Today rasi palan - 27.09.2026
இன்றைய ராசிப்பலன்
- 27.09.2026
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
ஆசிரியர் பாலஜோதிடம்
வார இதழ்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
Online consultation at - 0091
7200163001. 9383763001,
Location - https://maps.app.goo.gl/nFEp2FZQHuTTAsku7?g_st=iwb
இன்றைய பஞ்சாங்கம்
27-09-2026, புரட்டாசி 10, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி
இரவு 08.59 வரை
பின்பு தேய்பிறை துதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல்
11.08 வரை பின்பு ரேவதி. நாள்
முழுவதும் அமிர்தயோகம் மஹாலய பட்சம் ஆரம்பம்.
இராகு காலம் - மாலை 04.30 -
06.00, எம கண்டம் - பகல் 12.00 -
01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 -
04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 -
11.00.
|
சனி (வ) சந்தி |
|
|
|
|
ராகு |
27.09.2026 |
செவ் குரு |
|
|
|
கேது |
||
|
|
|
புதன் சுக்கி |
சூரிய |
இன்றைய ராசிப்பலன் - 27.09.2026
மேஷம்
இன்று- வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண
நெருக்கடிகள் ஓரளவு விலகும். எதையும் செய்வதற்கு முன்
ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
ரிஷபம்
இன்று தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்
பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய
பாக்கிகள் வசூலாகும்.
மிதுனம்
இன்று உங்கள் மனதில் நல்ல
மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை
வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
கடகம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் வகையில் வீண் விரயங்கள் ஏற்படலாம். பொருளாதார பிரச்சினைகளால் மன
நிம்மதி குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலனை அடையலாம். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்களின் மன வருத்தத்திற்க்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தூர பயணங்களையும், புதிய முயற்சிகளையும் முடிந்த வரை
தவிர்ப்பது நல்லது.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். கடன்கள் குறையும்.
துலாம்
இன்று உடல்
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். கடன்
பிரச்சினைகள் ஓரளவு தீரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.
தனுசு
இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல்
ஆரோக்கியத்தில் சிறு
பாதிப்புகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை
தோன்றும். வேலையில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் பணப்பிரச்சினைகள் குறையும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த வேலையிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
கும்பம்
இன்று உடன்
பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். பொருளாதார பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள மந்த
நிலை நீங்கும்.
மீனம்
இன்று எந்த
காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபமுயற்சிகளில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய
நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்கள் சேரும்.

No comments:
Post a Comment