Showing posts with label 2013 Rasi palangal. Show all posts
Showing posts with label 2013 Rasi palangal. Show all posts

Tuesday, December 25, 2012

2013 RASI PALANGAL, மகரராசி



2013 ஆண்டு பலன்கள்,  மகர ராசி

நண்பர், விரோதி என்ற பாகுபாடுகளிற்றி அனைவ ரிடத்திலும் சமமாக பழகும் மகரராசி அன்பர்களே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு பொன்னவனான குருபகவான் முற்பாதிவரை ஜென்ம ராசிக்கு 5ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். புத்திர பாக்கியமும் அமையும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சனிபகவான் 10ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோகம் செய்பவர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் கெடுக்க மாட்டார். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகளும் கிடைக்கும். வரும் 28-05-2013 முதல் குருபகவான் 6ம்வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பணவிஷ யங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். வம்பு வழக்குகளும், கடன்களும் ஏற்படும்.

தேக ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஏதாவது சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட் டாலும் உடனடியாக சரியாகிவிடும். குடும்ப த்திலுள்ளவர்களால் சற்று மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிட்டாலும் பெரிய கெடுதிகளில்லை. மறைமுக எதிர்ப்புகளால் மனநிம்மதி குறையகூடிய சூழ்நிலை ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்பத்தில் சுபீட்சமான நிலையே இருக்கம். பொருளாதார நிலையும் மேன்மையாக அமையும். திருமணசுபகாரியங்கள் ஆண்டின் முற்பாதியில் நடைபெறும். புத்திர பாக்கியமும். உண்டாகும். பொன்பொருள் சேரும். அசையும் அசையா சொத்து க்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து க்களால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் ஒற்றுமை யுடனேயே செயல் படுவார்கள்.

கொடுக்கல் வாங்கல்

ஆண்டின் முற்பாதியில் குருபகவான் 5ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கம். கொடுக்கல் வாங்கலிலும் மேன்மைகள் உண்டாகும். பலபெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும் உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகவே இருக்கம். ஆண்டின் பிற்பாதியில் எந்தவிஷயத்திலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தா திருப்பது நல்லது.

 தொழில் வியாபாரிகளுக்கு

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு மந்த நிலை ஏற்பட்டாலும் போட்ட முதலீட்டை எடுத்துவிடக்கூடிய அளவிற்கு லாபங்கள் அமையும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்ககூடிய காலம் என்பதாலும் எச்சரிக்கையுடன் செயலாற்றுவது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயண ங்களால் அலைச்சலை சந்தித்தாலும் அதன் மூலம் அனுகூலமானப் பலன்களும் கிட்டும்.

 உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒற்றுமையற்ற செயல்பா ட்டினால் சில நேரங்களில் வீண் பிரச்சணைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்துவிடக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய உயர்வுகளை சில நேரங்களில் மறைமுக எதிர்ப்புகளால் பிறர்தட்டிச் செல்வார்கள்.

 அரசியல்வாதிகளுக்கு

பெயர் புகழுக்கு களங்கம் வராத படி செயலா ற்றுவது நல்லது. உடனிருப்பவர்களே மறைமுக எதிரிகளாக மாறுவதால் எதிலும் ஈடுபட முடியாத இக்கட்டான சூழ்நிலை உண்டாகும். மக்க ளின் ஆதரவைப்பெற அதிகம் பாடுபடவேண்டி யிருக்கம். மேடைப்பேச்சுகளில் வார்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பத்திரிகை நண்பர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

விவசாயிகளுக்கு

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் புழுபூச்சிகளின் தொல்லைகளால் சற்று பாதிப்பு உண்டாகும். உடனிருக்கும் பங்காளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் வீண்வம்பு வழக்குகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் அரசு வழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் தடையின்றி கிடைக்கும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபீட்சமும் உண்டாகும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். குடும்ப விஷயங்களை தேவையின்றி பிறரிடத்தில் பகிர்ந்துகொள்வதை தவிர்க்கவும். திருமண சுபகாரியங்கள் ஆண்டின் தொடக்க த்திலேயே நடைபெறும்.

படிப்பு

கல்வியில் நல்ல கவனம் செலுத்தி எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்றுவிடுவீர்கள் பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை மகிழ்ச்சிய ளிக்கம். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையும் பொழுது போக்கும் வாழ்க்கை பாதையை மாற் றிவிடும் என்பதால் மனதை அலைபாயவிடாதிருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைக்கவும்.

ஸ்பெகுலேஷன்

லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவறில் ஆண்டின் தொடக்கத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.

ஜனவரி

நொந்து வந்தவர்களுக்கு ஆறுதல் கூறி அரவனைக்கும் உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாயும் 12ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். பேச்சில் நிதானாத்தை கடைபிடிப்பது முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத வீண்விரயங்கள் ஏற்படும் தேவையற்ற பயண ங்களை தவிர்ப்பதால் வீண் விரயங்களை குறைக்க லாம். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம 01-01-2013 பகல் 10..56 மணிமுதல்  
03-01-2013 மாலை 05.35 மணிவரை   
28-01-2013 மாலை 06.33 மணி முதல் 
31-01-2013 அதிகாலை 01.27 மணிவரை

பெப்ரவரி

நண்பர்களையும் விரோதிகளையும் சமமாக நடத்தும் உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியனும் 2ல் செவ்வாயும் சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பினையும் குடும்பத்தில் ஒற்றுமை குறைவையும் உண்டாக்கும். என்றாலும் குருபகவான் 5ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. திருமணவயதை அடைந்த வர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும் புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். பொன் பொருள் சேரும். முருகப் பெருமா னை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 25-02-2013 அதிகாலை 02.02 மணிமுதல் 27-02-2013 காலை 09.10 மணிவரை

மார்ச்

எத்தகைய இடர் வந்தாலும் எப்பொழுதும் மகிழ்ச்சியுடனேயே வாழும் உங்களுக்கு 3ல் செவ்வாயும், 5ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் பொரு ளாதார நிலை சிறப்பாக இருக்கம். ப+ர்வீக செர்துக்க ளால் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் திருப்தியளிப்பதாக இருக்கும். கொடுக்கல், வாங்க லிலும் லாபம் அமையும். அசையும் அசையா சொத்து க்களையும் வாங்குவீர்கள். தொழில் வியாபா ரத்தில் லாபங்கள் சிறப்பாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றி கொடுக்கும். சிவனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 24-03-2013 காலை 09.21 மணிமுதல் 
26-03-2013 மாலை 04.44 மணிவரை

ஏப்ரல்

பிரதிபலனை பாராது உழைத்திடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 5ல் குரு சஞ்சரிப்பதும் மாத முற்பாதிவரை 3ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பே ஆகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். ப+ர்வீக சொத்துக்களால் லாபமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலும் மேண்மை ஏற்படும். தொழில் வியாபாரத்திலும் லாபங்கள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கும் விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 20-04-2013 மாலை 04.41 மணிமுதல் 
22-04-2013 இரவு 12.22 மணிவரை

மே

வெட்டி பேச்சில் நாட்டமில்லாமல் தன் காரியத்தில் கண்ணாக செயல்படும் உங்களுக்கு 4ம் வீட்டில் சூரியனும் செவ்வாயும் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். சுகவாழ்வு பாதிப்படையும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். குரு 5ல் இருப்பதால் எதையும்.சமாளித்து விடக்கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும் முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 18-05-2013 அதிகாலை 12.11 மணிமுதல் 
20-05-2013 காலை 08.07 மணிவரை

ஜூன்

கடமையே பிரதானமாக கொண்ட உங்களுக்கு இம்மாதம் முதல் குருபகவான் 6ம் வீட்டில் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் கவனம் தேவை. குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் உண்டாகும். மாதபிற்பாதியில் சூரியன் 6ம் வீட்டில் சஞ்சாரம் செய்வ தால் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். சற்றே மந்தநிலை நிலவினாலும் பொருள் தேக்க மின்றி சமாளிக்க முடியும் சேமிப்புகள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 14-06-2013 காலை 07.48 மணிமுதல் 
16-06-2013 மாலை 03.56 மணிவரை

ஜூலை

ஏற்றக் கொண்ட லட்சியங்களை நிறைவேற்றியே தீருவது என்ற கொள்கை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6ல் சூரியனும் செவ்வாயும் சஞ்சரிப்பது ஓரளவுக்கு அனுகூலத்தை உண்டாக்கம். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.
குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். குருவை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 11-07-2013 மாலை 03.22 மணிமுதல் 
13-07-2013 இரவு 11.50 மணிவரை

ஆகஸ்ட்

எதிலும் இருவித ஆதாயங்களை பெறவிரும்பும் உங்களுக்கு 6ல் செவ்வாயும் 10ல் ராகுவும் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பே ஆகும். எந்த காரியத்திலும் துணிந்து செயல்பட முடியும். என்றாலும் அதற்கான பலன் பெரிய அளவில் இரு க்காது கணவன் மனைவியிடையே கருத்து வேறு பாடுகள் ஏற்படகூடிய காலம் என்பதால் விட்டுக் கொடு த்து நடப்பதும், வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்பு கள் உண்டாகும். சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 07-08-2013 இரவு 10.53 மணிமுதல் 
10-08-2013 காலை 07.36 மணிவரை

செப்டம்பர்

எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தன் கொள்கையிலிருந்து மாறாத உங்களுக்கு, 7ல் செவ் வாயும், 8ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். தாங்கள் நல்லதாக நினைத்து பேசும் வார்த் தைகளும் உறவினர்களுக்குள் கருத்து வேறு பாட்டினை ஏற்படுத்தி விடும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டா ளிகளால் பிரச்சனைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் 04-09-2013 காலை 06.16 மணிமுதல் 
06-09-2013 மியம் 03.55 மணிவரை

அக்டோபர்

மிகவும் சிக்கனமாக செலவுகள் செய்யும் உங்களுக்கு சூரியன் 9லும் சுக்ரன் 11லும் சஞ்சாரம் செய்வதால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பணவர வுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடை க்கப்பெறும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் தங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். வேளைபளுவும் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 01-10-2013 மதியம் 01.28 மணிமுதல் 
03-10-2013 இரவு 10.37 மணிவரை 
28-10-2013 இரவு 08.44 மணிமுதல்
31-10-2013 காலை 06.12 மணிவரை

நவம்பர்

குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்ட உங்களுக்கு 6ல் குருவும் 8ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் மறைமுக எதிர்ப்புகள் அதிக ரிக்கும். உங்கள் பலம் குறையும் தேவையற்ற வீண் வம்பு வழக்குகளும் உண்டாகும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன்வாங்க வேண்டிவரும். மற்றவ ர்களுக்கு கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாது. மாத பிற்பகுதியில் சூரியன் 11ல் சஞ்சரிக்க விருப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதி நிலவும். குருவை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 25-11-2013 காலை 04.03 மணிமுதல் 
27-11-2013 மதியம் 01.44 மணிவரை

டிசம்பர்

சிரிக்க சிரிக்க பேசும் சுபாவம் கொண்ட உங்களுக்கு 6ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியிலிருப்பதாலும் லாப ஸ்தானத்தில் சூரியன் சங்கா ரம் செய்வதாலும் கடந்த கால பிரச்சனைகள் சற்றே குறையும். பணவரவுகளில் சரளமான நிலை யிருப்பதால் குடும்பத்திலுள்ள பணத்தட்டுபாடுகள் குறையும். கடன்களும் நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் தடபுடலாக கைகூடும். பொன்பொருள் சேரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிhபாராத உயர்வினை பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். விஷ்ணுவை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 22-12-2013 பகல் 11.26 மணிமுதல் 
24-12-2013 இரவு 09.18 மணிவரை

உத்தராடம் 2,3,4ம் பாதங்கள்

காரியவாதியாகவும் புத்திசாலி யாகவும் விளங்கும் உத்தராட அன்பர்களே! இந்த ஆண்டின் முற்பாதிவரை குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிக ளிலும் வெற்றி கிட்டும். சனி பகவான் 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபா ரரீதியாக சில நெருக்கடிகள் உண்டாகும். என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செய ல்படவும்.

திருவோணம்

பணம், செல்வாக்குயாவும் உயர க்கூடிய அளவிற்கு பாடுபடும் திருவோண நேயர்களே! உங்கள் ராசியாதிபதி சனிபகவான் 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனிபகவான் உங்கள் ராசியாதிபதி என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்றுவிடுவீர்கள். திரும ண வயதை அடைந்தவர்களுக்கு ஆண்டின் தொடக்க த்திலேயே மணவாழ்க்கை அமையும். புத்திரபா க்கியமும் உண்டாகும். ப+ர்வீக சொத்துக்களாலும் லாபங்களை பெறுவீர்கள். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகளையும் சந்திப்பீர்கள்.

அதிர்ஸ்டம் அளிப்பவை
எண் - 8,5,6,17,14,15 நிறம் - நீலம், பச்சை  
கிழமை - சனி, புதன் கல் - நீலக்கல
திசை - மேற்கு தெய்வம்  - ஐயப்பன்

 பரிகாரம்

ஜென்ம ராசிக்கு 10ம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதால் சனிக்கிழமை தோறும் சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும். 28-05-2013 முதல் குருபகவான் 6ம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் குருப்ரீதி தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி நெய் தீபமேற்றுவது நல்லது.

please contact my postal adress  

Jothidamamani

MURUGUBALAMURUGAN M.A.ASTRO.

Astro Ph.D research scholar
No-117/33 Bhakthavachalam colony 1st street,  
(Near Valli Thirumanamandapam)  
Vadapalani,  
Chennai-600026  
 My Cell - 0091 - 7200163001,  9383763001
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.