்பும் காணப்படுகிறது. இதை மேலும் கீழும் அசைத்தால் பூனைக் கண் போலத் தெரியும். இதனாலேயே வைடூரியத்திற்கு கேட்ஸ்அய் என்ற ஆங்கிலப் பெயர் வந்தது. மஞ்சள் நிற பிரகாசமும் வெண்ணிற கற்றையும் உடையதே மிக உயர்ந்த வகை வைடூரியமாகும்.

வைடூரியமானது மிகவும் தெய்வீக தன்மை வாய்ந்ததாகும்.  வைடூரியம் மிகவும் வேகமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதால், இதனை பரிசோதனைக்குப் பின்னரே அணிய வேண்டும். பெரில்லியம் அலுமினேட் எனப்படும் வேதிப்பொருளாளல் ஆன வைடூரியம், கிரிஸோபெரில் வகையை சார்ந்ததாகும். விலையும் அதிகமாகும். வைடூரிய கல்லின் குறுக்கே ஒரு நூல் பட்டையாகவும் தெளிவில்லாமலும், கல்லின் நிறம் வெளிர் பச்சையாகவும் இருந்தால் விலை அதற்கேற்ப குறைய வாய்ப்புண்டு.

இதில் குறிப்பிடத்தக்கது குவார்ட்ஸ் வகை வைடூரியங்கள் ஆகும். ஆனால் இதன் பெயரில் தான் வைடூரியம் உள்ளதே தவிர சுத்தமான வைடூரியம் இல்லை. எடை குறைந்த குவார்ட்ஸ் வகை வைடுரியங்கள் ப்ரவுன் கலந்து பச்சையாக இருக்கும். இதில் பழுப்பு நிறம் உடைய நூல் போன்ற அமைப்பு கொண்ட கற்களை டைகர்ஸ் ஐ (ஜிவீரீமீக்ஷீs ணிஹ்மீ) என்றும், கருப்பு நிறமாக இருந்தால் புல்ஸ் ஐ (ஙிuறீறீs ணிஹ்மீ)  என்றும் அழைக்கின்றனர். 
சுத்தமான வைடூரியத்தின் அழகானது, அதனுள் தெரியும் நூல் போன்ற அமைப்பு வெளிச்சத்தில் மின்னல் போல தெரிவதால் யாரையும் மயக்கிவிடும்.  மற்ற டைகர் ஐ, புல்ஸ் ஐ போன்றவற்றில் இது போன்ற கவர்ச்சியான அமைப்பு இருக்காது. 

வைடூரியங்களில் நமது நாட்டில் கேரளாவில் கிடைப்பதே விலை உயர்ந்ததாகும். இது தவிர, ஒரிஸாவில் கிடைப்பது சற்று விலை குறைந்ததாக உள்ளது. பிரேசில், இலங்கை, அமெரிக்கா முதலிய இடங்களிலும் வைடூரியம் கிடைக்கின்றது.  வைடூரியக் கல்லை அணிவதால் மிகுந்த செல்வம், செல்வாக்கு உயரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாம். இழந்த செல்வத்தை மீட்டுத் தரும். ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாட்டை அதிகரிக்கும். தற்கொலை எண்ணங்கள் வராது. மன நிலை புத்துணர்ச்சியுடன் இருக்கும். 

வைடூரியக் கல்லைத் தங்கத்தில் பதித்து ஆள் காட்டி விரல் அல்லது மோதிர விரலில் அணிந்த கொள்வது நல்லது. வைடூரியத் கல்லை கால சர்பயோகம் உடையவர்களும், கேது திசை நடப்பில் உள்ளோரும், 7,16,25 ஆகிய எண்களில் பிறந்தோரும் அணிவது உத்தமம். அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரக்காரர்களும் அணியலாம். 

புள்ளிகள், பள்ளங்கள், மங்கலான நிறங்கள் உடைய வைடூரியங்கள் தீமையான பலன்களை அடைய நேரிடும். எனவே  வைடூரியத்தை நன்கு பரிசோதித்து அணிவது உத்ததமம். 

ஒப்பல், வைடூரியத்திற்கு மாற்றுக் கல்லாக ஒப்பல் என்ற கல்லை அணியலாம். ஒப்பல் கற்கள் ஏழு எண்காரர்களுக்கு மிகவும் உகந்ததாகும். இது பல வண்ணங்களில் கிடைத்தாலும் வெண்மை நிறம் கொண்ட கல்லே சிறந்ததாகும். 

ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001