Thursday, January 29, 2026

Today rasi palan - 29.01.2026

 


Today rasi palan -
29.01.2026

இன்றைய ராசிப்பலன் -  29.01.2026

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-01-2026, தை 15, வியாழக்கிழமை, ஏகாதசி திதி பகல் 01.55 வரை பின்பு வளர்பிறை துவாதசி. ரோகிணி நட்சத்திரம் காலை 07.31 வரை பின்பு மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 05.29 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

சனி

 

சந்தி

குரு (வ)

ராகு

 

29.01.2026

 

சூரிய புதன் சுக்கி செவ்

கேது

 

 

  

 

 

இன்றைய ராசிப்பலன் -  29.01.2026

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். கடன் பிரச்சினைகள் குறையும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். புதிய முயற்சிகளில் அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

மிதுனம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

கடகம்

இன்று குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

சிம்மம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

கன்னி

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு மாலை 6.31 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு மாலை 6.31 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் தடை உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கடன் வாங்குவதோ கொடுப்பதோ தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.

தனுசு

இன்று எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் உத்தியோக ரீதியான பிரச்சினைகள் தீரும்.

கும்பம்

இன்று பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோக ரீதயான பயணங்களை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது.

மீனம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். லாபம் பெருகும்.

No comments: