Saturday, December 2, 2017

Today rasi palan - 03.12.2017


இன்றைய ராசிப்பலன் -  03.12.2017


இன்றைய  பஞ்சாங்கம்
03-12-2017, கார்த்திகை 17, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி இரவு 09.17 வரை பின்பு தேய்பிறை பிரதமை. கிருத்திகை நட்சத்திரம் காலை 09.21 வரை பின்பு ரோகிணி நட்சத்திரம் காலை 06.21 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. பௌர்ணமி விரதம். கரிநாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,





சந்தி

               
திருக்கணித கிரக நிலை
03.12.2017

ராகு
கேது

புதன் சனி
  சூரிய சுக்கி

செவ்
குரு
 


இன்றைய ராசிப்பலன் -  03.12.2017

மேஷம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப்பெறும்.
ரிஷபம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும்.  வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சேமிப்பு உயரும்.
கடகம்
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு கிடைக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். மன மகிழச்சி ஏற்படும்.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினை குறையும். தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும்.
தனுசு
இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் உடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.
மகரம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
கும்பம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.
மீனம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 தனுசு

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் 



ஒழுக்கமும், நெறிதவறாத பண்பும், பெரியவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி நேயர்களே! இதுவரை உங்கள் ஜென்ம ராசிக்கு விரயஸ்தானமான 12-ல் சஞ்சரித்த சனி வாக்கியப்படி 19-12-2017 முதல் 27-12-2020 வரை ஜென்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி தொடங்குகிறது. இதனால் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவதே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்தியளிக்கும் என்றாலும் எதிர்பாராத திடீர் செலவுகளால் வீண்விரயங்கள் ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை ஏற்படும். கணவன்- மனைவி இடையே வாக்குவாதங்கள் அதிகரித்தாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபார நிலையிலும் போட்டிகள் ஏற்பட்டு லாபங்கள் தடைப்படும். உற்றார்-உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும்.

சனி ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உங்கள் ராசியதிபதி குரு 4-10-2018 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த விதமான பிரச்சினைகளையும் சமாளித்து எதிர்நீச்சல்போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடும்.பொருளாதார நிலையில் ஓரளவுக்கு முன்னேற்றம் கொடுக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அதன்பின்பு குரு விரய ஸ்தானத்திலும், ஜென்ம ராசியிலும் சாதகமற்று சஞ்சரிக்க இருப்பதால் முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யா திருப்பது மிகவும் உத்தமம். பணவிஷயங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். 2, 8-ல் சஞ்சரிக்கும் சர்ப்ப கிரகங்களான கேது, ராகு 13-2-2019 முதல் 1, 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும், உடல் ஆரோக்கிய விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதும் உத்தமம்.

உடல் ஆரோக்கியம் 
  உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் உண்டாகி உங்களின் மனநிம்மதி குறையும். தூக்கமின்மை, சோர்வு, அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். சிலருக்கு வயிறு சம்பந்தமான பாதிப்புகளால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

குடும்பம், பொருளாதாரநிலை 
  கணவன்- மனைவியிடையே வீண்வாக்கு வாதங்கள் ஏற்படக்கூடும். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. எந்தவொரு செயலிலும் பிறர்மனதை புண்படுத்தாதிருப்பது நற்பலனை உண்டாக்கும். உற்றார்-உறவினர்களாலும் நிம்மதியற்ற சூழ்நிலையே காணப்படும். பொருளாதார நிலை சுமாராக இருப்பதால் கடன்கள் வாங்கிக் குடும்பத்தை சமாளிக்கநேரிடும். சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் சாதகப்பலன் உண்டாகும். 

கொடுக்கல்- வாங்கல்
  பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப் பின்புதான் திரும்பப் பெறமுடியும். அதேபோல் பணவிஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். கமிஷன் ஏஜென்ஸி, கான்ட்ராக்ட் போன்றவற்றில் ஓரளவுக்கு லாபத்தை அடையமுடியும். 

தொழில், வியாபாரம் 
  செய்யும் தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டிவரும். இதனால் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப்போகும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டினால் அபிவிருத்திக் குறையும். தொழிலாளர்களும் தங்கள் பங்கிற்கு வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். அவர்களுக்குத் தரவேண்டிய சம்பளத்தொகைகளில் தடைகள் ஏற்படும்.அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கத் தாமதம் உண்டாகும்.

உத்தியோகம் 
  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகி குடும்பத்தை விட்டுப்பிரிய நேரிடும். கூடுதல் பொறுப்புகள் அதிகமாகி அதிக நேரம் பணிபுரிய நேரிடுவதால் உடல்நிலை சோர்வடையும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது.

பெண்கள்
  உடல்நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கர்ப்பக் கோளாறுகள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.புத்திரவழியில் சிறுசிறு நிம்மதிக்குறைவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளால் கடன்கள் ஏற்படும்.  

அரசியல்
உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் தடைகள் ஏற்படும். மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண்செலவுகளும் உண்டாகும். புகழ், பெருமை மங்கக்கூடிய காலமாகும். எடுக்கும் காரியங்களைச் சரிவர செய்து முடிக்காதபடி இடையூறுகள் உண்டாகும்.

விவசாயிகள்
  பயிர் விளைச்சல் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. போதிய நீர் இன்மையால் பயிர்கள் கருகிப்போகும். முதலீட்டினை கடின உழைப்பால் எடுக்கமுடியும். அரசுவழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். வங்கிக்கடனை செலுத்தத் தாமத மாகும். கால்நடைகளால் எதிர்பாராத வீண்செலவுகள் ஏற்படும்.

கலைஞர்கள்
  புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் நிறைய போட்டிகள் உண்டாகும். வரவேண்டிய சம்பளத்தொகைகளும் தாமதப்படும். கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது. உடனிருப்பவர்களே  போட்டியாளர்களாக மாறுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.

மாணவ- மாணவியர்
  கல்வியில் மந்தநிலை ஏற்படக்கூடிய காலம் என்பதால் முழுஈடுபாட்டினைச் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்களைப் பெற முடியாவிட்டாலும் தேர்ச்சியடையும் அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அரசுவழியில் கிடைக்க வேண்டிய மானியத்தொகைகள் சற்றுத் தாமதப்படும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்க்கவும்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை
சனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறு பாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆண்டுக்கோளான குரு 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். பணவரவுகள் ஓரளவுக்குத் திருப்தியளிப்பதாகவே அமையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் மிகவும் கவன முடன் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது லாபம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிட்டும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கக்கூடும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை
  சனி பகவான் ஜென்ம ராசியில் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. 11-ல் சஞ்சரிக்கும் குருவும் வக்ர கதியில் சஞ்சரிப்பதால்  சுப காரிய முயற்சிகளை சற்றுத் தள்ளிவைப்பது உத்தமம். பொருளாதார நிலை ஓரளவுக்கே திருப்தியளிக்கும். கொடுக்கல்-வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல்போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. முன்கோபத்தையும், பேச்சையும் குறைத்துக்கொள்வது மிகவும் உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவு குறையும். துர்க்கையம்மனை வழிபடுவது சிறப்பு.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை
  சனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவும். எடுக்கும் முயற்சிகளில் நிறையத் தடைகளை சந்திக்க நேரிடும். செய்யும் தொழில், வியாபாரத்தில் மந்தமான நிலை நிலவும். 11-ல் சஞ்சரிக்கும் குரு 5-10-2018 முதல், ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். பணவரவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். அசையா, சொத்துவகையில் வீண்செலவுகள் ஏற்படும். ஜென்ம ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண்வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். மற்றவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை
 சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், 12-ல் குரு சஞ்சரிப்பதாலும் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதன்மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணவிஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக்கூடிய நிலை ஏற்படும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்தால் வீண்பிரச்சினை களில் மாட்டிக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எந்தவொரு காரியத்திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உங்கள் பணிகளில் கவனமாக செயல்படுவது உத்தமம்.  நவகிரக சாந்தி செய்வது கெடுதியைக் குறைக்கும்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை
  சனி பகவான் ஜென்ம ராசியில் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆரோக் கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணக் கோளாறு  உண்டாகும். கணவன்-மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதிக் குறையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் இல்லாமல் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங் களில் சற்று கவனம் தேவை. தேவையற்ற நபர்களின் சகவாசத்தால் மறை முக எதிர்ப்புகள் அதிகரிக்கும். நெருங்கியவர்களை பிரிய நேரிடும். இறை வழிபாடுகளில் மனதை ஈடுபடுத்திக் கொண்டால் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் குறையும்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை
 சனி பகவான் சர்ப்ப கிரகமான கேது சேர்க்கை பெற்று ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள் வது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் ஏற்படும். தொழில், வியா பாரத்தில் மந்தநிலைகள் நிலவும். தொழிலாளர்களிடமும், நண்பர்களி டமும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். எந்த காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உத்தயோகஸ்தர்கள் இக்காலங் களில் உயர்வுகளை எதிர்பார்க்க முடியாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது அலைச்சல்களைக் குறைக்கும். நெருங்கியவர்களை அனு சரித்துச் செல்வது குடும்பத்தில் ஒற்றுமையை உண்டாக்கும். ராசியதிபதி குரு பகவான் 12-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். சனி, குருவுக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை
 சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதாலும் உடல் நிலையில் கவனம் செலுத்த நேரிடும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். தேவையற்ற பிரச்சினை களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது உத்தமம். 12-ல் சஞ்சரிக்கும் குரு 29-10-2019 முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவன முடன் செயல்படுவது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சி களில் தடைகளுக்குப் பின் நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். உங்களால் முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்குச் செய்வது நல்லது. குரு பகவான், விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை
 சனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் குரு, கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். அசையும், அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஓரளவுக்கு மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற் கொள்வதை சற்றுத் தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். தேவையற்ற பிரச்சினை களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில், வியாபாரத்தில் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நற்பலனை உண்டாக்கும். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை
  சனி பகவான் ஜென்ம ராசியில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். குரு, கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்துச்  செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உற்றார் -உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடன் வாங்க நேரிடும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் இழுபறி நிலையே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். நவகிரக வழிபாடு செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை
  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு ஏற்றமான பலன்களைப் பெறமுடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச் சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்-உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பல பொதுநலக் காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனமுடன் செயல் பட்டால் அதன்மூலம் லாபத்தை அடையமுடியும். அசையும், அசையா சொத்துகளால் அனுகூலப் பலனை அடைவீர்கள். பொன், பொருள் சேரும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரத்தில் எதிர் நீச்சல்போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். கூட்டாளிகளால் ஓரளவுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். சனிக்குப் பரிகாரம் செய்யவும்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை
 சனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 2-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் கடந்தகால பிரச்சினைகள் குறையும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங் களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்லவரன்கள் தேடிவரும். பொன் பொருள் சேரும். குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்-வாங்கல் லாபமளிக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்துசேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் : 1, 2, 3, 9, நிறம் : மஞ்சள், பச்சை, கிழமை : வியாழன், திங்கள், கல் : புஷ்ப ராகம், திசை : வடகிழக்கு, தெய்வம் : தட்சிணாமூர்த்தி.

Friday, December 1, 2017

Vaara raasi palan (03-12-2017 to 09-12-2017)

Vaara raasi palan (03-12-2017 to 09-12-2017)

இன்றைய ராசிப்பலன் - 02.12.2017

இன்றைய ராசிப்பலன் -  02.12.2017

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
02-12-2017, கார்த்திகை 16, சனிக்கிழமை, சதுர்த்தசி திதி பின்இரவு 12.57 வரை வளர்பிறை பின்பு பௌர்ணமி. பரணி நட்சத்திரம் பகல் 12.07 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்-1. கிருத்திகை விரதம். லட்சுமி நரசிம்மருக்கு உகந்த நாள். அண்ணாமலை கார்த்திகை தீபம்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.


சந்தி



               
திருக்கணித கிரக நிலை
02.12.2017
ராகு
கேது

சனி புதன்
சூரிய சுக்கி
குரு செவ்


இன்றைய ராசிப்பலன் -  02.12.2017
மேஷம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். திருமண சுபகாரியங்கள் கைகூடும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள்.
மிதுனம்
இன்று பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த பண வரவு கிட்டும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
கடகம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். திருமண முயற்சிகளில் இருந்த மந்த நிலை நீங்கி அனுகூலப்பலன் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றலாம். வீண் செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு மன நிம்மதியை தரும்.
கன்னி
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
துலாம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும், பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் பெருகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். பெரியோர்களின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் லாபம் கிட்டும்.
மகரம்
இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். வேலையில் எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறையும். பணவரவு சுமாராக இருக்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஆடம்பர செலவுகளால் பணநெருக்கடி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்தநிலை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவால் புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகபலன் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.