புத்தாண்டு பலன்கள் - 2026
- கன்னி ராசி
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001
கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள்,
அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
நவ கிரகங்களில் புதனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும்
மதிநுட்பத்துடன் செயல்பட்டு மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கக்கூடிய நபராக இருப்பீர்கள்.
உங்களுக்கு வரும் 2026-ம் ஆண்டில் சர்ப கிரகம் சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய
ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக 05-12-2026 முடிய சஞ்சாரம் செய்வது
மிகவும் அற்புதமான அமைப்பாகும். எந்த ஒரு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உங்களின் தனித்
திறமையால் அதனை எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய பலம் உங்களுக்கு உண்டாகும்.
எதிலும் அசட்டு தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய
வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்களின்
தனித்திறமையால் நீங்கள் எதையும் சமாளித்து வளமான பலன்களை பெறுவீர்கள். வரும் நாட்களில்
கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீன படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்
கொண்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு.
உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு
உங்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகளில்
உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வருகின்ற வாய்ப்புகள் இந்த ஆண்டில் உண்டு. வெளியூர்
தொடர்புகள் மூலமாக ஆதாயத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.
வேலைக்கு செல்பவர்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு எடுத்த பணியை குறித்த
நேரத்தில் முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும்
நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். அதிகாரிகள் ஒத்துழைப்பு நன்றாக இருப்பதால் கடினமான
காரியத்தை கூட சுலபமாக செய்து முடிப்பீர்கள்.
உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 2026-ம் ஆண்டில் ஜென்ம
ராசிக்கு 10-ம் வீட்டில் 02-06-2026 முடிய சஞ்சாரம் செய்வதால் பணம் கொடுக்கல்- வாங்கல்
விஷயத்தில் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும்,
பிறருக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பதும் மிகவும் நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி
தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. அசையும், அசையா சொத்து
வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
ஆண்டின் முற்பாதியில் குரு 10-ல் இருப்பதால் சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும்
02-06-2026-க்கு பிறகு குருபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் உச்சம் பெற்று
சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பு ஆகும். இதன் காரணமாக குரு மாற்றத்திற்குப்
பிறகு குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டமானது உண்டு.
பிள்ளைகள் வழியில் மனமகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பூர்வீக சொத்து
வகையில் நீண்ட நாட்களாக பங்காளிகளுடன் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு ஒரு சுமுகத் தீர்வு
ஏற்பட்டு உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்துகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.
உங்களுடைய தனித்திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஒரு சிலர் அசையும்,
அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நீங்கள்
கண்ட கனவுக்கெல்லாம் ஆண்டின் பிற்பாதியில் கைகூடி மன நிம்மதி உண்டாகும்.
தொழில் வியாபார ரீதியாக ஜூன் மாதம் முதல் ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையக்கூடிய
அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார
உதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் முழுமையாக மறையும்.
நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். நீங்கள் எதிலும் சிறப்பாக செயல்பட்டு
வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
வேலைக்கு செல்பவர்களுக்கு தொடக்கத்தில் சில இடையூறுகள் இருந்தாலும் ஜூன் மாதம்
முதல் பணியில் மிகப்பெரிய ஒரு வளர்ச்சி இருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகளை அடையக்கூடிய
அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. சக ஊழியர்களால் இருந்து வந்த இடையூறுகள் எல்லாம் இருந்த
இடம் தெரியாமல் மறையும். உங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய நபர் அதிகாரியாக வரக்கூடிய
ஒரு வாய்ப்புகள் ஏற்படும்.
ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு 2026-ம்
ஆண்டில் சம சப்தம ஸ்தானமான 7-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் கண்டச்சனி ஆகும். கணவன்-
மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. குடும்பத்தில்
தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடல் ரீதியாக ஒரு சுணக்கமான நிலை இருந்தாலும் 6-ல்
ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். குடும்பத்தில் மனைவி வழியில்
மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் மனைவியின் ஆரோக்கியத்திற்கு சற்று முக்கியத்துவம்
தருவது மிகவும் நல்லது. ஒரு சில நேரங்களில் தன்நிலை மறந்து செயல்படக்கூடிய ஒரு சூழ்நிலை
ஏற்படலாம் என்பதால் சூழ்நிலை புரிந்து நடந்து கொண்டால் ஒரு சில ஆதாயத்தை அடைய கூடிய
வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வயது மூத்தவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய
நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும் என்பதால் பொதுவாக வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள்
செய்யாமல் இருப்பது நல்லது. வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க தேவையற்ற
இடையூறுகள் ஏற்படும்.
சனி 7-ல் சஞ்சரிக்கின்ற தருணத்தில் ஒரு சிலருக்கு எதிர்பாராத வகையில் கடன்கள்
ஏற்படலாம் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, பண
விஷயத்தில் ஒரு முடிவு எடுக்கின்ற பொழுது ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது
மிகவும் நல்லது, வண்டி, வாகனங்கள் மூலமாக ஒரு சிலருக்கு எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக்கூடிய
வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலர் பணி நிமித்தமாக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய
சூழலும் அதன் காரணமாக மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து வேறு ஒரு இடத்தில் தங்கக்கூடிய அமைப்பும்
ஏற்படும். முடிந்தவரை குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளை
தவிர்க்க முடியும். நீங்கள் சற்று நிதானத்தை கடைப்பிடித்தால் வளமான பலன்களை வரும்
2026-ம் ஆண்டில் அடைய முடியும். அதிலும் குறிப்பாக முதல் ஐந்து மாத காலங்கள் சற்று
பொறுமையோடு இருந்தால் ஜூன் மாதம் முதல் உங்கள் வாழ்வில் நல்ல ஒரு முன்னேற்றத்தை அடையக்
கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.
உடல் ஆரோக்கியம்
எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றியினை பெறுவீர்கள்.
எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் சாதகமானப்
பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் ஆரோக்கியத்தில்
அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு.
குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற மன கவலை உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை
பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சுபிட்சமான நிலை இருக்கும். உங்களது அனைத்து
தேவைகளும் பூர்த்தி ஆகும். கடந்த கால கடன்கள் குறையும். பொன், பொருள், ஆடை, ஆபரணம்
சேரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் ஜுன்
மாதத்திற்கு பிறகு கைகூடி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி
தரும் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்களால் தேவையற்ற நிம்மதி குறைவு உண்டாகும்
என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
உத்தியோகம்
உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் அதிகாரிகளின் அதரவு சிறப்பாக இருப்பதால்
பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேலும்
ஊக்கத்தை ஏற்படுத்தும். உத்தியோக ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும் ஜுன் மாதத்திற்கு
பிறகு பெரிய பதவிகள் தேடி வரும். சிறு சிறு ஆரோக்கிய பாதிப்பால் வேலையில் சரிவர கவனம்
செலுத்த முடியாமல் போகும் என்பதால் முடிந்த வரை சக ஊழியர்களை அனுசரித்து செல்வது, பெறுப்புகளை
குறைத்து கொள்வது நல்லது.
தொழில், வியாபாரம்
எடுக்கும் முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டால் ஜுன் மாதத்திற்கு பிறகு மிக
பெரிய அனுகூலங்களை பெறுவீர்கள். வேலையாட்களால் சில இடையூறுகள் நிலவினாலும் எதையும்
சமாளித்து லாபங்களை அடைவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வெளியூர்
வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் லாபகரமான பலன்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள்
கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
கொடுக்கல்- வாங்கலில் இருந்த நெருக்கடிகள் விலகி ஜுன் மாதத்திற்கு பிறகு பண
வரவுகள் திருப்திகரமாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நற்பலன்
உண்டாகும். காண்டிராக்ட், கமிஷன், ஏஜென்ஸி போன்ற துறைகளில் நல்ல லாபம் கிடைக்கும்.
போட்ட முதலீடுகளுக்கு மேலாக லாபத்தை பெற முடியும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து ஏற்றமிகு
பலன்களை அடைவீர்கள்.
அரசியல்
கட்சி பணிகளுக்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். உணவு விஷயத்தில்
சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து உடனிருப்பவர்களை
அனுசரித்து நடந்து கொண்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றிகளை பெறுவீர்கள். எதிர்பாராத
கௌரவ பதவிகள் ஜுன் மாதத்திற்கு பிறகு தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற புது புது முயற்சிகளை
கையாள்வீர்கள்.
கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்பட்டாலும் ஜுன் மாதத்திற்கு பிறகு
போட்டிகள் குறைந்து உங்களுக்கென ஒரு நிலையான இடம் கிடைக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள்
தடையின்றி வந்து சேரும். நடிப்பு துறையில் உள்ளவர்கள் மட்டுமின்றி இசை, நடனம் போன்ற
துறைகளில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உடல் அசதிகள் விலகி எதிலும்
சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகள் சற்று குறைந்து
லாபகரமான பலனை அடைவீர்கள். உங்கள் பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். அரசு
வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிட்டும். புதிய பூமி, மனை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும்.
வேலையாட்களின் செயல்கள் உங்கள் மன அமைதியை குறைக்கும். பங்காளிகளிடம் பேச்சில் நிதானமாக
இருப்பது நல்லது.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை
அனுசரித்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். பண வரவுகள் சிறப்பாக
இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஜுன் மாதத்திற்கு பிறகு நல்லது
நடக்கும். பணி புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.
மாணவ மாணவியர்
கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக மதிப்பினை பெறுவீர்கள். உடன்பயிலும்
மாணவர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள்
கிடைக்கும். நினைத்த கல்வியினை தேர்ந்தெடுத்து படிக்க முடியும். விளையாட்டு போட்டிகளில்
ஈடுபடும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி 7--ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில்
விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில்
எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது நல்லது.
கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை பயன்படுத்துவது நல்லது. எள், கடுகு, தோல் பொருட்கள்,
சமையல் பாத்திரங்கள், குடை, அடுப்பு போன்றவற்றை ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.
உங்களுக்கு வரும் 02.06.2026 முடிய குரு 10--ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை
தோறும் குரு பகவானுக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால்
அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வது,
மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,7,8 நிறம்
- பச்சை, நீலம் கிழமை - புதன், சனி
கல் - மரகத பச்சை திசை - வடக்கு தெய்வம்
- ஸ்ரீவிஷ்ணு
No comments:
Post a Comment