ஒம்சரவணபவா
குரு பெயர்ச்சி பலன் - 2026 -
2027 - ரிஷப ராசி
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எதிலும் சாமர்த்தியசாலியாகவும் ஆடம்பரத்தை அதிகம் விரும்பக் கூடிய நபராகவும் இயற்கையிலேயே இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 8, 11-க்கு
அதிபதியான குரு
பகவான் இது
நாள் வரை
2-ல் சஞ்சரித்தார். தற்போது ஏற்படக்கூடிய குரு பெயர்ச்சியின் மூலமாக குரு
பகவான் திருக்கணிதப்படி வரும் 02-06-2026 முதல் 26-06-2027 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 26-05-2026 முதல் 13-06-2027 வரை) உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானம் என
வர்ணிக்கப்படக்கூடிய 3-ல் உச்சம் பெற்று சஞ்சரிக்க இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. எந்த செயலிலும் நிதானத்தோடு செயல்பட்டால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம்
அதிபதியாகி 3-ல்
சஞ்சரிப்பதால் விபரீத ராஜயோகம் என்ற
காரணத்தினால் பெரிய கெடுதிகள் எதையும் செய்ய மாட்டார். குரு 3-ல்
சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக சிறு
சிறு நெருக்கடிகள், எடுக்கும் முயற்சிகள் சுலபமாக முடிவதில் சில இடையூறுகள், உற்றார் உறவினர்களிடம் ஒற்றுமை குறைவை ஏற்படுத்தக் கூடிய ஒரு சூழல், உடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் உங்கள் ராசிக்கு தர்ம கர்மாதிபதியான சனி பகவான் தற்போது லாப
ஸ்தானமான 11-ல்
வலுவாக சஞ்சரிப்பதால் எந்த இடையூறையும் எளிதில் கையாண்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக சிறு சிறு
நெருக்கடிகள் இருந்தாலும் உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகள் தக்க நேரத்தில் வந்தடைந்து சகல
சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும். உடல்
ஆரோக்கிய ரீதியாக எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம்
உண்டாகும்.
உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு பகவான் தனது சிறப்பு பார்வையாக உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்ய இருப்பது சிறப்பான அமைப்பாகும். இதன் காரணமாக குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப
காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டமானது உண்டு. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தந்தை வழியில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர், வெளிநாடுகள் மூலமாக சாதகமான பலன்களை பெறுவீர்கள். ஆடம்பர செலவுகளை சில நேரங்களில் குறைத்துக் கொண்டு சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் எதையும் சிறப்பாக கையாண்டு போட்ட முதலை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் தாமதப்பட்டாலும் உடன்
இருப்பவர்கள் உதவியானது சிறப்பாக இருப்பதால் தொழிலை எளிதில் அபிவிருத்தி செய்ய முடியும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து நல்ல பெயர் எடுக்க முடியும். ஒரு சில
நேரங்களில் பிறருடைய உதவியை எதிர்பார்க்காமல் நீங்கள் நேரடியாக சில வேலைகள் செய்ய வேண்டிய நெருக்கடி நிலை
இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை
அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. கூட்டாளிகளின் உதவியால் எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். அதிக
முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூல பலன்களை அடைய முடியும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி
சுமை காரணமாக ஓய்வு நேரம் குறைந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்க தற்போது சில இடையூறுகள் இருந்தாலும் சற்று தாமதத்திற்கு பிறகு கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல
சந்தர்ப்பங்கள் அமையும். பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒரு
சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக தேவையற்ற தடங்கல்கள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள்.
இந்த தருணத்தில் ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமான சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு லாப
ஸ்தானமான 11-ல்
சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் குருபகவான் சாதகமற்று இருந்தாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனுகூலங்கள் தக்க
நேரத்தில் கிடைக்கக்கூடிய யோகங்கள் உண்டு. தொழில், வியாபாரம், உத்தியோக ரீதியாக உங்களுக்கு மனநிறைவு ஏற்படக்கூடிய அளவிற்கு நல்லதொரு வளர்ச்சிகளை வரும் நாட்களில் நீங்கள் அடைய
முடியும், உங்கள் ராசிக்கு தற்போது கேது பகவான் 4-ம் வீட்டிலும் ராகு பகவான் 10-ம் வீட்டிலும் வரும் 5-12-2026 முடிய சஞ்சாரம் செய்வதால் தாய் வழியில் தேவையற்ற மருத்துவ செலவுகள், அசையும், அசையா சொத்துக்களை பராமரிப்பதற்காக சுபச் செலவுகள் செய்யக்கூடிய ஒரு சூழ்நிலை, கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வு நேரம் குறையக் கூடிய ஒரு
சூழல் ஏற்படும். உங்களுடைய ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொண்டால் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
வரும் 05-12-2026-க்கு பிறகு கேது
பகவான் 3-லும்
ராகு பகவான் 9-லும் சஞ்சரிக்கின்ற பொழுது தற்போது இருக்கக்கூடிய அலைச்சல்கள் சற்று குறையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. எது எப்படி இருந்தாலும் வரும் நாட்களில் எதையும் சமாளித்து வளமான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறுப்பினர்களுடைய ஒத்துழைப்பானது உங்களுக்கு சிறப்பாக இருப்பதால் சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு ஏற்படும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்று ஏங்கியவர்களுக்கு வரும் நாட்களில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது உரிய
நேரத்தில் காப்பாற்றி நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பயணங்கள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய ஒரு
அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு இருந்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படும். புதிய வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல
நிலையினை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டாகும். உங்களுக்கு இருக்கக்கூடிய வம்பு, வழக்குகள் எல்லாம் வரும் நாட்களில் முடிவுக்கு வந்து எதிலும் நிம்மதியுடன் செயல்படக்கூடிய பலம்
உண்டாகும். குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பது ஏற்ற இறக்கமான பலனை ஏற்படுத்தக் கூடிய அமைப்பு என்றாலும் சனி
பகவான் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எல்லா வகையிலும் ஏற்ற மிகுந்த பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு.
உடல் ஆரோக்கியம்
உங்களுக்கு உடல்
ஆரோக்கியத்தில் சோர்வு, அதிக அலைச்சல் இருந்தாலும் சனி
சாதகமாக சஞ்சரிப்பதால் எதிலும் திறன்பட செயல்பட முடியும். எளிதில் உணர்ச்சி வசப்படும் நிலை,
அஜீரணக் கோளாறு ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பயணங்களில் நிதானம் தேவை.
முன்கோபத்தை குறைத்து கொண்டால் ஏற்படும் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவி இடையே ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. சில
நேரங்களில் வீண்
வாக்கு வாதங்களால் நிம்மதி குறைவு ஏற்படும். சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளை எதிர்கொள்வீர்கள். புத்திரர்களால் மகிழ்ச்சி ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேற்றி கொள்ள எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். வீடு,
மனை வாங்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு அனுகூலமானப் பலனை
பெற முடியும்.
கொடுக்கல்- வாங்கல்
உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. அசையும்- அசையா சொத்துகளால் வீண்
செலவுகள் உண்டாகும். பங்காளிகளிடையே சற்று விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல், டென்ஷன், உடல்
அசதி ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்புகளும் வெளி
வட்டார நட்புகளும் ஓரளவுக்கு நன்மையளிக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் சற்று மந்த
நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. நீங்கள் போட்ட முதலீட்டை எடுத்து லாபம் காண்பீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் சில
நேரங்களில் அலைச்சல்களை ஏற்படுத்த கூடும் என்பதால் எது
நல்லது எது
கெட்டது என்பதை ஆராய்ந்து செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகள் சற்று தாமதப்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்து நிலைமையை சாமர்த்தியமாக சமாளிக்க முடியும்.
உத்தியோகம்
பணியில் சற்று நிம்மதியான நிலை
உண்டாகும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி
உயர்வுகள் கிடைக்கும் என்றாலும்
வேலைபளு அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் வீண்
வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் உடன்
பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். வேலை நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் ஏற்படும்.
அரசியல்
மக்களின் ஆதரவையும் பெயர், புகழையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமான நேரமிது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருந்தாலும் சமுதாயத்தில் ஒரு நல்ல
நிலை, எதிர்பார்க்கும் பதவிகளை அடையும் யோகம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் சமுதாயத்தில் நல்ல நிலையை எட்ட முடியும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதால் உங்களுக்கு வேலைபளு அதிகப்படியாக இருக்கும். லாபத்தைக் காண
கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கால்
நடைகளால் வீண்
செலவுகள் ஏற்படும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். பூமி, நிலம் போன்றவற்றால் பங்காளிகளிடையே வீண் விரோதம் உண்டாகும்.
கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள் என்றாலும் இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்ள அதிக
நேரம் உழைக்க வேண்டி இருக்கும். வரவேண்டிய பணத்தொகைகள் சற்று தாமதமாக வரும். வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல்
நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் எடுத்த பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சுக வாழ்வு பாதிப்படையும் என்றாலும் ரசிகர்களின் ஆதரவு உங்களின் எல்லா துன்பங்களையும் மறக்க செய்யும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பண
வரவுகளில் தேக்க நிலை நிலவினாலும் தக்க நேரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பண விவகாரங்களில் பிறருக்கு வாக்குறுதிகள் கொடுப்பதோ பிறரிடம் எந்த பொருளையும் இரவல் வாங்குவதோ கூடாது. பணிபுரியும் பெண்களுக்கு நல்ல
வாய்ப்புகள் கிடைக்கும்.
மாணவ மாணவியர்
மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு குறையக்கூடிய காலமிது. ஞாபக
மறதி, உடல்
நலக் குறைவு போன்றவை உண்டாகும் என்றாலும் நல்ல
மதிப்பெண்களை பெறும் யோகம் ஏற்படும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைப்பது, கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர்களிடம் வீண்
வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.
குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில் 31-10-2026 முதல் 13-12-2026 வரை
குருபகவான் அதிசாரமாக 4-ல் சஞ்சரிப்பதாலும், சனி லாப
ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல
விதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். உடல்
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண வயதை
அடைந்தவர்களுக்கு சுப
காரியங்கள் கை
கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு,
வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன்கோபத்தை குறைத்து கொண்டு நிதானமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து நல்ல
வாய்ப்புகள் தேடி
வரும். திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் காண
முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். வேலைபளு குறையும்.
குரு பகவான் வக்ர கதியில் 13-12-2026 முதல் 13-04-2027 வரை
குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதால் ஓரளவு அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கேது 3-ல்,
சனி 11-ல்
சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் பைசலாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய
முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல
லாபத்தினை கொடுக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி
வரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உங்களுக்கு வரவேண்டிய ஊதிய
பாக்கிகள் கிடைத்து கடன்கள் குறையும். புதிய வேலை
தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை
வாய்ப்பு அமையும்.
பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 3-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவிப்பது, வெண்
முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, நெய்
தீபமேற்றி வழிபடுவது, குரு யந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஆடைகள், புத்தகங்கள், நெய்,
தேன் போன்றவற்றை ஏழை, எளிய
பிராமணர்களுக்கு தானம் செய்யவும்.
உங்கள் ராசிக்கு 10-ல் ராகு,
4-ல் கேது
வரும் 5-12-2026 முடிய சஞ்சரிப்பதால் ராகு
காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை
வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ
பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண
மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8 நிறம் - வெண்மை, நீலம், கிழமை - வெள்ளி, சனி
No comments:
Post a Comment