Thursday, January 1, 2026

புத்தாண்டு பலன்கள் - 2026 - விருச்சிக ராசி

 

புத்தாண்டு பலன்கள் - 2026 - விருச்சிக ராசி

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001

 

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எதிலும் தைரியத்தோடு செயல்படுவது மட்டுமில்லாமல் மற்றவர்களால் உங்களை யூகிக்க முடியாத அளவிற்கு எந்த ஒரு காரியத்தையும் திறமையோடு செயல்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 3, 4-க்கு அதிபதியான சனி பகவான் வரும் 2026-ம் ஆண்டு முழுவதும் பஞ்சம ஸ்தானமான 5-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதன் காரணமாக எதிலும் மன தைரியத்தோடு செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

உங்கள் ராசிக்கு 2, 5-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 2026-ம் ஆண்டில் முதல் ஐந்து மாதங்கள் குறிப்பாக 02-06-2026 முடிய அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சாரம் செய்வதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகள் தாமதமாகும் என்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொண்டு சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. ஆண்டின் முற்பாதியில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய சுப காரிய முயற்சிகளுக்கு தேவையற்ற சுணுக்கங்கள் உண்டாகும். எது எப்படி இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவானது சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் ஆண்டின் முற்பாதியில் கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் படிப்படியான வளர்ச்சிகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக சில முதலீடுகளை செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்கி தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு சூழல் ஏற்படும். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான காரியங்களை கூட எளிதில் கையாண்டு வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

வேலைக்கு செல்பவர்களுக்கு வேலையில் சில நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உடல் ரீதியான சிறு சிறு பாதிப்புகள் காரணமாக பணியில் கவனம் செலுத்த முடியாத நிலை இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் 02-06-2026 முதல் 9-ம் வீட்டில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். குரு மாற்றத்திற்குப் பிறகு உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. உங்கள் பொருட்களுக்கு சந்தையில் சிறப்பான விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்களுக்கு இருக்கக்கூடிய போட்டி பொறாமைகள் குறைவதால் நல்ல லாபத்தை ஈட்ட கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். உங்களின் பொருளாதார நிலை ஆண்டின் பிற்பாதியில் சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகளை குறைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் நிறுவனத்தில் இணைவதால் உங்களது வேலைபளு குறைந்து மன நிம்மதி ஏற்படும்.

வேலைக்கு செல்பவர்களுக்கு படிப்படியான வளர்ச்சிகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் எதிர்பாராத பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய நபர்கள் அதிகாரியாக வருவதால் உங்களது வேலைபளு சற்று குறையக் கூடிய யோகமானது இருக்கிறது. அதிகாரியிடம் சுமூகமான உறவு இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஜூன் மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் எளிதில் கைகூடி மனமகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கணவன்- மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிப்பதன் காரணமாக கடந்த காலங்களில் இருந்து வந்த தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தற்போது குறையும். பெற்றோர்களுடைய ஆசிர்வாதம் சிறப்பாக இருப்பதால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

சிலருக்கு நவீனகரமான வாகனங்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டமானது இருக்கிறது. நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு வரும் ஆண்டில் நல்ல செய்தி கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டமானது இருக்கிறது. மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உங்களுக்கு உண்டாகும். பூர்வீக சொத்து வகையில் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. நீண்ட நாட்களாக பாகப்பிரிவினை ஆகவில்லை என்று கவலைப்பட்டவர்களுக்கு வரும் நாட்களில் பங்காளிகளுக்கு இடையே ஒரு சுமூக உறவு ஏற்பட்டு பாகப்பிரிவினை சிறப்பாக நடைபெற்று உங்களுக்கு கிடைக்க வேண்டிய அசையும் அசையா சொத்துக்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது குறைந்து ஒற்றுமையான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் ஏற்படும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த மருத்துவ செலவுகள் எல்லாம் தற்போது குறைந்து சேமிக்க கூடிய அளவிற்கு உங்களின் பொருளாதார நிலையானது மிகவும் சிறப்பாக இருக்கும்.

வரும் 2026-ம் ஆண்டில் சர்ப கிரகம், சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் வீட்டிலும் 05-12-2026 முடிய சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு பொருளாதார நிலை மிக சிறப்பாக இருந்தாலும் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தேவையில்லாத பயணங்கள் ஏற்படுவதால் அதன் மூலம் சுபச் செலவுகள் உண்டாகும். தாய் வழி உறவினர் வகையில் வீண் மனஸ்தாபம், தாய்க்கு ஆரோக்கிய பாதிப்புகள், எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். குறிப்பாக உங்களது சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் ஒரு சில தேவையற்ற இடர்பாடுகள் உண்டாகும்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சாதகமாக சஞ்சரிப்பதாலும், ஜூன் மாதத்திற்கு பிறகு குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் முதல் ஐந்து மாத காலங்கள் சற்று பொறுமையோடு இருந்து விட்டால் ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு வரும் 2026-ம் ஆண்டில் இருக்கிறது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது.

 

உடல் ஆரோக்கியம் 

சனி 5-ல் சஞ்சரிப்பதால் கடந்த கால உடம்பு பாதிப்புகள் விலகி மன நிம்மதி ஏற்படும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி, பிள்ளைகளுக்கு இருந்த ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும். இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. வெளியூர் பயணங்கள் மூலம் ஏற்றமிகுந்த பலன்கள் கிடைக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை 

உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் விலகும். இந்தாண்டு தொடக்கத்தில் சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும் ஜுன் மாதத்திற்கு பிறகு பண வரவுகள் மிக சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சியில் ஜுன் மாதத்திற்கு பிறகு முயற்சி செய்தால் எளிதில் கைகூடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியும், எதிர்பாராத பதவி உயர்வுகளையும், விரும்பிய இடமாற்றங்களையும் பெற முடியும். சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் கடினமாக பணிகளையும் எளிதில் முடித்து விடலாம். உயரதிகாரிகளிடம் இருந்த தேவையற்ற கருத்து வேறுபாடுகள் மறைந்து பணியில் மன நிம்மதி ஏற்படும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

தொழில், வியாபாரம்

உங்களுக்கு இருக்கும் மந்த நிலை முழுமையாக விலகி தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடைய முடியும். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறுவதால் நீங்கள் நினைத்தது நடக்கும்.  பொருளாதார ரீதியாக ஜுன் மாதத்திற்கு பிறகு அதிக அனுகூலங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்வர்கள் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது மூலம் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் துறைகளில் உள்ளவர்கள் வரும் நாட்களில் லாபகரமான பலனை அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை படிப்படியாக குறையும் என்றாலும் ஜுன் மாதத்திற்கு பிறகு மிகவும் அனுகூலமான பலன்களை அடைய முடியும். தற்போது உள்ள வம்பு வழக்குகள் சற்றே இழுபறி நிலையில் இருந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்

கொடுத்த வாக்குறுதிகளை தக்க சமயத்தில் நிறைவேற்றுவதால் மக்களின் ஆதரவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து நல்ல நிலையை அடைவீர்கள். மாண்புமிகு பதவிகள் உங்களை தேடி வரும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் இருந்தாலும் அதன் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த பெயர் புகழைப் பெற முடியும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிக்கான சன்மானம் ஜுன் மாதத்திற்கு பிறகு கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள், போட்டி பொறாமைகள் குறைவதால் மன அமைதி ஏற்படும். இசை துறைகளில் உள்ளவர்களும் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். சக கலைஞர்களிடம் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். பட்ட பாட்டிற்கான முழுப்பலனையும் வரும் நாட்களில் அடைய முடியும். புதிய யுக்திகளையும் கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி, மனை போன்றவற்றை வாங்க கூடிய யோகம் ஜுன் மாதத்திற்கு பிறகு உண்டாகும். பங்காளிகளிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

பெண்கள்

பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்ப தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்தால் சேமிக்க முடியும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. சுபகாரியங்களில் இருந்த தடைகள் விலகி ஜுன் மாதத்திற்கு பிறகு நல்லது நடக்கும். புத்திர வழியில் பூரிப்பினை பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு நிம்மதி குறைவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும்.

மாணவ மாணவியர்

கல்வியில் சிறப்பான முன்னேற்றங்களை அடைய முடியும். ஆரோக்கியத்துடன் இருக்க உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. உடன் பழகும் நண்பர்களிடம் கவனமாக இருப்பது உத்தமம். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் பாராட்டுதல்களையும் பரிசுகளையும் வெல்ல முடியும். கல்விக்காக பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்.

 

பரிகாரம்

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் வரும் 02.06.2026 முடிய அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியகளுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது.

ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.

கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1,2,3,9                         நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்,     கிழமை - செவ்வாய், வியாழன்

கல் - பவளம்,                      திசை - தெற்கு                   தெய்வம் - முருகன்

No comments: