ஒம்சரவணபவா
குரு பெயர்ச்சி பலன் - 2026 -
2027 - விருச்சிக ராசி
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - பால ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எதிலும் உறுதியோடு செயல்படுவீர்கள். உங்கள் மனதில் என்ன
இருக்கிறது என்று யாராலும் எளிதில் யூகிக்க முடியாது. இதுநாள் வரை
உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரித்த குரு பகவான் தற்போது ஏற்படக்கூடிய பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 02-06-2026 முதல் 26-06-2027 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 26-05-2026 முதல் 13-06-2027 வரை) உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சாரம் செய்ய செய்ய இருப்பதால் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு இருந்த மருத்துவ செலவுகள் எல்லாம் தற்போது குறையும். பொருளாதாரம் நிலை மிக
மிகச் சிறப்பாக இருந்து கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த
நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக விலகி ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் தற்போது நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
உங்கள் ராசிக்கு 3, 4-க்கு அதிபதியான சனி பகவான் தற்போது பஞ்சம ஸ்தானமான 5-ல்
சஞ்சாரம் செய்வது உங்கள் பலத்தை அதிகரிக்க கூடிய அமைப்பாகும். உங்கள் ராசிக்கு 2, 5-க்கு
அதிபதியான குரு
பகவான் 9-ல்
உச்சம் பெற்று தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசி, 3, 5 ஆகிய
ஸ்தானங்களை பார்வை செய்வது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் சகல
சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். கடந்த கால
உடல் சோர்வுகள் மறைந்து சுறுசுறுப்பாக செயல்பட முடியும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு உடன்
இருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த
தேவையற்ற அலைச்சல்கள் எல்லாம் தற்போது குறையும். கடந்த கால வீண்
செலவுகள் குறைந்து சேமிக்க கூடிய அளவிற்கு உங்களின் பொருளாதார நிலை
மிகச்சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கடந்த கால கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவது மட்டும் இல்லாமல் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களின் நல்ல
பண்பை புரிந்து உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். ஒரு
சிலருக்கு இருந்து வந்த கோர்ட்டு, கேஸ் போன்ற பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது உங்களுக்கு தீர்ப்பு சாதகமாக வந்து மன
நிம்மதி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
தொழில் வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு சந்தையில் சிறப்பான விலை கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுப்பது மட்டுமில்லாமல் சிறப்பான லாபத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். கடந்த காலங்களில் அரசாங்க வழியில் இருந்து வந்த
தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய ஒரு சில அரசு
உத்தரவுகளை வரும் நாட்களில் பெற
முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு வேலை பளு
குறைவது மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள் எண்ணங்களை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.
வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது இருக்கிறது. கடந்த காலங்களில் பணியில் நீங்கள் சற்று உடல்
சோர்வோடு செயல்பட்டு இருந்திருப்பீர்கள். தற்போது அந்த உடல்
சோர்வெல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு, மேலதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய அதிர்ஷ்டமானது வரும் நாட்களில் உண்டு. கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் வரும் நாட்களில் விடிவுகாலம் பிறந்து உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த கால
நிலுவைத் தொகை
எல்லாம் தற்போது கிடைத்து உங்களின் பொருளாதார நிலை
மேம்படுவது மட்டுமில்லாமல் நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்ய முடியும். உடன் வேலை
செய்யக்கூடிய சக
ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பதால் எதிலும் மன
நிம்மதியுடன் பணிபுரிய முடியும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த பதவி
உயர்வுகள் தற்போது கிடைக்கக்கூடிய யோகமும் விரும்பிய இடம்
மாற்றத்தை அடையக்கூடிய அதிர்ஷ்டமும் வரும் நாட்களில் இருக்கிறது. புதிதாக வேலை
தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து வரும் நாட்களில் அழைப்பு வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.
வெளியூர், வெளிநாடுகள் மூலமாக உங்களுக்கு ஒரு அனுகூலமான செய்திகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து மூலம் அனுகூலங்கள், நீண்ட நாட்களாக தந்தை வழி
சொத்துக்கள் பாகப்பிரிவினை ஆகாமல் இருந்தால் அதில் தற்போது ஒரு நல்ல
முடிவு கிடைத்து உடன் பிறந்தவர்களிடம் சுமூக சூழ்நிலை நிலவி பாகப்பிரிவினை ஏற்பட்டு உங்களுக்கு கிடைக்க வேண்டிய அசையும், அசையா சொத்துக்கள் தற்போது கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த
சுப காரியங்கள் வரும் நாட்களில் எளிதில் கைகூடக்கூடிய ஒரு அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்று ஏங்கிய தம்பதிகளுக்கு வரும் நாட்களில் அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டமானது உண்டு. மனைவி, பிள்ளைகள் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய ஒரு
நிலையும் அவர்களது ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கக்கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு.
இந்த தருணத்தில் சர்ப கிரகம் சாயா கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு உங்கள் ராசிக்கு 4-லும்,
கேது 10-லும்
வரும் 05-12-2026 முடிய சஞ்சாரம் செய்வதால் தாய் வழியில் சின்ன சின்ன மனக்கவலை, இருப்பதை அனுபவிக்க சில
இடையூறுகள், வண்டி, வாகனம் மூலமாக சுபச் செலவுகள் ஏற்படும். குருபகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை
மிகச் சிறப்பாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் 05-12-2026-க்கு பிறகு ராகு 3-லும்
கேது 9-லும்
சஞ்சாரம் செய்ய இருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க கூடிய ஒரு உன்னதமான அமைப்பாகும். ராகு-
கேது பெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு இருக்கக்கூடிய அலைச்சல், டென்ஷன்கள் குறைந்து மனதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலைபளு காரணமாக உடல் அசதி
ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அஜீரண கோளாறு, வயிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கடந்த காலங்களில் இருந்த வீண் மருத்துவ செலவுகள் தற்போது குறையும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும். இருக்கும் கடன்கள் படிப்படியாக குறையும். தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தடபுடலாக நிறைவேறி மகிழ்ச்சியை உண்டாகும். புத்திர வழியில் சிறுசிறு தேவையற்ற கவலைகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை கவனமாக கையாள்வது நல்லது. பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். நெருங்கியவர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் அவர்களால் அனுகூலங்களை பெற
முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். பணம்
கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்கள் தக்க நேரத்தில் திரும்பி வரும். கடந்த கால
வம்பு வழக்குகளில் சாதகப்பலன் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல
லாபத்தை அடைய
முடியும்.
தொழில் வியாபாரம்
தொழிலில் இருந்த போட்டிகள் குறைந்து நல்ல வளர்ச்சி கிடைக்கும். உங்களின் கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் சமுதாயத்தில் கௌரவமான நிலையை அடைய
முடியும். தொழிலை விரிவு செய்வதற்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் சற்று அலைச்சல் டென்ஷன்கள் அதிகரித்தாலும் வர
வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் ஆதாயத்தை அடைய
முடியும்.
உத்தியோகம்
பணியில் வேலைபளு அதிகரித்தாலும் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடனிருப்பர்களின் ஒத்துழைப்புகளும் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். பணி
நிமித்தமாக இடமாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களும் தகுந்த வாய்ப்பினை பெறுவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். உழைப்பிற்கான ஊதியத்தை பெற முடியும்.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு இது வரை இருந்த நெருக்கடிகள் குறைந்து சமுதாயத்தில் நல்ல
நிலையை அடைய
முடியும். பதவிக்கோ, மக்களின் ஆதரவுக்கோ குறை இருக்காது என்றாலும் கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். அலைச்சல் காரணமாக ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். பொருளாதார நிலை
சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் திறம்பட செய்து முடிக்க முடியும்.
விவசாயிகள்
விளைச்சல் சிறப்பாக இருந்து நல்ல
லாபத்தை அடைய
முடியும். பொருளாதார மிகுதியால் பூமி,
மனை வாங்குவது, புதிய நவீன
கருவிகள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலப் பலன் உண்டாகும். பங்காளிகளிடையே இருந்த பிரச்சினைகள் யாவும் விலகி ஒற்றுமை பலப்படும். வம்பு, வழக்குகள் முடிவுக்கு வந்து நிம்மதி ஏற்படும். கால்நடைகள் மூலம் ஆதயாங்களை அடைவீர்கள்.
கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடிய வாய்ப்புகள் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சில நேரங்களில் போட்டிகளும், பணவரவுகளில் நெருக்கடிகளும் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீடு, கார்
போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பண
வரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிப்புகள் பெருகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.
மாணவ மாணவியர்
மாணவர்கள் கல்வியில் நல்ல மேன்மையினை அடைய முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவித் தொகைகள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் இருந்த மந்த
நிலை, தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை போன்ற யாவும் விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதனைகளை செய்வீர்கள்.
குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில் 31-10-2026 முதல் 13-12-2026 வரை
குருபகவான் அதிசாரமாக 10-ல் சஞ்சரித்தாலும், 5-ல் சனி
சஞ்சாரம் செய்வதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிகளை பெறும் ஆற்றல் உண்டாகும். சர்ப
கிரகங்கள் 4, 10-ல்
சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை
ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில
கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். வேலையாட்களால் இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து மனநிம்மதி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் தொழில் ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். உங்களுக்கு வேலைபளு இருந்தாலும் கௌரவ பதவிகளை அடையும் வாய்ப்பு உண்டு. சக
ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். பூமி மனை
வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது.
குரு பகவான் வக்ர கதியில் 13-12-2026 முதல் 13-04-2027 வரை
குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் சனி
5-ல் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். ராகு 3-ல்
சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையும் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்பதால் நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் கருத்து வேறுப்பாடுகள் குறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நவீன
பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில
தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். அசையும், அசையா சொத்துகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப்பலனை பெறுவார்கள். தற்போது உள்ள வாய்ப்புகளை பயன் படுத்தி கொண்டால் அடைய
வேண்டிய இலக்கை அடைய முடியும். தொழிலில் நல்ல
லாபங்களை அடைய
முடியும் என்றாலும் வேலையாட்களால் வீண்
நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை
தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். சக
ஊழியர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருக்கவும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும் என்பதால் நிதானமாக இருப்பது நல்லது.
பரிகாரம்
விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 4-ல் ராகு,
10-ல் கேது
சஞ்சரிப்பதால் ராகு
காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை
வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ
பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண
மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9 நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை - செவ்வாய், வியாழன்
No comments:
Post a Comment